Friday, July 02, 2004

மீண்டும் சந்திப்போம்.

வணக்கம் நண்பர்களே!
ஆண்டு விடுமுறைக்கு இந்தியா செல்கிறேன். இணையத்துக்கும் என் இருப்பிடத்துக்கும் இருபது மைல் தொலைவு. முக்கியமான மடல்கள் மட்டுமே பார்க்க முடியும் படிக்கமுடியும்.

ஆகையால் இன்றிலிருந்து ஒரு முப்பது நாட்களுக்கு எனது வலைக்குறிப்பில் பெரிதாய் ஏதும் செய்திகள் இருக்காது என்பதை வருத்தமுடன் தெரிவித்துக்கொள்கிறேன். (இப்போ மட்டும் எழுதிக் கிழிக்கிறியாக்கும்!?).

முக்கியமான விஷயங்கள் இருப்பின் வலைப்பூ வழி ஆஜராகிறேன். எனது பக்கத்திற்கு வந்து பழைய கஞ்சியை வேண்டுமானால் பார்த்து விட்டுச்செல்லுங்கள்.:)

அடிக்கடி வந்து பார்த்து எவரும் ஏமாற வேண்டாம் என்பதால் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.

வாய்ப்புகளுக்கு நன்றி.
வாழ்க வளமுடன்.
மீண்டும் சந்திப்போம்.

எம்.கே.குமார்.