Thursday, November 15, 2018

சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2018_ எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களுடன்



"எழுத்தாளன் என்பவன் வேறு வரலாற்றாசிரியன் என்பவன் வேறு
வரலாறு ஆள்வோராலும் ஆளப்படுவோராலும் எழுதப்படுவதுண்டு
உண்மையான வரலாறு இதன் இரண்டுக்கும் இடையில் இருக்கலாம்.
சங்க இலக்கிய முழுவதுமே இயற்கையை பிரதானமாக பேசியது.
களவும் காவலும் ஒருநாணயத்தின் இருபக்கங்கள், களவாளியையே காவலாளியாக போடுவது என்பது இன்றும் பின்பற்றப்படும் ஒரு பயிற்சி.
இலக்கியம் வரலாறல்ல. வரலாற்றின் தடங்களில் ஒரு இலக்கியப்படைப்பு காலை ஊன்றி வேறொரு தளத்தைத் தேடுகிறது.
தமிழக வரலாற்றைப் பேசும் வரலாற்றுநாவல்கள் மிகக்குறைவு. பிரபஞ்சனின் நாவல்களுக்குப்பிறகு,  ஆழிசூழ் உலகு, சோளகர்தொட்டி போன்ற சமூகநாவல்கள் தற்போது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன. காவல்கோட்டம் நாவலிலும் வேள்பாரியிலும் பல வரலாற்றுச்சன்றுகள் உள்ளன. தமிழரின் அறிவுச்செல்வத்தையும் இயற்கைபோற்றுதலையும் வேள்பாரியில் வைத்துள்ளேன். விகடனில் எழுதினாலும் வேள்பாரி காவல்கோட்டத்தைவிட ஒருபடி மேலான உழைப்பைக் கோரியுள்ளது, மனதுக்கு நெருக்கமாகவும் வந்திருக்கிறது.
இந்தியாவை முழுக்க பிரிட்டிஷ் ஆண்டாலும் மதுரையின் ஒட்டுமொத்தகாவலை ஒரு கிராமம் கட்டுக்குள் வைத்திருப்பதைக் கருவாக எடுத்தே காவல்கோட்டம் உருவானது. மூவேந்தர்களாலும் வெல்லமுடியாத ஒருவன் தன் தேரை ஒரு முல்லைக்கொடிக்குக் கொடுத்துச்சென்றான் என்றால் அவனுடைய இயற்கையின் மீதான நேசம் எத்தகையதாக இருக்கும் என்ற சிந்தனையே வீரநாயகன் வேள்பாரி உருவாகக் காரணம். தமிழில் கிராபிக் நாவல்கள் கடும் பொருள் முதலீட்டை முன்தேடுவதால் அது இப்போதைக்கு பரவலாகவில்லை." 

சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் மிகச்சிறப்பாக நடைபெற்ற இன்றைய கலந்துரையாடலில் சாகித்ய அகாடமி விருது பெற்ற திரு. சு வெங்கடேசன் அவர்கள் பகிர்ந்துகொண்டதிலிருந்து...

சிங்கப்பூர் இலக்கிய விருது (மெரிட்) 2018



இந்தக்கணத்தை எனக்களித்த இயற்கைக்கும் தமிழுக்கும் நன்றி. இந்த இலக்கியவிருதை வாசகர் வட்டத்திற்கும், சிங்கப்பூரின் முன்னோடி எழுத்தாளர்களுக்கும் குறிப்பாக பரணன், .நா மொய்தீன், முல்லைவாணன், நா.கோவிந்தசாமி போன்றோருக்கும் அர்ப்பணிக்கிறேன்.

வாழ்வியலுக்காகத் தினமும் ஓடவேண்டிய ஒரு பொழுதில் ஏதாவது எழுதவேண்டும் வாசிக்கவேண்டும் என்ற உந்துதலை எனக்கு அளித்தது வாசகர்வட்டமும் இதுபோன்ற மூத்த முன்னோடி எழுத்தாளர்களுமே. குறிப்பாக வாசகர் வட்டத்தின் முன்னோடிகள் ரெ.பாண்டியன், ரமேஷ் சுப்ரமணியன் போன்றோரும் தற்போதைய வாசகர் வட்ட நண்பர்கள் சித்ரா ரமேஷ், ஷா நவாஸ் உள்ளிட்டோருக்கும் என் அன்பு நன்றி.

எழுத்தாளர் ஜெயமோகன் மானசீக உள எழுச்சி தரும் என் ஆசான்களில் ஒருவர். அவருக்கும், சிங்கப்பூரில் வரும் படைப்புகளைப் படித்து அவ்வப்போது விமர்சனங்களைத்தரும் திரு மாலன் அவர்களுக்கும் நன்றி.

இப்புத்தகத்தைப் பதிப்பித்தயாவரும்பதிப்பக நண்பர்கள் ஜீவ கரிகாலன், கண்ணதாசன் உள்ளிட்டோர்க்கும் இப்புத்தகத்துக்கு முன்னுரை வழங்கிய மலேசியாவின் எழுத்தாளர் .நவீன், சிங்கப்பூரின் சிவானந்தம் நீலகண்டன் ஆகியோருக்கும் நன்றி.

என் சுகதுக்கங்களில் பங்குகொண்ட, என்னைச்செதுக்கிய குடும்பத்தினர், நண்பர்கள்  ஆகியோருக்கும் என் அன்பு.

சிங்கப்பூர் புத்தக வாரியம், கலைகள் மன்றம், தேசிய நூலகம்  தமிழ்முரசு, வசந்தம் அனைவருக்கும் நன்றி!!

எம்.கே.குமார்

At this beautiful moment of my life, I stand here with all gratitude to the Mighty Nature and my language Tamil.

I am dedicating this award to Vaasagar Vattam, the important reason and inspiration behind my writing especially my friends and fellow writers, R.Pandiyan, Ramesh Subramanian, Chitra Ramesh, Sha Navas and all.


My heartfelt thanks to Yavarum publishers for publishing my book, and to Mr Naveen and Sivanandam for acknowledging my book.


My sincere thanks to Author Jayamohan who taught me to love writing and reviewing and to Mr Maalan, who reads and reviews my writings regularly.

My gratitude and pranams to my family and the men and women who were with me through good and bad times to support and chisel me, my dear friends, I thank you all.


And finally The library board, The book house, Arts house, Vasantham, Tamil Murasu, and all those who are striving for the growth of Tamil in Singapore.


Thank you for this award. 


This will inspire me into wider reading, to look more into Singapore “s life and literature, and picture it in my future writing.


Thank you, love you all.


MK