Tuesday, September 16, 2003



ஒரு கணம்...............

எம்.கே.குமார்


என்னை விட்டுவிடுங்கள். நான் இப்போதுதான் ஒரு சந்தோசத்தின் ஒளிப்பிரதியாக
என்னுள் ஊடுருவிக்கொண்டிருக்கிறேன். இது வெற்றிட சந்தோசம் அல்ல. வெம்மையி
ன் அருகினிலிருந்து அதன் அருகாமைக்குள் தெறித்து விழுந்து உணர்ந்து உருகி
உருவாகும் சந்தோசம். சுற்றியெரியும் தீப்பிளம்புகளினூடே என்னைச்சுற்றி ஒரு குளி
ர்மழையாய் தென்றலாய் என் இப்போதைய எண்ணங்கள் தீப்பிளம்புகளின் அருகாமை
வெம்மையை உணர வைக்கும்போது எனக்குள் உருவாகும் சந்தோசம். மனிதர்களின்
கையில் படாத ஏதோ ஒரு மலரின் மீது எனக்குள் ஏற்படும் ஒரு வகை மோகத்தின்
மெல்லிய உணர்ச்சிக்குவியலின் உருவம் தரும் சந்தோசம். நான் எவ்வளவோ முயன்றும்
எட்டமுடியாத தேன் கூடுகளின் உடல்களால் ஆன மலைஉச்சியின் கால் கட்டை வி
ரலை தொட்டு நக்கிப்பார்க்கும் சந்தோசம். எனக்கு இப்போது இது கிடைத்துவிட்டது.

கண்களை மூடிக்கொண்டு கண்மண் தெரியாமல் ஓடுகிறேன். ஓடிக்களிக்கிறேன். ஓட
ஓடத்தான் நான் எனக்குள் என்னைக்காண்கிறேன். என் பலம் எனக்குத்தெரிகிறது.
வெற்றுடம்பாக நான் அமர்ந்திருக்கும்போது எனக்கு என்னைத்தெரிவதில்லை. இப்படி
வேகமாக இலக்கில்லாமல் எதையாவது கண்ணுக்குத்தெரியாத எதையாவது தேடி
ஓடும்போதுதான் என் சக்தி எனக்குத்தெரிகிறது. என் ஆன்மாவின் ஆட்சி தெரிகி
றது. அதன் நீட்சி அதன் காலகட்டங்களின் மூப்பு, அதன் ஏமாற்றம், மூச்சிவிட்டு மூச்சிவி
ட்டே இளைத்துப்போன அதன் சுருங்கிப்போன உடலின் பலம் அத்தனையும் எனக்குத்தெரி
கிறது. சத்தியமாக இதில் கட்டுப்பாடு இல்லை. அதுதான் என் கால்கள் இவ்வளவு
வேகமாக ஓடுகின்றன. கட்டுப்பாடற்ற தெளிவில்லாத தீர்க்கமில்லாத நம்பிக்கையில்லாத
ஒன்றுமேயில்லாத ஒன்றைத்தேடி ஓடுவதால்தான் நான் இப்போது உயிருடன்
இருப்பதாக அதுவும் சந்தோசமாக இருப்பதாக உணர்ந்துகொண்டு ஓடிக்கொண்டிருக்கி
றேன். தெய்வாதீனமாக நான் திரும்பி வந்தால் என்னை நான் பார்த்துக்கொள்ளமுடியும்.

இது வெறும் கால்களின் ஓட்டமல்ல. காற்றின் ஓட்டம். காற்றுக்கு கால் கடுக்காது. கால்
கடுக்காமல் காற்று ஓடும் ஓட்டம் இது. எண்ணத்தை விட வேகமான ஓட்டம். என் சக்தி
கள் வெறுமனே எண்ணமாக திண்ணம், தெளிவில்லாமல் சமூக சித்தாந்தங்களிலும்
சமூக அவலங்களிலும் உடலியல் மனவியல் குறைபாடுகளிலும் சிக்கி சீரழிந்து, ஓடும்
வண்டிகளின் டயர்களைப்போல தேய்ந்து போவதைவிட இது எவ்வளவோ பரவாயி
ல்லை. இதற்கு அப்படியெல்லாம் அவசியமில்லை. இது கைதேர்ந்த சாவுக்காரனின்
ஓட்டம். எத்தனையோமுறை இங்குள்ள அத்தனை சீவராசிகளுடனும் வாழ்ந்து வாழ்ந்து
பார்த்துவிட்டு சந்தோசம் கொண்டு செத்துப்போனவனின் ஓட்டம். செத்தவனின் அனுபவ
ஓட்டம். சாகப்போகும்போதும் எப்படியாவது அதைப்பார்த்துவிடவேண்டுமே என குருதி
க்குழாய்கள் இழுத்துப்பிடித்து வளைத்துக்கொண்டு ஒற்றைக்காலில் நிற்கும் தவத்தின்
ஓட்டம்.

மிக நீண்ட மணல் படுகை போல அது. நான் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறேன். ஆச்சரி
யம் என் கால்கள் மண்ணில் புதையவில்லை. மாறாக வழ வழவென்று என் கைகளிலும்
கால்களிலும் ஆங்காங்கு தெறித்து விழும் மணல்சாறு. மண் குடித்த மழை நீர். மண்ணிடமி
ருந்து அதன் சாறாக இப்போது வெளிவருகிறது. அதன் பாதிப்பு பட்ட இடத்திலெல்லாம்
மண் வாசனை. ரத்தம் கலந்த மண் வாசனை. ரத்தம் உள்ளி
ருக்கலாம். அது அவ்வப்போது வந்து எட்டிப்பார்த்துவிட்டு வெளியே போகலாம்.
ஆங்காங்கே பூக்கள். அதிசயம். ரத்த வாடையில்லாத பூக்கள். ஆனால் ரத்தக்கலரில். சி
ல இடங்களில் வேறு வேறு நிறங்களில். பிறந்த மண் வேறாயிருக்கலாம். சின்னதாயும் பெரி
யதாயும் பூக்கள். வாசனையுள்ள பூக்கள். காம வாசனை. சில நேரங்களில் உதிர
வாசனை. மூத்திர வாசனை.

ஓடிக்கொண்டேயிருக்கிறேன். பூக்களை பார்த்தபடி. பூக்களை முகர்ந்த படி. பூக்களை
பறித்தபடி. எத்தனை விதமான பூக்கள். பூஞ்சோலைக்குள் நெடுந்தொலைவு வந்துவிட்ட
உணர்வு. ஆனால் நெடுந்தொலைவு அல்ல அது. மெல்ல களைப்படைவது போல
வரும் ஒரு சின்ன இயலாமை. ஏதாவது ஒன்று ஆழப்புதைந்து நம்மிடையே ஏற்படுத்தும்
இயலாமை. நாம் காண்பதெல்லாம் அதுவாகி
உணர்வதெல்லாம் அதுவாகி அனைத்துமே அதுவாகி ஆனால் தூரத்தில் ஒளிந்துகொள்ளும்
ஒரு பொருளின் மீது ஏற்படும் ஆற்றாமை கலந்த இயலாமை. ஆனால் மீண்டும் வந்து வி
ட்டது வெறி. விட்டுவிடுவேனா? கண்வரை வந்துவிட்டாய். காட்சியும் தந்துவிட்டாய். இனி
மேல் விட்டுவிட்டால் எப்படி நான் நான் ஆவேன்?

வெறி வந்துவிட்டது. மூச்சின் வேகம் கடலலைகளைப்போல பயங்கரமானதாக இருக்கி
றது. ஒவ்வொரு மூச்சிக்காற்றின் உள்- வெளி பயணத்தின்போதும் அவை
காற்றுமண்டலத்தையே பயப்படுத்தும், அதை முற்றிலுமாக உறிஞ்சி அழித்துவிடக்கூடிய பெரி
ய பூதம் ஒன்று மூச்சு விடுவது போல் இருக்கிறது. காற்று இயந்திரத்தின் உறுப்புகள்
உச்சவெறியில் இயங்குகின்றன. காற்று முடிந்து போய் விடக்கூடாதே என்ற கவலையி
ல் அவற்றைச்சேமித்து வைக்கும் அல்லது அனுபவித்து முடித்துவிடும் உக்கிர வெறியோடு
உடல் போராடிக்கொண்டிருக்கிறது. ஆனால் ஏதோ ஒன்றை இழந்துகொண்டிருக்கிறது
என்பது அதற்கு தெரியவில்லை. தெரிந்தாலும் அது கவலைப்படுவதாக இருக்கவில்லை.
உடலுக்குள் ஆங்காங்கே வெளி காணமுடியா தவிப்புகள். சந்தோச நடுக்கங்கள். கம்பளி
ப்பூச்சியின் கால்கள் நகரும் குறுகுறுப்பு சத்தங்கள். ஒற்றைக்கம்பளிப்பூச்சி அல்ல. ஓராயி
ரம் கம்பளிப்பூச்சிகள். உள்ளுக்குள்ளே நச நசவென்று ஊருகின்றன. கம்பளிப்பூச்சிகள்
ஊரும்போது ஏற்படும் அரிப்பு போல என் மனதுக்குள் ஏதோ உருவாகிறது. அதன் கழி
வுகளின் துர் நாற்றம் வேறு எனக்குள் பூக்களின் மணம் போல சுகமாக இறங்குகிறது.

அந்த சோலையின் மென்மையான மணற்பரப்புகளின் மேலே வேகமாக நடக்கிறேன்.
ஆங்காங்கே பூக்களும் இலை தழைகளும் என்னை மென்மையாக வழிமறிக்கி
ன்றன. அவற்றுக்குள் கைகளை விட்டு விலக்கி கொஞ்சம் வழித்து விட்டுவிட்டு நீவியும் வி
ட்டுவிட்டு நடக்கிறேன். நடக்கிறேன்? ஆம். நடக்கிறேன். ஓடி வந்த நான் இப்போது
நடக்கிறேன். அயர்ந்து போய் விட்டேனா? இல்லை இல்லை. அப்படியெல்லாம் எனக்கு
தெரியவில்லை. இப்போது தான் நான் பூஞ்சோலைக்குள் நுழைய ஆரம்பித்திருக்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே வேகமாக ஓடினால் அவ்வளவுதான். எதுவும் மிஞ்சாது. எல்லாமே
சீக்கிரம் முடிந்து வெறும் கைவளையம் மட்டுமே மிஞ்சும். அவற்றை வைத்து எதுவும்
செய்ய முடியாது. நிதானம் வேண்டும். அதுதான் வெற்றிக்கு வழி. முழுதாக
வாழ்க்கையை அனுபவிப்பதற்கான வழி.

அந்த பூ மற்றும் இலை தழைகளின் மேற்பரப்பில் மனதை சுகமாக வருடும் வேர்வை
நாற்றங்கள். கால்கள் வேகமாக அவற்றுக்குள் நுழைகின்றன. காணாத எதையோ
காணப்போவது போல பரபரப்பாக இருக்கிறது உள்ளும் புறமும் எனது இயக்கம். குனி
ந்து முகத்தை வைத்து முகர்ந்து பார்க்கிறேன். முகத்தால் வருடுகிறேன். முகத்தின் மயி
ர்க்கால்கள் அவற்றில் பட்டு சரசரவென்ற சிறிய ஒலியும் அதன்கூட ஒருவித பூக்கள் நெளி
யும் தவிப்பு கலந்த அந்த பரவல் காட்சியும் கண்ணுக்குள் விழுகிறது. உள்ளே மணற்பரப்பி
ன் இதமான சூடு. நெருப்புக்குள் இருந்து நெருப்புக்கு வந்த சூடு. ஆங்காங்கு
மேடுகளும் பள்ளங்களும். அபாயகரமான வளைவுகளும். திக்கித்திணறி தட்டுத்தடுமாறி
நடக்கிறேன். தவழ்கிறேன். ஏறுகிறேன். படர்கிறேன். சறுக்கிக்கொண்டு வழுக்கி
க்கொண்டு அதலபாதாளத்திற்குள் விழுகிறேன். மீண்டும் மீண்டும் மேலே வருகிறேன்.
எப்படியாவது ஜெயித்து விடவேண்டும் என்ற நெஞ்சின் முழக்கம். எதுவுமே இல்லாமல் நி
ராயுதபாணியாக நின்று ஜெயிப்பதில் இருக்கும் சந்தோசம் எப்படிப்பட்டது!
கையாலாகாதனத்தைக்கட்டி இழுத்து இருட்டு அறைக்குள் போட்டு விட்டு
கால்களால் அதை தள்ளி மிதித்து விட்டு எம்பிக்குதித்து மேலே வருகிறேன். கையில் சிறிய
குன்று போல வளர்ந்திருந்த அந்த பூக்குன்றை பிடித்துக்கொண்டு முன்னேறுகிறேன்.
பூக்கள் மிக மெதுவாய் இருக்கின்றன. என் கனவில் அடிக்கடி வந்து போகும் அவளின்
மார்பகங்கள் போல. அதைப்பற்றி நினைக்கும்போது என் சிறுவயதும்
என் அன்னையும் ஞாபகத்திற்கு வருகின்றன.

மெல்ல அந்த வாசம் வருகிறது. வந்துவிட்டது. எல்லாம் கைகூடி வந்துவிட்டது. மூடிய
கதவின் சாவித்துவாரத்தின் வழியே வரும் வெளிச்சம் போன்று வருகிறது அந்த வாசம்.
நான் எங்கோ அருகில் இருந்து கலவரப்பட்டு சிதிலப்பட்டு மோகத்தின் இறுக்கமான கயிற்றி
ன் முடிச்சுகளிலிருந்து தட்டுத்தடுமாறி சிக்கி சீரழிந்து வெளியே வர முயன்று
தோற்றுப்போன கணத்தின் வெம்மையான வாசனை அது. வாசனை மட்டும் வரவி
ல்லை. அதன் தாக்கமும் வருகிறது. என்னைக்கட்டிப்போட்டு என் கைகால்களை முடக்கி
ப்போட்டு என் இடது கையை எனக்குள்ளே சிறை வைத்துப்போன அந்த மூர்க்கமான
மோகத்தின் தாக்கம் வருகிறது. எப்போதாவது என்னை அந்தச்சிறையில் இருந்து விடுவி
த்து எனக்கு தற்காலிக மாயத்தீர்வு அளித்த அந்த வனமோஹினி இந்த தருணத்தில் ஓ
வென்ற பேரிரைச்சலோடு ஓடிப்போகிறாள். ஆனால் அது இப்போது வெற்றிடம் ஆகிவிடவி
ல்லை. வாசனை நிரம்பிய வாசனைகளால் நிரப்பப்பட்ட ரதியின் இருப்பிடமாகி விட்டது.

ஆயிரக்கணக்கான ரதிகள். கண்டதும் கேட்டதுமாய், பார்த்ததும் படித்ததுமாய். ஆயி
ரக்கணக்கான பூக்கள். ஆயிரக்கணக்கான வாசனைகள். அந்த அழகிய பூஞ்சோலையி
ன் கால்மாட்டுப்பக்கத்தில் ஒரு ஆறு போன்ற பெரிய பிளவு. தானே தோன்றிய பிளவாய்
இருக்கவேண்டும் அது. தானே உருவான வழியாய் இருக்க வேண்டும் அது. யாரும்
வெட்டி வைத்ததில்லை. உள்ளுக்குள் புகுந்து நுழைந்து எழுந்து வரலாமா என்று சி
ன்னதாய் ஒரு ஆசை. நான் உள்ளே சென்ற நேரம் அது மூடிக்கொண்டால்? உள்ளே
புதைகுழிகள் ஏதேனும் இருந்தால்.? எப்போதும் பூக்களின் அருகில் ஒரு ஆபத்து
இருக்கும். முட்களாக இல்லை இதுபோன்ற புதைகுழிகளாக. அதுவும் இது
பார்க்கும்போதே இப்படி வசீகரமாக என்னை தனக்குள் இழுத்துக்கொள்ளும் தந்திரம்
போல இருக்கிறதே.

ஆற்றில் எப்போதாவதுதான் தண்ணீர் வரும் போல. ஆனால் வெள்ளமாய். சிலநேரங்களி
ல் சாக்கடை நாற்றம் நிரம்பிய அசுத்தமான நீராய். ஆனால் தற்போதைய அந்த வாசம் மி
கவும் இனிமையாக இருக்கிறது. மனதுக்கு ரம்மியமானதாக. முங்கி குளிக்க ஆசைப்படுகி
றேன். ஆனால் தண்ணீர் இல்லை. மணல் தடயங்கள். வரி வரியாய். நி
றையப்பேர் அதன் வழியே நடந்துபோயிருக்கலாம். அல்லது உள்ளே முங்கிக்குளித்துவி
ட்டு போயிருக்கலாம். அந்த தடயங்கள் கிடைக்காது. இது அது தோன்றிய காலத்திலி
ருந்தே தோன்றிய வரி.

வாசனையில் என்னைத்தொலைத்து நிற்கிறேன்.

உடம்புக்குள் ஒவ்வொரு உயிர்த்திசுவும் இயங்குகிறது. செத்துக்கிடந்தவைகளுக்கு உயிர்
வந்ததைப்போல இயங்குகிறது. எப்படியாவது இந்த சந்தர்ப்பத்திலாவது முழுமையாக
சந்தோசம் வந்துவிட வேண்டும் பெற்றுவிடவேண்டும் என்பது போல இயங்குகிறது. ஏதோ
ஒரு அவசரத்தில் ஏதோ ஒரு முழுமைபெறாத கணத்தில் முழுமை பெறாத அவற்றின் செவி
ட்டுத்தனமான வெற்றுக்கூச்சல்கள் இன்னும் அவற்றை உசுப்பேற்றி விடுகின்றன.
மொத்தமும் ஒரே குறிக்கோளோடு ஆனால் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுக்காத
போட்டியோடு அவை இயங்குகின்றன. அவற்றின் செறிவு மிகுந்த பகுதிகளில் அதன்
தாக்கம் தெளிவாக தெரிகிறது.

உற்சாக மிகுதியின் துரத்தல்கள். தேவையின் அங்கீகாரங்கள். சிறுமையாய் இருந்த மனதி
ன் வெற்றிடத்தில் முழுமையாய் ஒரு ஆக்கம்.

வேகமாக நடக்க ஆரம்பித்த நான் ஓடுகிறேன்...........தீவிரமாக ஓடுகிறேன். இடமும்
வலமும் அசைந்து வளைந்து ஓடுகிறேன். மேலும் கீழும் மூச்சு வாங்குகிறது. மூச்சுக் காற்றி
ன் சூடு மொத்த காற்று மண்டலத்தையும் சூடாக்குவது போல காற்று கீழிருந்து
மேலேபோகிறது. மேலே இருந்து புது காற்று கீழே வருகிறது. மனதுக்குள் கம்பளிப்பூச்சி
கள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்கின்றன. இதோ வளர்ந்து விட்டன. இறக்கைகள்
வந்துவிட்டது...ஆஹா...பறக்கப்போகிறது. கம்பளிப்பூச்சிகள் வண்ணத்துப்பூச்சிகளாக
மாறிக்கொண்டே வருகின்றன. பறக்கப்போவது எனக்கு விளங்கி விட்டது. பறக்கப்போகி
றது முழு மனதோடு. இந்த வாசம் முடிந்து வாசனை அனுபவித்து வளைவுகள் ரசித்து
பூக்கள் ரசித்து ஆற்றின் பிளவுகள் ரசித்து மொத்தமாக மூச்சு வாங்கிய கம்பளிப்பூச்சி
பட்டாம்பூச்சியாக பறக்கப்போகிறது.

கதவைத்தட்டும் சத்தம் கேட்டது. கதவு திறந்துதான் இருந்தது. நீட்டியிருந்த கால்களை
மடக்கி செங்குத்தாக வைத்துக்கொண்டு போர்வையால் போர்த்திக்கொண்டேன்.
கையை அங்கிருந்து எடுக்கவில்லை. கண்களையும் திறக்கவில்லை.


No comments:

Post a Comment