வணக்கம் நண்பர்களே! நீண்ட நாட்களுக்குப்பிறகு மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஒரு மாதம் கழித்து வந்தபொழுதில் இங்கே நிறைய படைப்புகளையும் பதிவுகளையும் காணமுடிகிறது. தமிழ்மணம் காசி அவர்கள், புதிதாய்த் தொடங்கப்பட்ட வலைப்பதிவுகளில் நம்பிக்கை அளிக்கும் இருபது வலைப்பதிவுகளைக் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூரிலிருந்து கலக்கிக்கொண்டிருக்கும் நண்பர்கள் அல்வாசிட்டி விஜய், பாலுமணிமாறன் சிங்கப்பூர்-மலேசிய நண்பர் மூர்த்தி, அண்மைய சிங்கப்பூர் விருந்தினர் துளசியக்கா ஆகியோருடைய பதிவுகளும் அவற்றில் இடம்பிடித்திருந்தது கண்டு மெத்த மகிழ்ச்சி. வாழ்த்துகள். அதிலும் நண்பர் பாலு மணிமாறன் நான் இந்தியாவிற்குச்செல்லும் பொழுதுதான் ஒரு பதிவு போட்டிருக்கிறேன், படித்துவிட்டுச்சொல்லுங்கள் என்று முதல் பதிவைப் போட்டுவிட்டிருந்தார். ஒருமாதம் கழித்து வந்து பார்க்கும் பொழுது 'குட்டியும் குழுவானுமாய், கவர்ச்சிநடிகையும் கனவுமாய், அத்தையும் ·பிகருமாய்' ஏகப்பட்ட பதிவுகள்! கலக்கியிருக்கிறார் மனிதர்.
ஊரிலிருந்து வந்தவுடன் எல்லோருக்கும் தோன்றுவதைப்போலத்தான் எனக்கும் இரண்டு விஷயங்கள் தோன்றின. ஒன்று ஊரில் பார்த்த நிறைய விஷயங்களை எழுதவேண்டும் என்பது! இரண்டாவது அதற்கு நேர்மாறாய் வேலைப்பளு அழுத்துவது! :-)
ஊரிலிருந்து வந்தவுடன் சிங்கப்பூர் இணைய நண்பர்கள் கூட்டம் துளசியக்காவின் வருகையை ஒட்டி நடப்பதாய் ஒரு இனிப்பான செய்தி கேட்டு அதிலும் கலந்துகொண்டேன். இரண்டாவது கூட்டம் இது. இக்கூட்டத்தின் உருப்படியான சில விஷயங்கள் விரைவில் சிங்கப்பூரிலிருந்து இணைய உலகில் பிரகாசிக்கலாம். ஏற்பாடுகள் நடக்கின்றன.
துளசியக்கா, ஜெயந்திசங்கரி கொண்டு வந்த கேசரியைப்போல மிகவும் இனிமையானவராக இருந்தார். முதல்கூட்டத்தைத் தவறவிட்ட மானஸசென் ரமேஷ் இதில் நிறை(வாக)ய பேசினார். 'குப்பை-குப்பை மட்டுமல்ல' அன்பு உருப்படியாய் ஒரு காரியம் செய்தார். அவள் விகடன் சமையல் முதல் ஆங்கிலம்-தமிழ் அகராதி, கம்பராமாயணம், தினம் ஒரு கவிதை, புதிய திரைப்பாடல்கள், 'நிலாமுகத்து' நயனதாரா, 'காதல்'-சந்தியா வரை நிறைய விஷயங்களை ஒரு குறுந்தகட்டில் போட்டு அடைத்துக் கொடுத்தார், வாழ்க நீர் ஜெம்குப்பை!
'முக்கிய பேச்சுகள்' இருந்தால் மட்டுமே வருவதாக அறிவித்திருந்த திரு. மா.கோவிந்தராஜ் (நிறைய யாஹ¥ குழுமங்கள் வைத்திருக்கிறார்) 'தமிழா' என்றொரு புத்தகத்தை 10 டாலருக்கு பரிமாறினார். புத்தகத்தை வாங்கியவர்கள் நேற்று கூட முணுமுணுத்தார்கள். நல்ல புத்தகம் போலும். முன்னுரையும் நன்றியுரையும் மட்டும் பல பக்கங்களுக்கு எழுதப்பட்டிருந்ததைக் கண்டு எனக்கு பேராச்சரியம் எற்பட்டது. இப்போதேல்லாம் யார் இப்படி தமக்கு உதவியவரை நன்றியோடு நினைவு கூறுகிறார்கள். 'தமிழா'வின் ஆசிரியர் தமிழாசிரியர். திரு.சிவசாமி அவர்கள் மாகோ வின் நண்பர் போலும். மாகோ அவர்கள் இன்னொரு 'முக்கிய வேலை' இருப்பதாக உடனே கிளம்பிவிட்டார்.
எழுத்தாளர் ரம்யாநாகேஸ்வரன், எழுத்தாளர்-கவிஞர் பனசை நடராஜன் ஆகியோர் முதன்முறையாக கலந்துகொண்டார்கள். எழுத்தாளர் துளசிகோபால் அவர்களின் மகளான கவிஞர் மதுமிதா (ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதியிருக்கிறாராம்!) தமிழைக் 'கொன்சம் கொன்சம்' மட்டுமே புரிந்துகொள்வாராம். ஆங்கிலத்தில் 'ஸ்வீட்டாக' பேசுகிறார்.
ஒரு இனிய மாலைப்பொழுதாக நிறைவாக இருந்தது அது! ஊரிலிருந்து வந்த 10 நாட்களுக்குள் 8 நாட்கள் வேலை போக இரு நாளில் ஒரு இனிய மாலை இது. இன்னும் ஒரு இனிய மாலை நேற்று அமைந்தது. அடுத்தது அது!
எம்.கே.குமார்.
//'முக்கிய பேச்சுகள்' இருந்தால் மட்டுமே வருவதாக அறிவித்திருந்த திரு. மா.கோவிந்தராஜ் (நிறைய யாஹ¥ குழுமங்கள் வைத்திருக்கிறார்) 'தமிழா' என்றொரு புத்தகத்தை 10 டாலருக்கு பரிமாறினார். புத்தகத்தை வாங்கியவர்கள் நேற்று கூட முணுமுணுத்தார்கள். நல்ல புத்தகம் போலும். முன்னுரையும் நன்றியுரையும் மட்டும் பல பக்கங்களுக்கு எழுதப்பட்டிருந்ததைக் கண்டு எனக்கு பேராச்சரியம் எற்பட்டது. இப்போதேல்லாம் யார் இப்படி தமக்கு உதவியவரை நன்றியோடு நினைவு கூறுகிறார்கள். 'தமிழா'வின் ஆசிரியர் தமிழாசிரியர். திரு.சிவசாமி அவர்கள் மாகோ வின் நண்பர் போலும். மாகோ அவர்கள் இன்னொரு 'முக்கிய வேலை' இருப்பதாக உடனே கிளம்பிவிட்டார்.//
ReplyDeleteநீ நடத்து கொமாரு.... நீ நடத்து... :-) :-) வாய் விட்டு சிரிச்சேன். காலையில இருந்த வயித்து நோய் விட்டு போனது....
«øÅ¡ º¢ðÊÔõ, '«ÕôÒ'째¡ð¨¼Ôõ §Àº¢ì¸¢ÈÐ "¦¸¡ýºõ- ¦¸¡ýºõ" Ò÷ÔÈÁ¡òâ þÕìÌ :)))
ReplyDeleteநீங்கள் அனைவரும் சொல்வதில் இருந்து சிவசாமி, மா.கோ துணையுடன் வந்து புத்த்கம் விற்றுவிட்டார் என்பது தெரிகிறது. புத்த்கம் பிடிக்காவிட்டால், எல்லோரும் வாங்க வேண்டுமென்பதில்லையே. அதை அவரிடமே தயக்கமில்லாமல் சொல்லி இருக்கலாமே. வாங்கி விட்டு இப்படி வந்து ஒவ்வொருவரது வலைப்பதிவிலும் "சூசகமாக" சொல்கிறேன் பேர்வழி என்று அசிங்கப்படுத்த தேவை இல்லை. படிக்கும்போது கஷ்டமாக இருக்கிறது நண்பா...!! "புத்த்கம் வேண்டாம். பிடிக்கவில்லை" என்று முகத்துக்கெதிரே சொல்லி இருந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும். அடுத்தவருக்கும் படிப்பினையாய் இருந்திருக்கும்.
ReplyDeleteஎன்னமோ போங்க..:-)
யோவ்..மூக்கு,
ReplyDelete//நீங்கள் அனைவரும் சொல்வதில் இருந்து சிவசாமி, மா.கோ துணையுடன் வந்து புத்த்கம் விற்றுவிட்டார் என்பது தெரிகிறது.//
நீரு சொல்றது ரொம்பச்சரி! இப்புடித்தப்புத்தப்பா 'தெரியற மாதிரி' ஏன்யா எழுதுறாங்க இவங்க? இதுல சூசகம் வேறயாம்.
அதெல்லாம் ஒண்ணுமில்லைவெ. நீரு பாட்டுக்கு கஷ்டப்பட்டு, நெஞ்சடைச்சு சாப்பிடாம கெடக்காதீரும். வளர்ற புள்ள பாரும்!
நீரு வேணுமின்னா பாரும், இன்னொருதரம் அந்த புத்தகத்தைக் கொண்டு வந்து என்னிடம் கொடுக்கட்டும், உமக்காகவாச்சும் நா வேண்டாம்ன்னு சொல்லிடுறேன், என்ன சரிதானாவெ.
மத்தபடி நீரு நெனச்சது தப்புவெ. :-)
எம்.கே.குமார்.
பின்னூட்டங்களுக்கு நன்றி விஜய், ரமேஷ்!
ReplyDeleteஎம்.கே.குமார்
Vaanga Kumar !
ReplyDeleteI keep checking your blog for new posts ... at last .... at last ... a new posting !!!!
Waiting to read about Mr.Ramesh's presentation in Woodlands Library !