நூன் ஷோ!
டைரக்டர் பாபு யோகேஸ்வரன் யார்? இது நீங்கள் பதில் சொல்லவேண்டிய கேள்வி! நான் சொல்லப்போவது, டைரக்டர் பாபு யோகேஸ்வரனைப் பாராட்டுவதற்கு பத்து காரணங்கள். அவை யாவன?
1. மிகப்பெரிய பூதாகரமான சமூகப் பிரச்சனைகளையெல்லாம் படத்தின் கமர்சியல் தன்மையில் எவ்வித குறைபாடும் இல்லாமல் எளிதாக ஆனால் காட்டமாகச் சொல்ல முடியும் என்று நிரூபித்ததற்காக.!
2. 'கரணம் தப்பினால் கொட்டகை காலி; தியேட்டர் காலி!' என்றாகிவிடக்கூடிய கதையை தனது முதல் படமாய்க்கொண்டதற்காக!
3. சிறுபான்மை இன கதாநாயகனை பெரும்பாலும் (அதுவும் அவன் புரட்சிக்காரனாக இருந்தால் முற்றிலும்) ஏற்றுக்கொள்ளாத தமிழ் சினிமா ரசிக உலகில் அப்படி இயக்கி, வெற்றியும் பெற முடியும் என்று சாதித்ததற்காக!
4. விரலை வைத்தே கண்ணைக் குத்துவது போல பிரச்சனைகளின் முளைகளை அதனதன் பிறப்பிடத்தில் வைத்தே தோலுரித்ததற்காக!
5. எதற்கும், எத்தகைய விமர்சனங்களுக்கும் அஞ்சாமல் எல்லா மதங்களின் உள்ளழகையும் வசனங்களின் மூலம் எடுத்துச்சொல்ல முனைந்ததற்காக!
6. சேரிக்கும் (எப்போது) தேர் வரும் என்ற (புகழ்பெற்ற) கவிதையை காட்சியாக்கி காட்டும் தீரத்தை வெளிப்படுத்தியதற்காக!
7. படத்தில் கவர்ச்சியையோ ஆபாசத்தையோ எங்கும் பெரிதாக நம்பாமல் கதையையும் அதன் அழகான நகர்த்தலையும் நம்பியதற்காக!
8. இனிமையான பாடல்களை யுவனிடம் இருந்து பெற்றதற்காக! அப்படியே அவற்றை ஒளியோவியமாக்கியதற்காக! அப்படியே ஒரு ஹோம்லி ஹீரோயினை அறிமுகப்படுத்தியதற்காக(வும்)! (சம்பந்தப்பட்டவர்களுக்கும் சாரும்!)
9. படத்தின் பெரும்பாலான ஓட்டைகளை மறைக்க முயன்றளவு முயற்சி செய்தது தெரிந்தாலும் அதையெல்லாம் மீறி ஒரு கருத்து சொல்லும் படத்தை இயக்கியதற்காக!
10. கை நிறைய ரிஸ்க்குகள் இருந்தாலும் அவற்றைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இதை வெற்றிப்படமாக்கமுடியும் என்று இறங்கியதற்காக! (மக்களுக்கும் நன்றி!)
பாபு யோகேஸ்வரன், வெற்றிகரமான "தாஸ்" படத்தின் இயக்குனர். சமுதாயத்தின் புரையோடிக்கிடக்கும் பழக்கவழக்கங்களான ஜாதி ஆதிக்கம், காதல் எதிர்ப்பு, இந்து முஸ்லீம் மதவெறி, குண்டு கலாச்சாரம், அரசு அலுவலர்களின் ஒரு சார்பு நிலை என அத்தனை பிரச்சனைகளையும் கண் எதிரே காலில் உதைத்து கோல் வளைக்குள் விளாசியிருக்கும் இளைஞர்!
ஆங்காங்கு பெரிய ஓட்டைகள், உயிரை வதைக்கவேண்டிய காட்சிகளில் உயிரூட்ட குறைபாடுகள் என்பதையெல்லாம் மறந்து இவருக்கு கண்டிப்பாக கை கொடுக்கலாம்! வாழ்த்துகள்!
****************************
ஈவ்னிங் ஷோ!
ஈவ்னிங் ஷோவில் என்னைக் கவர்ந்த படம் பிரியசகி. தாமதமாக பார்க்க நேர்ந்தாலும் மிகவும் ரசிக்க வைத்தது என்னை!
படத்தில் மாதவனும் சதாவும் ஏதோ நம் எதிர் ·பிளாட்டில் குடியிருக்கும் குடும்பத்தினரைப்போல நமக்குள்ளே ஒன்றிப்போகிறார்கள்.
படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் மட்டுமே ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வு வரும் அளவுக்கு மிக இயல்பாக ஒரு கணவன்- மனைவி- குடும்பக் கதை. அருமையாக படமாக்கிய இன்னொரு (தொட்டாச்சிணுங்கி) இயக்குனர் கே.எஸ்.அதியமான் திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை!
எம்.கே.
ivvalavuthan ungal rasanayaaaa??
ReplyDeleteபாபு யோகேஷ்வரன் குங்குமத்திலோ, குமுதத்திலோ வெகுநாள் பத்திரிக்கையாளராக பணிபுரிந்து வந்தார் தெரியுமா..??
ReplyDeleteஇன்னொரு டைரக்டர்..??!!
வாங்க அனானிமஸ், உங்களை மாதிரில்லாம் இல்லை, சராசரி ரசிகன் நான். பின்னூட்டத்திற்கு நன்றி.
ReplyDeleteநன்றி சுந்தர். பத்திரிகையில் பணீபுரிந்தவரா பாபு யோகேஸ்வரன்? ஓஹோ! தகவலுக்கு நன்றி.
//இன்னொரு டைரக்டர்// இல்லை. ஒரு டைரக்டர் தான்.
எம்.கே.
பாபு யோகேஸ்வரனின் மாமனார் நம்ம கலகக்காரர் அ.மார்க்ஸ். அ.மா.வின் மகள் ஞானபாரதியைத்தான் பா.யோ. திருமணம் செய்து கொண்டுள்ளார். இது சம்மந்தமாக மற்றொரு முக்கியமான தகவல்: பாபு யோகேஸ்வரன் நம்ம எஸ்.வி.ஆரைப் போல ஒரு கவுண்டர். இவருடைய அம்மா இறந்து விடவே பா.யோ.வின் அப்பா தன் நிலத்தில் வேலைபார்த்து வந்த தலித் பெண் ஒருவரை இரண்டாம் தாரமாக்கிக் கொண்டார். இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் மகன் அப்பாவைப் பிரிந்து சென்னை வந்து விட்டார். ஆனால் இந்த விவரமெல்லாம் தெரியாத சில அபிஷ்டுக்களிடம் நம்ம கலகக்காரர் அ.மா. தன் மருமகன் ஒரு தலித் என்று கொஞ்ச காலம் ரீல் விட்டு வந்த கதையெல்லாம் நமக்கு எதுக்குங்கோ!
ReplyDelete