Tuesday, November 22, 2005

வாழ்க பீகார் மக்கள்!

அப்பாடா..! விடிவெள்ளி வந்துவிட்டது. மீண்டும் பலகோடிகளை விழலுக்கிறைக்காமல் பீகாரிச்சகோதரசகோதரிகள் இம்முறை ஒரு முடிவோடு வெளிவந்திருப்பது மழை கொண்ட மேட்ச் சோகத்தையும் மீறி மனதுக்குள் நிம்மதியையும் மகிழ்வையும் தருகிறது.

15 ஆண்டுகால குடும்ப ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது பீகார் மக்களின் 'அதிரடி ஷாட்' என்றால் பலமான 'ராஷ்டிரிய காங்கிரஸ இடதுசார' கூட்டணியும் 'உடனடி (பஸ்வான்) முஸ்லீக் லீக்'காக ஒரு கட்சியும் தேர்தலில் குதித்திருந்த நெருக்கடித்தருணத்தில் அதைக் கொண்டுவந்தது அவர்களின் 'லவ்லி ஷாட்'.

தேர்தலில் நிற்காத நிதிஷ் குமார் கையில் பூமாலை, தனிமெஜாரிட்டியில் கிடைத்திருக்கிறது. வெற்றிமாலையைச் சூட்டி பீகாரை அழகுபடுத்துவாரா இல்லை குறுக்குசால் ஓட்டிவிடுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

'பொய்யானது, பணம் விளையாடிவிட்டது, வன்முறை தாண்டவமாடிவிட்டது, மக்கள் விலைபோய்விட்டனர்' என்றெல்லாம் மு.தனமாய்ப் பேசாமல் 'மக்களின் முடிவை மனதார ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்' என்றுசொன்ன லாலுவுக்கும் 'இத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் தலைவர் பதவியிலிருந்து விலகுவதில் பின்வாங்கப்போவதில்லை' என்ற அத்வாணிஜீக்கும் இந்நேரத்தில் நன்றிசொல்லத்தோன்றுவது ஏனோ ஆச்சரியமாயிருக்கிறது.

தலித் முஸ்லீம்களுக்கு ஏதோ சலுகைகள் தரப்போவதாய்ச் சொன்னாராம் நிதிஷ், பீகார் மக்களுக்கு எப்படியோ நல்லது நடக்கவேண்டும். நடந்தால் சரி!

எம்.கே.

No comments:

Post a Comment