Monday, November 12, 2007

அழகிய தமிழ்மகன் - அபத்தம்!

ஒரு சண்டையோடும் சாகசத்தோடும் கதாநாயகன் அறிமுகமாகவேண்டும் என்பதற்காய் அமைக்கப்பட்டிருக்கும் ஆரம்பக் காட்சிகள் அபத்தம்.

சிரிப்பு வரவைக்கவேண்டும் என்பதற்காய் ஷகீலா அவர்களை வீட்டுக்கார முதலாளியாய் வைத்து
அடிக்கப்படும் பரங்கிமலை ஜோதி டயலாக்குகள் அபத்தம்.

சின்ன ஸ்டிக்கர் மச்சம் கூட வைக்காது டுயூவல் கேரக்டர் பண்ணியிருக்கும் விஜய் - (ஸ்டைல் செய்வதற்காய் ரஜினி, சிவாஜி படங்களின் படிகளை ஏறியிறங்கியிருப்பதைத் தவிர ஏனுங்கண்ணா, இன்னும் கொஞ்சம் யோசிக்கக்கூடாதா? சும்மா, எவ்வளவோ பண்ணுறோம், இது பண்ண மாட்டோமான்னு எங்களை ஏமாத்துறீங்களே!

இரட்டையரில் ஒருவரைக் கண்டுபிடிக்க நடத்தப்படுபவை ஆண்டாண்டுகால அபத்தங்கள்.

ஸ்ரேயா- பின்பக்கத்தை ஆட்டுவதற்காய் மட்டுமே ஒரு ஹீரோயின். நல்லா பண்ணுறீங்கம்மா!

இசை யாரோ ஏஆர் ரகுமானாம்? புதுசா?

முன்கூட்டியறியும் வித்தை - எடிட்டர் ஆண்டனிக்கும் பின்னணி இசையாளருக்கும் ஒரு ஷொட்டு.

புதுக்கவிதைத்தாத்தா - அழகிய தமிழ்மகன் பட்டம் தருகிறார்! நியாயமா இது மு.மேத்தா?

எப்போது வில்லனாவாரோ - என பணக்கார கதாநாயகியின் தந்தை! நல்லவேளை!

நமீதா - இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து சென்னை மாநகர காவல்துறையில் மாட்டாமல் இருந்தால் சரி.

பொன்மகள் வந்தாள் - ஏஆர் ரகுமான் மீது எரிச்சலாய் வருகிறது.

கதாநாயகன் - நாயகி, தோளோடு தோள் உரசினதும் - ஒரு டூயட்! திருந்தவே மாட்டீங்களாடா?

திருவான்மியூர் குளத்துல ராதா விட்ட குடத்தை மைசூர்ல திரும்ப எடுத்தது பாரதிராஜா காலம். காட்சிகளின் தொடர்ச்சியில் முதிர்ச்சியில்லை. அறிமுக இயக்குனர் அறிந்துகொள்ளவும்.

எப்படா படத்தை முடிப்பீங்கன்னு - ஒரு குரல்

கதாநாயகி - மருத்துவமனைக் கட்டிலில் - கற்பு வசனம் - ஞப்பா, விடுங்கடா!

வசனகர்த்தா பரதன் - பாராட்டுகள் உங்களுக்கு!
இயக்குனர் பரதன் - பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!


அன்புடன்,
எம்.கே.

9 comments:

  1. Viswa Nathan.D,
    Chennai, Tamil Nadu, India.

    Dear Kumar,

    Very Good Review.Two SMS's That i Have received about This Film Are Very Funny:

    (1) A T M = Avoid This Movie

    (2) In The First Half, Vijay Waste's: In The Second Half, Vijay's (Dual Role) Waste's.

    Thanks & Regards,

    Viswa Nathan.D

    ReplyDelete
  2. dude, everything is ok, except the ARR part - pls think before writing abt the best musical talent in India......he is a genius unparallelled and pls dig at him, only when u have valid claim......

    ReplyDelete
  3. வணக்கம் குமார்

    அருமையான விமர்சனம்.

    எங்களுடைய 3 மணி நேரத்தை நீங்கள் சேமித்து கொடுத்ததிற்கு நன்றிகள் பல...

    மயிலாடுதுறை சிவா...

    ReplyDelete
  4. Fine review. Hope the tamil cinema will wake up and reflect the live of people.

    ReplyDelete
  5. //பொன்மகள் வந்தாள் - ஏஆர் ரகுமான் மீது எரிச்சலாய் வருகிறது.//

    இதை தவிர மற்றவை எல்லாம் எனக்கும் அபத்தமாகத்தான் படுகிறது... ஏனேதெரியவில்லை இந்தப்பாடலை முணுமுணுக்க தொடங்கியாச்சு...

    ReplyDelete
  6. சன் தொலைக்காட்சி பேட்டியிலே ஏ.ஆர் ரஹ்மான் சொல்லிவிட்டார் பளிச்சென்று, மொத்தம் 6 குத்துப்பாட்டுகள் கேட்டார்கள் மனதில்லாமல் செய்து கொடுத்தேன் என்று.

    ReplyDelete
  7. வாசித்து, கருத்து தெரிவித்த திருவாளர்கள் விஸ்வநாதன், சுதிர்,சிவா,நிமல், பூவண்ணன் மற்றும் டாக்டர் எம்.கே.எம் ஆகியோருக்கு எனது நன்றி.

    அன்பின் சுதிர், உங்களது ஆதங்கத்திற்கு திரு.பூவண்ணன் அவர்களின் கருத்து பொருந்தலாம் என நினைக்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  8. //புதுக்கவிதைத்தாத்தா - அழகிய தமிழ்மகன் பட்டம் தருகிறார்! நியாயமா இது மு.மேத்தா?///



    தாத்தாவிற்கு கேட்டிருக்க வேண்டும் குமார்
    அதான் டிசம்பர் மாத துவக்கத்தில் வருகிறாராமே
    நேரிலே கேட்டா போச்சு

    ReplyDelete
  9. nice review, from what I have seen/heard even Vijay's fans think that the movie is average. Some other reviews listed and rated here: ATM-Tamil Movie Review. At the the momen the movie is rate 6.2/10.

    ReplyDelete