Wednesday, February 04, 2009

சிங்கப்பூரில் சகோதரன் முத்துக்குமாருக்கு அஞ்சலி!

நின்னை எரித்து நீ எழுதிய கடிதம் கண்டேன் - என்ன சொல்வது என் சகோதரா,
என்னை எரிக்கிறது அக்கடிதம் - இதயத்தை ரணமாக்கி!

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சிங்கப்பூரில் அமைதி உண்ணாவிரதம் அல்லது மவுன அஞ்சலிக்கு ஏற்பாடு செய்வது குறித்தான சட்டப்பூர்வ அனுமதி நடவடிக்கைகள் பெறுவது குறித்து விவரங்களைச் சேகரித்துக்கொண்டிருந்தேன்.

இந்நிலையில், உயிராயிதம் ஏந்திய சகோதரன் முத்துக்குமாருக்கு நினைவஞ்சலிக்கூட்டம், சிங்கப்பூரின் "பேசுவதற்கான இடத்தில்" (Speaker's Corner) இன்று மாலை ஏழு மணிக்கு நடைபெறுகிறது என தாமதமாகவே அறியவந்தேன்.

அரசிடம் அனுமதி வாங்கி அஞ்சலிக்கூட்டம் நடத்திய நண்பர்களுக்கு எனது நன்றிகள். தகவலறிந்த நண்பர்கள் தயவுசெய்து உடன் பகிர்ந்துகொள்ள வேண்டிக்கொள்கிறேன்.

எம்.கே.குமார்
04/03/09

3 comments:

  1. சிங்கப்பூரில் பேச்சாளர் சதுக்கம் (ஸ்பீக்கர் சதுக்கம்-சைனா டவன்
    அருகில்) 04.02.09 அன்று மாலை 7.00 மணியளவில் தொடங்கி 10.00 மணியளவில் ஈழ
    விடுதலைக்காக உயிர்நீத்த கொளத்தூர் கு. முத்துகுமரனுக்கு மதிப்பிற்குரிய
    தமிழ்மரையான் தலைமையில் அஞ்சலிக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் பலர்
    கலந்துகொண்டு அவர்களின் கருத்துக்களை வெளியிட்டனர்.

    இவன்
    குட்டி பரமன்

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி நண்பரே.

    இதுபோன்ற ஏற்பாடுகளை தயவுசெய்து தாமதிக்காமல் உடனே பகிர்ந்துகொள்ளவும்.

    நிறைய நண்பர்கள் கலந்துகொள்வார்கள்.


    அன்பன்
    எம்.கே.குமார்

    ReplyDelete
  3. தாமதமாகத் தான் தகவல் கிடைத்தது.

    வர இயலாமல் போனது வருத்தம் அளிக்கிறது.

    ReplyDelete