Wednesday, September 01, 2010

வல்லினம் இதழுக்கு அனுப்பிய கடிதம்

பின்வரும் கடிதம் வல்லினம் இதழுக்கு அனுப்பப்பட்டது. என்ன காரணத்தாலோ அது அவ்விதழில் இடம்பெறாததால் இங்கு பதிவு செய்கிறேன்.
****************

சென்ற மாத வல்லினத்தில் வந்த லதா அவர்களின் “ம‌ண்ணின்றி வ‌ள‌ரும் ம‌ர‌ங்க‌ளும் சிங்கை இல‌க்கிய‌மும்” கட்டுரையில், நான் 2005ஆம் ஆண்டில் “தமிழோவியம்” இணைய இதழில் எழுதிய “மாஜுலா சிங்கப்புரா” தொடர்கட்டுரையின் ஒரு பகுதியில் “மக்கள் செயல் கட்சி 1959ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதாக எழுதியிருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.

தவறுக்கு வருந்துகிறேன். அதே கட்டுரையில் 12-ஆம் பத்தியில் அது சரியாக சொல்லப்பட்டிருக்கிறது. [1]

சிங்கப்பூரின் வரலாறு குறித்த தகவல் தேடலில் எனது இத்தொடர் காணக்கிடைப்பது எனக்கு மகிழ்ச்சியே; எனினும், சிங்கப்பூரில் ஆவணப்படுத்துதலின் மேலோட்டத்தன்மையை நானும் உணர்ந்திருப்பதால், (காண்க: [2] ஆவணப்படுத்தும் ஆபத்தும் அதுகுறித்த எனது ஆதங்கமும்) அத்தொடர் ஆவணமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும்போது தவறுகள் இருப்பின் திருத்தப்பட்டு தகுந்த தரவுகளுடன் அளிக்க முயற்சிக்கப்படும்.

நன்றி.

எம்.கே.குமார்

1.http://www.tamiloviam.com/unicode/search.asp?ss=?????%20???????????
2.http://yemkaykumar.blogspot.com/2010/06/blog-post.html


லதா அவர்களின் கட்டுரை http://www.vallinam.com.my/issue20/essay3.html

No comments:

Post a Comment