>>>>
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில்
முதல் இடம் பெற்ற மாணவி சரண்யா பேட்டி
டாக்டருக்கு படிக்க விரும்புகிறேன்
புதுக்கோட்டை, மே.28-
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் புதுக்கோட்டை மாவட் டத்தில் முதல் இடம் பெற்ற திருப்புனவாசல் மாணவி எம்.சரண்யா டாக்டருக்கு படிக்க விரும்புவதாக தெரிவித் தார்.
முதல் மாணவி
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் ஆவுடையார்கோவில் அருகே உள்ள திருப்புன வாசல் ராமகிருஷ்ண வித் யாலயா மேல் நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி எம்.சரண்யா 486 மார்க்கு பெற்று புதுக்கோட்டை மாவட்டத்திலேயே முதலா வதாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
அவர் பெற்ற மார்க்கு விவரம் பாடம் வாரியாக வருமாறு:-
தமிழ்_96,
ஆங்கிலம்_94,
கணிதம்_99,
அறிவியல்_99,
சமூக அறிவியல்_98,
மொத்தம்_486
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்தது பற்றி மாணவி எம்.சரண்யா `தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:-
எனது தாயார் பெயர் ராணி, விவசாய கூலி வேலை செய்து வருகிறார். தந்தை க.மணிமுத்து திருப்பூரில் உள்ள ஆவின் பால் பூத்தில் வேலை செய்து வருகிறார். நான் மாநிலத்தில் முதலிடம் பெறுவேன் என்று நினைத்து இருந்தேன். ஆனால் மாவட் டத்தில் முதலிடம் கிடைத்து இருக்கிறது. பள்ளியில் நான் தொடர்ந்து முதல் மார்க்கு பெற்று வந்தேன். நான் பிளஸ்-1ல் சேர்ந்து தொடர்ந்து படித்து டாக்ட ராகி கிராமமக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித் தார்.
2-வது இடம்
ஆலங்குடி அருகே உள்ள வேங்கிட குள
>>>>>>>>>>>>>>>>>
நன்றி தினத்தந்தி.
சைட் இப்ப பாக்க லட்சணமா இருக்கு!
ReplyDeleteவாங்க சார்!
ReplyDeleteசொல்லிட்டீங்கல்ல! இனி பாருங்க!
நன்றி சார்.
எம்.கே.குமார்.