ரயில்வே அமைச்சரான லல்லு அவர்கள் நியமித்த முன்னால் நீதிபதி 'பானர்ஜீ' தலைமையிலான விசாரணைக்குழு, தமது விசாரணையின் முடிவில் 'கோத்ரா' ரயில் எரிப்புச் சம்பவத்தை ஒரு விபத்து 'மட்டுமே' என்று அறுதியிட்டுக்கூறியிருக்கிறது. ஆனால் இதற்கு முன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நியமித்த இன்னொரு உயர்மட்ட குழுவானது, அது கரசேவை முடிந்து சமர்மதி எக்ஸ்பிரஸில் ஊர் திரும்பிக்கொண்டிருந்த 'கரசேவர்களைக்' குறிவைத்து 'வெளியாட்கள்' யாரோ பெட்ரோலைக் கொண்டு எரியூட்டியதாக ஆய்வறிக்கை வெளியிட்டது. இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள். எது இங்கே உண்மை?
ஆக இரண்டு வெவ்வேறு அரசுகள் ஆட்சிக்கு வந்தால் 'உயர்மட்டக்குழு ஆட்கள்' கூட அதற்குத்தகுந்ததாய் மாறிக்கொள்வார்கள் என்பது வருத்தமளிக்கும் விஷயம். இவ்வாறு அரசுக்குத் தகுந்ததாய் ஆய்வறிக்கைகளும் கூட மாறும்போது இந்தியாவும் இந்திய ஆட்சியாளர்களும் உருப்படுவதாய் உருப்படப்போவதாய் யாருக்கும் தோன்றாது.
காங்கிரஸ் அரசுக்குக் கீழேயான இவ்வறிக்கை உண்மையென்று லல்லு அவர்கள் அதன் தலைவராய் இருக்கும்வரை யாராலும் நம்பமுடியாது. ஏனெனில் திரு. லல்லுவைப் பற்றி எல்லா அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் தெரியும். எத்தகைய தவறையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் மிகச்சிறந்த 'அரசியல்வாதி' என்பது அனைவருக்கும் தெரியும். பி.ஜே.பி தலைமையிலான அரசு 'கோத்ரா' சம்பவத்தை வைத்து அரசியல் பண்ணியிருக்கலாம் என்றாலும் அப்போது கரசேவர்கள் விஷயம் பெரிதாக பிரச்சனை தரும்படியே இருந்தது. எனவே அப்படியும் நடந்திருக்கலாம் என்று யூகிக்கும்படியாகவே நிலைமை இருந்தது. இந்நிலையில் பி.ஜே.பி அதை வைத்து அரசியல் பண்ணவில்லை என்றும் நாம் சொல்லமுடியாது. ஏனெனில் பி.ஜே.பியின் கொள்கை கடந்தகால பாதைகள் அப்படி. இங்கே எது நிஜம் என்பதை தீ பகவான் மட்டுமே வந்து சொல்லமுடியும் போல இருக்கிறது. பொய் சொல்பவர்களையும் அவர் கொளுத்தி விட்டுப்போகட்டும்.
இரண்டாவது, லல்லு அவர்கள் தனது மடியிலிருந்து ஒவ்வொரு நோட்டாய் எடுத்து நீட்டிக்கொண்டிருந்த செயல் தவறுதான் என்றாலும் மன்னித்துவிடுகிறதாம் தேர்தல் ஆணையம். இது எப்படி இருக்கிறது?
இச்சலுகை எல்லோருக்கும் உண்டா என்றும் அதே தேர்தல் ஆணையம் சொல்லவேண்டும். முதல் தேர்தலிலோ அல்லது ஒவ்வொரு தேர்தலிலுமோ 'முதன் முறையாக செய்யும் தவறு தவறில்லை' என்று அது கொஞ்சம் விளக்கிச்சொல்லிவிட்டுச் செல்லலாம். இத்தகையவைகளே பின்னாளில் ஏதாவது ஒரு முக்கிய வழக்கின் போது முன்மாதிரியாய் அமைந்து அங்கேயும் இன்னொரு குற்றவாளி தப்புவதற்கு ஆயுதமாகிவிடுகிறது. ஆக லல்லு அவர்கள் செய்தால் அது தவறில்லை. மற்றவர்கள் யாராவது செய்தால் தவறாகி விடும்?
வாயைப் பிளந்துகொண்டிருங்கள்! இந்தியா வல்லரசாகி விடும்!
உங்கள் கோபம் மிகவும் நியாயமானது. போலி ஜனநாயகத்தின் மற்றொரு விளைவு.
ReplyDeleteஇவ்ர்கள் இருக்கும் வரை இநிடியா தடுமாறிக் கொண்டுதானிருகும்.
அன்புடன்
ராஜ்குமார்
கோட்ரா சம்பவத்தை தனியாக ஆய்வு செய்தவர்களும் , லாலு நியமித்த விசாரணை வாரியத்தின் இடைக்கால அறிக்கைக்கு
ReplyDeleteஆதரவு தெரிவித்து உள்ளனர். அறிக்கை வெளியடப்பட்ட
காலத்தை தவிர்த்து,இதை அரசியல் உள் நோக்கம் என்று கருதமுடியாது,
திட்டமிட்ட செயல் என்று சொல்லி குஜராத்தை கலவர பூமியாக்கி ஆட்சியைப் பிடித்தவர்களும், குஜராத் கலவரத்தை முன்னிலைப்படுத்தி மதச்சார்பின்மை பேசி ஆட்சிக்கு வந்தவர்களும் ஞாபகத்துக்கு வருகிறார்கள். இவ்வளவும் நடக்க காரணமாக இருந்த அந்த ரயில் பெட்டியில் நடந்து வெறும் விபத்துதானா? நம்பமுடியவில்லை!
ReplyDeleteதங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி ராஜ்குமார், பெ.சொ.நண்பர் மற்றும் ராம்கி.
ReplyDeleteபெ.சொ நண்பர், மற்ற ஆய்வுகளும் அதையே தான் சொல்வதாகச் சொன்னார். எனக்கு நிச்சயம் நம்பிக்கை இல்லை. ராம்கி சொல்வதைப்போல கண்டிப்பாக வேறு சில காரணங்களும் இருக்க வேண்டும்.
எம்.கே.குமார்.