Sunday, January 23, 2005

சிங்கை இணைய நண்பர்களுக்கு..

இனிய சிங்கை நண்பர்களே,

வருகிற சீனப்புத்தாண்டு (பிப்ருவரி 9 மற்றும் 10) விழாவை முன்னிட்டு எல்லோருக்கும் குறைந்தபட்சம் இருநாட்கள்(ளாவது) விடுமுறை இருக்கும் என நினைக்கிறேன். (எனக்கு 8, 9, 10 என மூன்று நாட்கள் விடுமுறை) சிங்கப்பூரிலிருந்து இணையத்தில் பங்காற்றிக்கொண்டிருக்கும் நண்பர்கள் நாம் யாவரும் அந்நாட்களில் ஏதாவது ஒன்றில், ஓரிடத்தில் ஒன்றிணைந்து இணையவிஷயங்களும் இன்னபிற விஷயங்களுமாய் பேசி கலந்து அளவளாவிக்கொள்ளலாம் என்று தோணுகிறது. இணைய நண்பர்கள் என்ன சொல்கிறீர்கள்?

நண்பர் மூர்த்தியும் இதுபற்றி சிலநாட்களுக்கு முன் அவரது பதிவில் எழுதியதாய் ஞாபகம். அன்பு, ஈழநாதன் மற்றும் வீரமணி இளங்கோ ஆகியோர் அதில் இசைவும் தெரிவித்திருந்தார்கள். இப்பிரபலங்களைத்தவிர ஜெயந்திசங்கர், நம்பி, மானஸசென் ரமேஷ், அருள்குமரன், சித்ரா ரமேஷ், பனசை நடராஜன் இன்னும் பல 'விஐபிக்கள்' மரத்தடி உறுப்பினர் மற்றும் வலைப்பதிவர்களாக இணைய உலகில் இருக்கிறார்கள். எல்லோரும் முன்வந்தால் இனிய இணைய உறவுகளின் சந்திப்பாய் அதை நாம் உருவாக்கிக்கொள்ளமுடியும்.

எனவே நண்பர்கள் அனைவரும் முன்வந்து அவரவர்க்கு ஏற்ற நேரத்தையும் தேதியையும் சொன்னால் அவற்றில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து மேற்படி கலந்துரையாடலை நாம் நடத்தலாம். தங்களின் கருத்துகளுக்கு பின்னூட்டுங்கள். நன்றி!

அன்பன்,எம்.கே.குமார்.

8 comments:

  1. இணைய நண்பர்கள் சந்திப்பா? ஹூம்..... இங்கேயிருந்து உடனே அங்கெ வந்து கலந்துக்க முடியாதுன்றதாலே என்னைக் கட்டாயமா 'மிஸ்' பண்ணப்போறீங்க!

    கலந்துரையாடலைப் பற்றி அப்புறம் விவரமா உங்க பதிவுலே எழுதுங்க.

    வாழ்த்துக்கள்!

    என்றும் அன்புடன்,
    துளசி.

    ReplyDelete
  2. ஒரு முக்கிய சொந்த வேலையை அந்த நாட்களில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். எதுவும் சொல்ல முடியாதாகையால் நானும் 50/50-க்கு கலந்துக் கொள்ளலாம். எனக்கும் ஒரு சீட்டு பிடிச்சி வையுங்க எதுக்கும்.

    ReplyDelete
  3. விஜய் நீங்களும் சிங்கப்பூரா? வாங்க வாங்க. ஆறு பேர் இதுவரைக்கும் ஓகே சொல்லியிருக்காங்க நண்பர் நம்பியுடன் சேர்த்து.

    பார்க்கலாம்.

    துளசியக்கா, அட, வாங்க. விமான டிக்கெட் தானே?! உங்க தம்பி இத்தனை பேர் இருக்கோம், தராமளா போயிடுவோம்?! வாங்க. :-)

    ReplyDelete
  4. மன்னிக்கவும் குமார்.

    பாருங்களேன்... என்னடா ஜனவரிக்கு மேல சந்திக்கலாம்னு சொன்னோம், அதை முன்னெடுத்து செல்லவில்லையே என்று நினைத்து இப்போதுதான் உங்கள் ஒவ்வொரு மின்னஞ்சலையும் தேடிக்கொண்டிருந்தேன்... பார்த்தா இதுபற்றி இவ்ளோ விஷயம் நடந்திருக்கு - பார்க்கவே இல்லை.

    சரி நான் தயார். உங்களனைவரையும் விரைவில் தொடர்பு கொள்கிறேன்.

    ReplyDelete
  5. summaa postingkaip paRRi oru testting

    ReplyDelete
  6. வாங்க மணிமாறன்,
    நீங்கலெல்லாம் கலந்துக்குறதுல எங்களுக்குப்பெருமை! வாங்க. இமெயில்ல அனுப்புறேன்.

    மலேசியா நண்பர்கள் யாரையும் அழைக்கலை! அடுத்தடுத்த கூட்டத்துக்கு அழைக்கலாம் என நினைக்கிறேன்.

    பேசுவதற்கென இதுவரை எதையும் முடிவு செய்யவில்லை. முதல் கூட்டம் ஒரு அறிமுகக்கூட்டமாகவும் பொது விஷயங்களைப் பற்றிப் பேசுவதாகவும் இருக்கும்.

    கண்டிப்பா கலந்துக்குங்க!

    எம்.கே.குமார்.

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. உங்களோடெல்லாம் பேசறதுக்கு நமக்கு அறிவு பத்தாது. இருந்தாலும் கலந்து கொள்ள ஆசை. என்னையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
    prabhu.sengal@gmail.com

    ReplyDelete