Sunday, January 30, 2005

நண்பனுக்கு ஒரு வெண்பா வாழ்த்து!

எம்.கே.குமார்.

மணமகன்: கே வி ராஜா.
மணமகள்: எம். கோமதி.

நாள் : 27 ஜனவரி. 2005

1. ஐங்கரத்தான் ஆசியால் அறியாமை நீக்கி
அருங்கொடை இல்லறத்தாள் பைங்கரம் பற்றி
செழுங்கரம் பெற்று சிறப்புடன் வாழ
பெருங்குடையான் வாழ்த்தட்டும் இன்று!

2. அன்பராம் ராஜா அருமையாம் தன்னி
பண்பராம் பெற்றோர் பரிவுடன் வாழ்த்த
கண்கள்தாம் கொண்ட கவிஇன்பக் காதலுக்குள்
அன்புடன் சேர்ந்தனர் அணைத்து!

3. கலப்பு மணங்கொண்டாய் காதல் மணங்கொண்டாய்
காலத்து நீரில் கணக்காய் பயிர்செய்தாய்
சேலத்து மாம்பழமாய் செந்தமிழ் தேன்கொண்டு
ஞாலத்தில் வாழ்க திளைத்து!

4. கோமதி ராஜா குறிப்பறிந்து வாழ்ந்து
குலமதி வாழும் பொழுதாய் நிறைந்து
முழுமதி தேசம் முழுதும் படைத்து
நிலமதில் வாழ்க நிலைத்து!

வாழ்க வளமுடன்!

1 comment:

  1. வெண்பாவில் சில இடங்களில் (3) தளை தட்ட்டுகிறது. மன்னிக்கவும்.

    அவசரத்தில் இட்டமையால் நிகழ்ந்த பிழை இது! நன்றி!

    எம்.கே.குமார்

    ReplyDelete