தமிழக முதல்வர் ஜெ.ஜெ அவர்கள் இரு நாட்களுக்கு முன்பு ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். அறிக்கையா அது? அடி! நெத்தி அடி!
கமல், 'விருமாண்டி' படம் எடுத்துக்கொண்டிருந்த பொழுது "சண்டியர்" என்ற அதன் அப்போதைய பெயரும் கதையும் ஜாதிப்பிரச்சனையைக் கிளப்புவதாகக்கூறி தற்கொலைத் தாக்குதல் நடத்துப்படும் என்று படப்பிடிப்பை தடுத்தார் 'ஜாதி உத்தமர்' திரு. கிருஷ்ணசாமி. படம் ஆரம்பித்த நிலையில் வெறுமனே ஒரு அடி கூட நகராமல் கமலுக்கு அதன் மூலம் வந்த இழப்பு ஒரு கோடி ரூபாயாம்! ஒரு நல்ல நடிகருக்கும் தயாரிப்பாளருக்கும் அதன் மூலம் ஏற்பட்ட இழப்புக்கு படத்தைப் பார்த்தபிறகாவது கிருஷ்ணசாமி அவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று எனது முந்தைய பதிவில் எழுதியிருந்தேன்.
முதல்வரின் கவனத்துக்குப் போன பிறகு தலைப்பை மட்டும் மாற்றும் படி கமலிடம் கோரப்பட்டது. அது கூட முதல்வருக்காகத்தான் செய்தார் கமல்!
அதிலிருந்து ஆரம்பித்துவிட்டது இவர்களின் அராஜகம்! ரஜினிக்கு, விஜயகாந்திற்கு, கமலுக்கு இப்போது எல்லா நடிகர்களுக்கும் எதிராக ஏதோ இவர்கள் தான் தமிழைக் கட்டிக் காக்க வந்த கோமான்கள் மாதிரி 'சினிமாரசியல்' பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். அப்படியாவது நமது பேர் நாலு பத்திரிகையில் வரவேண்டும் என்பதையடுத்து இதன்மூலம் இவர்களுக்கு என்னதான் பெரிதாய் கிடைக்கப்போகிறது? அந்த அல்பத்திற்காக இப்படியெல்லாம் ஆடவேண்டுமா?
இன்னொரு வேலை வெட்டி இல்லாத இருவர் தமிழைக் காக்க முயற்சிகள் மேற்கொள்கிறார்களாம். அவர்களது வேலையில் இப்போது சுபமில்லை. ஒருவருக்கு இனிமேல்தான் மரம் வளர்ந்துவரவேண்டும். (இப்போதுதான் பசுமைத்தாயகமாய் மரம் நடுகிறார்கள்; அது வளரவேண்டாமா? அதுவரைக்கும் சும்மாவா இருக்கமுடியும்?!) இன்னொருவரின் அடிவயிற்றிலே கை வைத்து அவரது அந்தரத்தைக் கிழித்து விட்டார் டாக்டர். இனி அரசியல் பண்ணுவது ரொம்பவும் கடினம். என்ன செய்வது? பிடித்துக்கொண்டார் சினிமா வாலை!
முதலாமவர் 'முதலில் பெயரை அவர் பெயரை மாற்றட்டும்' என்றார் ஜெ. அவருக்கு சாட்டையடியாய்! இரண்டாமவருக்கு 'பேனாவும் ஆயுதமும்' தமிழ் வார்த்தைகளா என்று கேட்டிருக்கிறார்.
முதலில் இவர்கள் திருந்தட்டும்! பிறகு திருத்துவதற்கு வரட்டும்!
எம்.கே.குமார்
குமாரு! இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா...(கவுண்டமனி ஸ்டைலில்)
ReplyDeleteகுமாரு, இதைத்தான் நானும் என்பதிவுல விலாவாரியா கலாச்சிருந்தேன். பார்க்க
ReplyDeletehttp://urpudathathu.blogspot.com/2005/01/blog-post_110714549370963610.html
முதல்வரின் அறிக்கை சரியான நெத்தியடிதான், ஆனால் ராமதாஸ் பனங்காட்டு நரி. அவரின் பதில் அறிக்கையின் சுட்டி -> http://www.thatstamil.com/news/2005/02/01/ramdoss.html
ReplyDeleteramadoss thuppakiyaale suda poi adhu avaraye suttuvittadhu. BackFire! vaiko mudharkondu anaivarum pottu kaachi vittargal.
ReplyDeletecircus thuppaakiyo!
விஜய், ஆதிரை, சுதர்சன் மற்றும் நரைன் --தங்களின் கருத்துகளுக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி!
ReplyDeleteஎம்.கே.குமார்