Sunday, February 06, 2005

சிங்கப்பூர் இணைய நட்புகளின் சந்திப்பு!

சிங்கப்பூர் இணைய அன்பு நெஞ்சங்களே!

ஏற்கனவே தனிமடல்களில் நாம் பேசியவாறு, வருகிற வியாழன் மாலை 4.30 க்கு நமது இணைய நட்புகளின் முதல் கூட்டம் நடக்க இருக்கிறது.

இடம்: ஃபேரர் பார்க் எம் ஆர் டி அருகில் உள்ள கான்டோமினியம். (திருமதி.சித்ரா ரமேஷ் அவர்களின் சகோதரர் இல்லம்)

நேரம்: மாலை மணி 4:30

கண்டிப்பாக அனைவரும் கலந்துகொன்டு இச்சந்திப்பை இனிமையானதாக உருவாக்குங்கள்.

நமது வலைப்பூ மற்றும் மரத்தடி நண்பர்கள் பலர் இதில் பங்கேற்க உள்ளனர்.
பொதுவான அறிமுகங்கள், படித்துச் சுவைத்த புத்தகங்கள், கவிதைகள் தமிழ் இணைய உலகின் அண்மைய விவாதங்கள், மரத்தடி மற்றும் வலைப்பூ பற்றிய கலந்துரையாடல்கள் ஆகியனவும் இடம்பெறும்.

சித்ரா ரமேஷ், ஜெயந்தி சங்கரி, நம்பி, ஈழநாதன், அருள்குமரன், அன்பு, மூர்த்தி, விஜய், பாலு மணிமாறன், குமார் மற்றும் பலர் கலந்துகொள்கிறார்கள்.

மானஸசென் ரமேஷ் மற்றும் ரமா சங்கரன் அவர்களும் கலதுகொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

அனைவரும் வாருங்கள்! ஒரு இனிமையான மாலையை உருவாக்குங்கள்!

எம்.கே.குமார்.

5 comments:

  1. சிங்கை நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள். உங்கள் கூட்டம் மகிழ்வாகவும், இனிமையாகவும் நடக்க சென்னை நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கலக்குங்க சிங்கப்பூர்காரர்களஏ! பொறாமையோடு, மதி

    ReplyDelete
  3. இணைய நண்பர்கள் கூட்டம்/சந்திப்பு மகிழ்ச்சியோடு நடக்க வாழ்த்துக்கள்!!!!

    அப்புறம் என்னென்னெ நடந்துச்சுன்னு பதிவிலே எழுதுங்கள்!!!


    ஹூம்.....( ஒண்ணும் இல்லேப்பா, வரமுடியலைன்ற ஆத்தாமைதான்!)

    என்றும் அன்புடன்,
    துளசி

    ReplyDelete
  4. ஏயப்பா..கொமாரு,

    சாரு நிவேதிதாவைப் பாத்தீங்களா..??

    அந்த சந்திப்பை எளுதலாமில்ல..??

    மதி..!!

    அமெரிக்க வலைப்பதிவு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யலாமே..
    எங்கு நிகழ்ந்தாலும் நான் வரத் தயார்.

    ReplyDelete
  5. சந்திப்புக்கு வாழ்த்துகளையும் ஆசிர்வாதங்களையும் பொறாமைகளையும்(:-)) வழங்கிய பெரியோர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி!

    இன்று நடக்கும் சந்திப்பு பற்றி விரிவாக பின்னர் எழுதுகிறேன்.

    சாருவுடனான சந்திப்புக்கு நானும் போயிருந்தேன். அடிதடி ஏதும் இல்லாவிட்டாலும் (அதான் எனக்கு வருத்தம்!:)) கூட்டம் சுவாரஸ்யமாகத்தான் இருந்தது. படங்களும் இருக்கின்றன, போடுகிறேன். கொஞ்சம் பொறுங்கள் மூக்கர் ஐய்யா!

    தலைக்கு மேலே வேலை கொட்டிக்கிடக்கிறது! :(

    எம்.கே.குமார்.

    ReplyDelete