தண்ணீருக்குள்ளே ஒரு ஊரு நம்ம பணமும் கெடக்கு பாரு!
"வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தைச்செய்துபார்" இது நமக்கான பழமொழி! அரசியல்வாதிகளுக்கு இது எப்படி மாறும் தெரியுமா? "வீட்டைக்கட்டிப்பார் கணக்கில் காசு சேரும் பார்."
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதிக்கு உட்பட்ட 'துரையரசபுரம்' கிராமத்தில், வீடு வேண்டும் என்று யார் கேட்டார்களோ தெரியாது. நான்கு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட 500 தொகுப்பு வீடுகள். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிட மக்களுக்காக அரசாங்கம் கட்டியவை தாம் இவைகள். அரசாங்கம் கட்டிவிட்டு அபப்டியே கால்நடையாய் போய்விட்டது. காசு கணக்கில் ஏறியபின், எது நடந்தால்தான் என்ன; நடக்காவிட்டால்தான் என்ன?
வீடு கட்டுகிறார்கள் சரி. வீட்டை என்ன 'கண்மாயிலா' கட்டவேண்டும்? (கண்மாய் என்றால் தெரியும் தானே?! பெரிய நீர்நிலை. ஏரி!) மொத்தமாய் நீருக்குள்ளே மூழ்கி முத்தெடுக்கவா ஏரிக்குள்ளே கட்டினார்கள்? வீட்டைக் கட்ட உத்தரவிட்டார்களே ஏன் அதைத் திறந்துவைக்கவில்லை? மக்களுக்காகத் தானேயய்யா அது? மக்கள் எங்கே இருக்கிறார்கள்? கண்மாய்க்குள் கரையும் நம் காசுகள்!
பாருங்கள் ஐயா பாருங்கள்! அவலங்களைப் பாருங்கள்.
"அம்மா ஆட்சியாம் இதில் அவர்களையே கேளுங்கள்"--ஐயா கட்சி.
"ஐயா கட்சி போட்ட திட்டம்; அவர்களையே கேளுங்கள்"-- அம்மா கட்சி.
"எனக்கு வேலை கிடக்கு; என்னை விட்டு விடுங்கள்."---அறந்தாங்கித் தொகுதியின் நீண்ட நாள் எம்.எல்.ஏ தற்போதைய எம்.பி: திருநாவுக்கரசர்!
பாரு தம்பி பாரு! பணமும் கெடக்கு பாரு! வாயைப்பொளந்து தூங்கு தம்பி! வல்லரசா ஆயிருவோம்!
எம்.கே.குமார்
தற்போதைய புதுக்கோட்டைத் தொகுதி எம்பி: திரு.எஸ்.ரகுபதி. (தி.மு.க)
ReplyDeleteதிருநாவுக்கரசர் ஒரிஸ்ஸா(?!)விலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்ய சபா எம்.பி!
எம்.கே.குமார்!