அன்பு மாலன் அவர்களுக்கு,
வலைப்பூக்களின் ஆரம்பம் முதல் அவற்றில் தாங்கள் காட்டிவரும் காட்டிவரும் ஆர்வமும், தொண்டும் பாராட்டப்படக்கூடியது. உண்மையில், ''அட! மாலனெல்லாம் நமக்கு பின்னூட்டமிடுகிறாரே என்று வலைப்பூக்கள் ஆரம்பித்தவர்கள் இங்கே அதிகம்!'
புற்றீசல்கள் போல கிளம்பி வளரும் இவற்றில் இனிமேல் எதையும் படீக்கவோ எழுதவோ நேரமிருக்காது. (உருப்படியாய் இருக்குமா என்பது பெரிய கேள்வி!) (ஏற்கனவே பல மடற்குழுக்கள் படித்து மாதமாகிறது!) காசி, இப்போதே சிறந்ததையும் அதிக மார்க்கு வாங்கியதையும் போட ஆரம்பித்துவிட்டார். காலை பத்து மணிக்கு போட்ட பதிவு பதினொரு மணிக்கு கீழே சென்றுவிடுகிறது! {:-)} அடுத்து வேறு ஏதேனும் கொண்டு வருவார். இப்படிப்போகும் நிலைமையில் ஒருநாள் எல்லாவற்றையும் இழுத்து மூட்டை கட்டிவிட்டு பொண்டாட்டியையும் பிள்ளையயும் கோர்ட் வாசலில் இருந்து கூட்டி வரவேண்டிய நிலைமை வரலாம். :-)
இணையத்தில் எழுதுபவர்களுக்கு இலக்கியத்தோடு கொஞ்சம் பாலம் ஏற்படுத்துவதில் சுஜாதா, பாரா(பொறுத்துப்பொறுத்துப்பார்த்தார், நேரவிரயம் கண்டு நிம்மதியாய் ஓடிவிட்டார்!), இரா.மு, ஜெ.மோ(ரொம்ப அடக்கி வாசிப்பார் இந்த கச்சடாவெல்லாம் கவைக்குதவாது என்பது தெரியும்!), ஞானி வரிசையில் நீங்களும் இருந்தீர்கள். நான் எதிர்பார்த்த மாதிரியே நடந்துவிட்டது!
எப்போதாவது ஒரு இன்லெண்ட் லெட்டரில் வரும், 'ஒரு பிடி சேற்றை' அள்ளி தூர எறிந்துவிட்டு, எழுத ஆரம்பித்துவிடுபவர்களுக்கு இப்படி முகத்திற்கெதிராய் அளவுக்கதிகமாய் சேற்றை பார்ப்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்!தாமரை இலை தண்ணீர் போல 'ஒட்டாமல் வாழ்ந்தால்' நிற்கலாம் என நினைக்கிறேன். தண்ணீர் இருந்தால்தான் வாழ முடியும் என்றிருந்தாலும் தண்ணீரோடு கலந்து உறவாடி வாழ வேண்டியது அதற்கு அவசியமில்லை.
உங்களது 180 நிமிடங்கள் இருக்கட்டும். உங்களுக்கும் ஜெ.மோ வுக்கும் எப்படி இவ்வளவு நேரம் கிடைக்கிறது என்று நான் மண்டை காய்ந்து போகிறேன்.
இணணயத்திலும் சரி மற்ற அலுவல்களிலும் சரி.
இந்த பிரிவு மற்ற சில ஆக்கபூர்வ விஷயங்களுக்கு உங்களுக்கு உதவுமாயின் சென்று வாருங்கள். கண்டதெற்கெல்லாம் பதில் சொல்லி காலம் கழிப்பது விரயத்தின் உச்சம்!
அண்மையில் அனுராக் வலைப்பதிவில் தங்களது பேட்டியைப் படித்தேன். 'பழைய ஜெயகாந்தனைப் பிடிக்கும்' என்று நீங்கள் சொல்லியிருந்ததையும் அதற்கு சில நாட்களுக்கு முன் நான் ஆர்வமுடன் வாங்கிப்படித்த 'ஹரஹரசங்கர' நாவலின் ஒற்றுமையையும் நினைத்து (சாரு, ஒரு கூட்டத்தில், ஹரஹரசங்கராவை ஜெகே எழுதினாரா? அவர் எழுதுற வேலயை விட்டு ரொம்பநாளாச்சுங்க என்று ஒரு பதில் சொன்னார்!) இதனை ஒரு பதிவாக எழுத எண்ணியிருந்தேன். (எழுதிவிட்டேன், போடவில்லை!) நிற்க.
இதற்கிடையில் பி.கே.எஸ் பதிவை இப்போதுதான் நான் படித்தேன்.ஜெகேவை 'முழுமையாக' இன்னும் படிக்க்வில்லையாதலால் உங்கள் இருவருடைய கருத்துமோதல்களிலும் நிஜம் தெரியவில்லை எனக்கு. ஆனால் தனிமனித தாக்குதல்களுக்கு கொஞ்சம் கூட பஞ்சமில்லை என்றே தோன்றியது.
ஜெகேயைப் பற்றி நீங்கள் எழுதியதில் அளவுக்கதிகமான "யாரையோ திருப்திப்படுத்தும் நோக்கு" இருக்கிறது என்று பி.கே.எஸ் நினப்பாரானால், பி.கே.எஸ்சினுடைய பதிவில் "கொஞ்சம் ரசிகத்தன்மை" இருப்பது என்னால் உணர்ந்துகொள்ளமுடிகிறது!
ஹர ஹர சங்கராவை ஜெயகாந்தன் எழுதியதுபோல 'ஹர ஹர ஜெயகாந்தா'வை பி.கே.எஸ் எழுதியிருப்பது தெரிந்தது. (ஆனால் பி.கே.எஸ் ஜெ.கேயைப் பற்றி நிறைய தெரிந்தவர். அவரைப்படித்தவர்)
ஆகையால் தனிமனித தாக்குதல்களுக்கும் படைப்புகளின் பொதுமதிப்பீடுகளுக்கும் யாரும் இடம் கொடுக்காதீர்கள் என்பதே என் வேண்டுகோள்!நன்றி, மீண்டும் வருக!
எம்.கே.குமார்
*****
அன்பு பி.கே.எஸ்,
இலக்கிய உலகு என்ன, 'எல்லா இடத்திலும் அரசியல்தான்' என்பது இன்றைய உலகில் யாருக்கும் தெரியாமல் இல்லை. சில பெரிய விருதுகளுக்குக்கூட சில நல்ல எழுத்தாளர்கள், கட்சிக்கரை வேட்டி கட்டவேண்டிய காலமாகிவிட்டது. இதிலெல்லாம் புதிது என்று எதுவுமில்லை. (சில சிற்றிதழ் 'சிங்கங்களெல்லாம்' கூட வார இதழ்களில் மண்டியிட்டுக் கிடக்கிறார்கள்!)அதெல்லாம் இருக்கட்டும்.
ஜே.கே.யின் சிகரங்களைக் காட்டுகிறேன் என்று ஜெயஜெய சங்கராவை,
அ.மியையும் கோவை ஞானியையும் கொண்டு காட்டியிருப்பது சரியானதல்ல என்பது என் கருத்து. அதே நாவலை மிகக்கேவலமாக இகழ்ந்தவர்கள் என்று ஒரு இலக்கியவாதிகள் லிஸ்ட் நான் தரட்டுமா? (அ.மி பயங்கரமான கிண்டல் பேர்வழி என்பது வேறு விஷயம்!)
எனது கருத்துப்படி, அந்த நாவல் நடுநில விமர்சனப்பார்வையில் எழுதப்பட்டது அல்ல. (அது கட்டுரை இல்லையே, நாவல் தானே! புனனவடிவம் தானே! அதிலென்ன நடுநிலைப்பார்வை என்று நீங்கள் கேட்டால் அது உண்மை என்பேன்.!)அதற்கு சங்கரரை வைத்து எழுதாமல் யாராவது 'புதுச்சாமியார்' அல்லது 'புதிதாக சாமியாரனவர்' பற்றி கதை எழுதியிருந்தால் பதினைந்து ரூபாய்க்கு பரவாயில்லை என்று விட்டிருக்கலாம்.
சர்ச்சைக்குரிய நேரத்தில் சர்ச்சைக்குரியவரைப் பற்றி சர்ச்சைக்குப்பெயர்போன நாவலாசிரியர் இப்படி, அதாவது 'அவரது தரத்தில்' எழுதாதுதான் வருத்தமளிக்கிறது. (படிக்கும்போது அப்படி நினக்கத் தோன்றுவது வேறு வருத்தமான விஷயம்!) கதையின் ஆரம்பத்தில் "என்ன நடந்தாலும் ஹீரோ நல்லவன்" என்ற முடிவோடு கதையின் போக்கு எழுதப்பட்டதாகவே எனக்குத் தோன்றியது. இது எனது விமர்சனம். இதுதான் சரி என்று சொல்லவில்லை.
இந்த விஷயத்தில் மாலனின் வரிகள் எனக்குப்பிடித்தன. தீப்பொறி பறக்கும் ஜெயகாந்தன் எங்கே? இவர் எங்கே? என்றுதான் நானும் நினைத்தேன். நிற்க.
இப்பதிவில் ஜெகேயை தூக்கிப்பிடிக்கிறேன் பேர்வழி என்று மாலனை, ஒண்ணுந்தெரியாத பாப்பா' ரேஞ்சுக்கு கொண்டு சென்றிருப்பது தவறென நினைக்கிறேன். தமிழ் எழுத்துலகில் அவருக்கும் ஒரு நல்ல இடம் இருக்கிறது!
உங்களது வாதப்படி, மாலன், ஜெகேயைப் பற்றி அப்படி எழுதியது தவறானால், நீங்கள், மாலனைப் பற்றி இப்படி எழுதுவதும் எவ்விதத்திலும் சரியாகாது என்பதும் நீங்கள் இருவரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்தானோ என்பதும் நடுநிலைமையாளர்களின் இன்னொரு பார்வை!மற்றபடி மாலனியத்தியலோ ஜெயகாந்தியத்திலோ உங்களளவுக்கு எதுவ்ம் தெரியாது எனக்கு!
எம்.கே.குமார்.
>>>சில சிற்றிதழ் 'சிங்கங்களெல்லாம்' கூட வார இதழ்களில் மண்டியிட்டுக் கிடக்கிறார்கள்!---
ReplyDeleteயாரை சொல்றீங்க சார்?? எஸ். ராமகிருஷ்ணணையா... ஜெயமோகனையா? எப்படி மண்டியிட்டுக் கிடக்கிறார்கள் என்றும் சொல்லுங்களேன் ;-)
பாஸ்டன் அண்ணாத்தே, புலி வாலைப் புடிச்சிக்குடுக்கிறியே..அண்ணாத்தே, இது உனக்கே நல்லாயிருக்கா? :-)
ReplyDeleteநானெல்லாம் அரசியல்பின் பலமோ இலக்கியபின் பலமோ இல்லாத ஏப்ப சாப்பை அண்ணாத்தே!
வார இதழ்லெ வேல பாக்குற நண்பர் ஒருத்தர் சொன்னார், அந்த சிங்கம்ல்லாம் (எந்த சிங்கம்ன்னு கேக்காதீரும்.) எப்படி கெஞ்சிக் கூத்தாடி வாய்ப்பு குடுங்களேன்னு குழஞ்சி நிக்கிறதைப் பத்தி!
ஆச்சர்யமாத்தான் இருந்தது! (உமக்குன்னா தனி மடல்லெ சொல்லுறேன்!) :-)
எம்.கே.
உங்கள் பின்னூட்டம் பற்றி:
ReplyDelete//வார இதழ்லெ வேல பாக்குற நண்பர் ஒருத்தர் சொன்னார், அந்த சிங்கம்ல்லாம் (எந்த சிங்கம்ன்னு கேக்காதீரும்.) எப்படி கெஞ்சிக் கூத்தாடி வாய்ப்பு குடுங்களேன்னு குழஞ்சி நிக்கிறதைப் பத்தி!
ஆச்சர்யமாத்தான் இருந்தது!//
ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது? அசிங்கப்பட்டாலாவது நியாயம் எனலாம்.
Painter and buyer
மேற்கண்ட ஓவியத்தில் ஓவியனுக்குப்பின்னால் சோடாபுட்டியுடன் அசட்டுப் பார்வை பார்த்துக்கொண்டு பர்ஸை உருவியவாறு நிற்கும் படம் வாங்க வந்த கோமுட்டிகள் நிலையில்தான் நாம் இருக்கிறோம். பணத்தையும் சற்று ரசனையையும் மட்டும் வைத்தவாறு பர்ஸை நம்பிப் பல்லிளித்துக்கொண்டிருக்கும் கோமுட்டியைக் கண்டுகொள்ளாமல் வேலையில் ஆழ்ந்திருக்கும் படைப்பாளி போன்றவர்கள் இந்தமாதிரி "தொங்கிக்கொண்டு" அலையநேர்வதை ஆச்சரியம் என்று பார்ப்பதைவிட, இப்படித் தொங்கவிட்ட, தமிழ் மகாஜனங்கள் உருவாக்கிய "சூசூசூசூசூழலின்" அவலம்/அசிங்கம் என்று சொல்வது சரியாக இருக்குமா? இதில் அசிங்கப்படுவதற்கு நிறைய இருக்கிறதே தவிர, ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? மேலும், வாரப்பத்திரிகைகளில் இப்போதாவது எழுதுகிறார்களே என்று சந்தோஷப்பட்டால், அதையும் இந்தமாதிரி "தொங்கவிடுவது" நியாயமா! கொன்று தோல் உரிக்கப்பட்டு கொக்கியில் மாட்டப்பட்டு குளிர்பதன அறைக்குள் சென்றுகொண்டிருக்கும் மாடுகள் போலவா? மாடுதான் எழுத்தாளன், குளிர்பதன அறைதான் வாரப்பத்திரிகைகளா? என்ன ஒரு insensitive voyeurism!!
'அட! மாலனெல்லாம் நமக்கு பின்னூட்டமிடுகிறாரே என்று வலைப்பூக்கள் ஆரம்பித்தவர்கள் இங்கே அதிகம்!'
ReplyDeleteஇப்பிடியெண்டு உமக்கு யார் சொன்னது?
மாண்ட்ரீசர் வாங்க, மறுமொழிக்கு நன்றி!
ReplyDeleteகோமுட்டியையும் விக்கிறவனையும் பாத்தேன். சொல்ல வந்ததை சுருக்குன்னு சொல்லியிருக்கீங்க.
மதியாதார் வீடு தலைவாசல் மிதிக்காதேன்னு சொல்லியிருக்காங்க.
வாரப்பத்திரிகையில் எழுதினாத்தான் ஏதோ எட்டாத உயரத்தை எட்டுன மாதிரி அவங்க நினைச்சு ஏங்கி நிக்கிம்போது நாம எதுக்குய்யா அசிங்கமா நினைக்கனும்.
சிறுபத்திரிகையில எழுதி இமயத்தைத் தொட்டவனும் இருக்கான். ஒரே ஒரு நாவலோ இரு நாவலோ எழுதி இந்தியப்புகழ் பெற்றவ்னும் இருக்கான். இங்கே எழுதினாத்தான் மதிப்புன்னு எதுவுமில்லை.
இன்னும் சொல்லப்போனா எந்த வகையிலாவது தங்களீன் தரத்தைக் கொஞ்சம் குறைத்து (அல்லது வாரப்பத்திரிகையின் தரத்துக்கு ஏற்றவாற்றே அவர்கள் எழுதவேண்டியுள்ளது.)அங்கே எழுதுவது கூட நாம் அவர்களை அசிங்கமாய், பாவமாய் நினைப்பதற்கு எதிரானதுதானே?!
இது இப்படி இருக்க, வாரப்பத்திரிகைக்கு வெளீயே, எங்கேயும் 'நான் தான் பெரியவன்' போல இறுமாப்பு வேறு மனதிற்குள்! அதை விடச்சொல்லுமய்யா முதலில்.
பிறகு ஆதரிப்பார்கள் மக்கள்.
எம்.கே.
கறுப்பியக்கா, வாங்கக்கா, முதல் தடவையா என் பதிவுக்கு வந்து மறுமொழி குடுத்துருக்கீங்க, இதுகூட 'மாலனால்' தானே யக்கா.?! :-)
ReplyDeleteகவிதை எழுதி பரிசு வாங்குபவர் சிலர், எழூதிய கவிதையில் குற்றம் கண்டுபிடித்து பரிசு வாங்குபவர் சிலர்.
(திருவிளையாடல் பட டயலாக்!)
இது(மாதிரி)தான் உங்க கேள்விக்கும் பதில்.
மறுமொழிக்கு நன்றி.
எம்.கே.
தங்களுடைய சரியான நடுநிலைப்பார்வையைக் காண மகிழ்சி.யாராவது இதை சரியாக சொல்லமாட்டார்களா என்று பார்த்திருந்தேன்.
ReplyDeleteநன்றி.
எம். கே. & மாண்ட்ரீஸர், உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
ReplyDeleteதிறம்படைத்த படைப்பாளிகளின் 'தொங்கும்' நிலை கொஞ்சம் பரிதாபமானதுதான். இருப்பினும், இதற்குத் தமிழர்களை மட்டும் குறை கூற முடியாது. 'வான் கோ'வால் (Van Gogh) தன் வாழ்நாளில் ஒரே ஒரு ஓவியத்தை மட்டும் தான் விற்க முடிந்ததாம். வரலாற்றை நோக்கினால் 'most geniuses have been failures in their lifetime' என்ற உண்மையே வெளிபடுகிறது.
அதி உன்னதமான படைப்புகளையெல்லாம் சராசரி மனிதர்கள் மதித்துப் போற்ற வேண்டும் என நினைப்பதும் அதிகம், அவ்வாறான படைப்புத்திறன் கொண்டவர்கள் தன் திறமை மீது பெருமிதம் (இறுமாப்பு?) கொள்ளக்கூடாது என எதிர்பார்ப்பதும் முறையல்ல.
வீட்டில் அடுப்பு எரிவதற்காக ஜனரஞ்சக ஊடகங்களில் அவர்கள் செய்து கொள்ளும் தரக்குறைவும் (வேசித்தனம் போல் தெரிந்தாலும்) புரிந்து கொள்ளும் வகையிலேயே உள்ளது. பார்க்கப்போனால் நாமனைவரும் ஏதோவொரு வகையில் வேசித்தனம் செய்பவர்களே, நம் விழுமங்களிலிருந்து நழுவியவர்களே. எழுத்தாளன் மட்டும் ஏனிதற்கு விதிவிலக்காக இருக்க வேண்டும்?
பி. கு: நான் genericஆகக் கூறிய கருத்துகள் இவை. எந்த ஒரு தனிநபரையோ ஆதரித்து சொல்லப் பட்டவையல்ல. அந்த அளவுக்கு இலக்கிய அறிவும் ஈடுபாடும் எனக்குக் கிடையாது. (எப்படி, disclaimer? ;))
i am given to understand that at least two tamil writers were very eager to write in kumudam and lobbied for it.one was chosen.there is nothing wrong in writing in a popular magazine.but lobbying for it shameful.
ReplyDeleteam given to understand that at least two tamil writers were very eager to write in kumudam and lobbied for it.one was chosen.there is nothing wrong in writing in a popular magazine.but lobbying for it is shameful.
ReplyDeleteவாய்ஸ் ஆஃப் ரிங்க்ஸ், உங்க டிஸ்கிளைமர் அபாரம் போங்க! :-)
ReplyDelete+ (+) - = 0 இப்படி இருந்தது உங்க பின்னூட்டம். நன்றி!
அனானிமஸ்,
உங்க கருத்துதான் என் கருத்தும்! நன்றி.
எம்.கே.