Tuesday, April 10, 2007

வியர்டு-கிறுக்குத்தனமும் மனநோயும்

"சராசரியாய் வாழ்வதென்று முடிவுசெய்துவிட்டீர்கள், நன்று. ஆனால் உண்மையைச் சொல்லுங்கள், அதைக்கூட நீங்களாகவா முடிவுசெய்தீர்கள்?"

ரெண்டு பேரு ஒருத்தர ஒருத்தர் ரொம்ப விரும்புனாங்க. ரெண்டு பேருல ஒருத்தரான அந்தப்பொண்ணுக்கு அவங்க வீட்ல வேற மாப்பிள்ளையப் பாத்து கல்லாணம் கட்டிவெச்சுட்டாங்க. மனசொடிஞ்ச போன அந்த நபர் வேற ஊருக்கு இல்லெ, வேற நாட்டுக்கே போய் மொத்தமா செட்டிலாயிட்டார்.

காலம்போன போக்குல பதினைஞ்சு வருஷம் கழிச்சி, அந்தப்பொண்ணு, கணவனை இழந்துட்டு ரெண்டு கொழந்தையோடவும் இவரு இன்னும் தனிமரமாவும் சந்திக்கிறாங்க ஒருநா. மனசு விட்டுப்பேசி மீண்டும் அந்தப்பொண்ண கல்லாணம் கட்டிக்கலாம்ன்னு அந்த நபர் முடிவு பண்ணி, நம்ம சுஜாதா சார்ட்டெ சொல்ல, சுஜாதா சார் அவருக்குத்தெரிஞ்ச டாக்டர்ட்ட சொல்ல, அந்த டாக்டர் சொன்னாராம், இதெல்லாம் ஒருவித மனநோயின் அறிகுறின்னு!

கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி சுஜாதா சார் எழுதுன ஒரு தொடர்ல, டாக்டர் சொன்னதோட ஒரு தொடரும் போட்டு அடுத்தவாரம் அதுபத்தி எழுதுறேன்னு முடிச்சுட்டார். அடுத்தவாரம் நானும் படிக்கலை. ஏன் அப்படின்னு இதுவரைக்கும் காரணமும் புரியலை.

மூக்கன் சார் சொன்னமாதிரி தேடிச்சோறு நிதந்தின்று..ன்னு யார் பாடும்போதும் சரி, ஒரு சரவெடிய உசுருக்குள்ளெ கொளுத்துன மாதிரி சரட்டுன மனசும் உடம்பும் எம்பி உக்காந்தது ஒரு காலம். மனநோயி கொண்டலைஞ்ச காலம். கமல் கட்டக்குரல்லெ வாசிக்கும்போது அலைகளெல்லாம் ஆர்ப்பரிக்க கடல்மேலே இருக்குற மணப்பாடு பாறை மேல நின்னுக்கிட்டு நானே பாடுறதா அலைஞ்ச மனநோயிக்காலம்.

விவேகானந்தர் பாறையில மனசெல்லாம் காத்தோட பறக்குற வேளையில செவப்பு விரிப்பு பரவியிருக்கும் தியானஞ்செய்யுற ரூமுக்குள்ளெ மோகத்தைக் கொன்றுவிடு இல்லை மூச்சை அடக்கிவிடுன்னு கண்ணைமூடி காட்டெருமையோட கட்டிப்புரண்டதொரு காலம். காட்டெருமை, கிராமத்தை கவுச்சி வாசனையோட விட்டுப்புட்டு நகரத்துக்கு வந்து கனவுல பொரண்டு நகரத்துல இருந்து வேற நாட்டுக்கு வந்து இப்போ காடேறவும் ஆரம்பிச்சிடுச்சி. காட்டெருமைக்கிம் பசி. காட்டுக்கும் பசி. எப்பவும்!

மூஞ்சப்பாத்து வாறது காதலா? மனசப்பாத்து வாறது காதலா? காதல் வாறதுக்கும் அதுக்குப்பின்னே கல்லாணம் வாறதுக்கும் இடையில கணக்குப்புள்ளை படும் பாடு எதுக்குச்சொந்தம், காதலுக்கா, கல்லாணத்துக்கா? பொன்னை விரும்பும் பூமியிலேன்னு டிஎம்எஸ் உருகும்போதும் பிறக்கும்போதும் அழுகின்றார்ன்னு சந்திரபாபு அழும்போதும் உன்னைவிட இந்த ஒலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்லேன்னு கமல் மருகும்போதும் உனக்கென இருப்பேன்னு ஹரிசரண் தாலாட்டும்போதும் மனசுக்குள்ளேயிருந்து எழுந்து ஓடிவந்து கண்ணுல கலங்கி நிக்கிறது என்னன்னு இந்த மனநோயிக்காலத்துல எப்பவும் புரியலை.

வேடிக்கை மனுஷனல்லடா, விதியோடும் மதியோடும் போராடி இந்த வேஷங்காட்டும் சமுதாயத்தின் முன்னே 'மாதிரியா' மறுமலர்ச்சி படைக்கப்போறேண்டான்னு சொன்னபோது செந்தூர் நண்பனொருவன் விதியைக் கண்ணுமுன்னாடி விரிச்சிக் காட்டுனத மறுத்தது, மனப்புண்ணு கண்ட கனவுக்காலம்ன்னா, அகஅழகு கொண்ட பொண்ணை உயிரோட இணைச்சுக்கிட்டதும் உயிரோட இணைஞ்சதைப் பிரிய நேர்ந்ததும் கைப்புண்ணு கண்ட இன்னொரு கனவுக்காலம். போறவழி வேறன்னாலும் போறஊரு ஒண்ணுதான்னு மண்ணு மக்களை விட்டுவிலகி மாற்றாந்தோட்டம் போனதும் குரோட்டன்ஸ் பார்க்குக்குப் போனாலும் கோயிலையும் குளத்தையும் அது நிறைக்கும் மீனையும் மருதாணியையும் மறக்கவே முடியாது என்பதும் நேற்றுவரையான காலத்தின் காட்சி.

சலசலக்கும் காட்டோடைக்குள்ளே முங்கி குளிந்து கெடக்கும் கூழாங்கல்லாட்டம் ஜில்லுன்னு இருக்குறதும் இன்னொரு நொடிமுனையில எரிமலையாப் பொங்கி உமிழ்ந்து அடங்கிப்போவதும் எனக்குள்ளே நடக்கும். மொதல்ல பாக்குறப்போ வழிஞ்ச எண்ணத்தாலே பத்து வருஷமானாலும், கண்ணெதிரிலெ திரிஞ்சாலும் சிலர்கூட பேச மறுக்குறதும் கண்மறைவிலே இருந்தாலும் அம்மாவப்பத்தி எப்பவோ சொன்ன ஒரு வார்த்தைக்காக மனசுல வெஞ்சினத்தோட அவனுக்காகக் காத்திருக்கிறதும் எனக்குன்னே இருக்குற இன்னொரு கிறுக்குத்தனம். குப்புறக்கவுத்த கூடை மாதிரி மனசு நெறைய அன்பை வெச்சிக்கிட்டு அடிக்கடி சீண்டுறதும் சின்னதா ஊசி வெச்சி அப்பப்போ குத்திக்கிட்டே இருக்குறதும் கூடப்பொறந்த இன்னொரு கொணம். அதுல அடிக்கடி படுறது அம்மா.

வெவரம் தெரிஞ்ச நாள்ளெயிருந்து என்னப்பாங்குறதைத் தவிர்த்து என்னடா, ஏண்டான்னு ஒரு வார்த்தை கூட வையாத அப்பாவைப் பாத்து பெத்துக்க/தத்துக்கப்போற கொழந்தைங்ககிட்டே அப்படியே காட்டணும்ன்னு நெனைக்கிறதும் குழந்தைங்ககிட்டே அப்படியே குழந்தையா உருமாறி மனமாறுறதும் குட்டிங்கிற அண்ணமககிட்டேயும் ஸ்னேக்ஸ்ன்ற தோழர் மககிட்டேயும் எப்போ பேசுனாலும் மனசுல ஒரு இலை உதிர்கிற அதிர்வை உணரும்போதும் இன்னும் நான் குழந்தைதானோன்னு ஒரு கிறுக்கு இருக்கு.

அம்மா திட்டுனுச்சுன்னு காட்டுக்குள்ளே போயி மணிக்கணக்கா இருந்து திரும்புறதும் பட்டை வளந்து பெயர் சுருங்கிப்போனாலும் அங்கே இருக்குற மரத்து மேல இன்னைக்கிம் எம்பெயரைப்பாக்க முனையுறதும் பனைமரமா தேடிப்பாத்து அரசங்கன்னு பிடுங்கி கோயிலுக்கெதிரே நட்டுவெச்சி இன்னைக்கி பெரியமனுசனானவனை செல்லமா தடவிப்பாக்குறதும் சிலிர்ப்பா இருக்குற கிறுக்கு. நடுராத்திரிலெ எழுந்து சித்தார்த்தனா கிளம்ப ஆசைப்படுறதும் அடுத்த நிமிஷமே ஊறுதராத விலங்கு, கையால பறிக்கிற அளவுக்குத் தொங்குற சாப்பிடுறபழம், பாக்க மட்டுமில்லாம குளிக்கவும் முடியுற அருவி, பாம்பு பூச்சி, வண்டு இல்லாத காடு இதெல்லாம் எப்போ கெடைக்குதோ அப்பொ ஆகலாம்னுன்னு பூனை வளத்து அதுக்கு பாலுக்கு மாடு வளர்த்து மாட்டைப் பாத்துக்க ஒரு பொம்பளைய வெச்சிக்கிட்டு, சாமியாரு சம்சாரி ஆன கதை மாதிரியும் இருக்கு இன்னொருபக்கம் கிறுக்கு.

தேங்கா புடுங்கிப்போடும்போது சத்தம் கேக்காம இருக்க எல்லாரும் கத்தணும், மாங்கா புடுங்கி துண்டுல கட்டி வெரணும்ன்னு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்து தண்ணி இல்லாத கெணத்துக்குள்ளே அடுப்பு செஞ்சி மாங்கா பச்சடியும் முருங்கைக்கீரையும் அவிச்சு திண்ண கதைக்கி முன்னால பொத்திப் பாதுகாத்த நல்ல பைய, பலவருஷம் பள்ளிக்கூடத்திலே மொதல்மாணவன்ற மூடி. அதனாலேயே பல அழகிங்க. சாவுறவரைக்கும் மறக்காத ஆம்பளைச்சட்டை அழகிங்களும் உலகத்திலேயே அழகுன்னு நெனைக்கிற அவங்களோட மொட்டு பார்வைங்களும் வாழ்க்கையில அனுபவச்ச வரம். ரே, சை, ஷினின்னு மனசைப் பிசைந்த தோழிகள்ன்னு வாழ்க்கை ரயில் ஓட்டம். எல்லாரும் அங்கங்கே எறங்கிப்போக இது மட்டும் இன்னும் ஓட்டம்.

உயரமான கெளைமேல உக்காந்து ஓ தோழர்களேன்னு காட்டுக்குள்ளே தனிமையில் மாநாடு போடுறது சிங்கப்பூரின் புகித்பாதோக் வரைக்கும் உண்டான கதை.

யோசிச்சி யோசிச்சு நாமே முடிவு பண்ணுனதா இருந்தாலும் நேத்துவரைக்கும் செஞ்ச பலகாரியங்கள் நாந்தாண்ட்டா உன்னை அப்படிச் செய்யவெச்சேன்னு இன்னைக்கிச் சொல்லிக்காட்டுறமாதிரி இருக்க, இதோ அடுத்து செய்யப்போறதை நாம தீர்மானிக்கணுமா இல்லை அது தீர்மானிக்குமான்னு குழம்புறதும் விதவிதமான வழிகளைத்தேடி ராமகிருஷ்ணம், காயகல்பம், வாழும்கலை, சகஜமார்க்கம், அம்மான்னு அலையிறதும் ஆனாலும் வளைவுகளையும் அது தரும் வாழ்க்கையையும் தொடர்றதும் எங்க புடிச்ச கிறுக்குன்றதும் எப்போ அது தெளியின்றதும் இன்னக்கி வரைக்கிம் தெரியலை!

நெனச்சிப்பாத்தா எல்லாம் ஒருமாதிரி கிறுக்குத்தனமாத்தான் இருக்கு, இல்லெ?!


அன்பன்
எம்.கே.

இந்த விளையாட்டுக்கு என்னைக் கூப்பிட்ட மூக்கன் அவர்களுக்கு நன்றி.


5 comments:

  1. //இதெல்லாம் ஒருவித மனநோயின் அறிகுறின்னு//

    இந்த நோய் தீந்தா செத்துடலாம் ராசா.

    // உன்னைவிட இந்த ஒலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்லேன்னு கமல் மருகும்போதும் உனக்கென இருப்பேன்னு ஹரிசரண் தாலாட்டும்போதும் மனசுக்குள்ளேயிருந்து எழுந்து ஓடிவந்து கண்ணுல கலங்கி நிக்கிறது என்னன்னு இந்த மனநோயிக்காலத்துல எப்பவும் புரியலை.//

    இது தீருமா..?? தீரணுமா..?? அப்பறம் எதுக்குய்யா வாழ்க்கை.

    //சலசலக்கும் காட்டோடைக்குள்ளே முங்கி குளிந்து கெடக்கும் கூழாங்கல்லாட்டம் ஜில்லுன்னு இருக்குறதும் இன்னொரு நொடிமுனையில எரிமலையாப் பொங்கி உமிழ்ந்து அடங்கிப்போவதும் எனக்குள்ளே நடக்கும். மொதல்ல பாக்குறப்போ வழிஞ்ச எண்ணத்தாலே பத்து வருஷமானாலும், கண்ணெதிரிலெ திரிஞ்சாலும் சிலர்கூட பேச மறுக்குறதும் கண்மறைவிலே இருந்தாலும் அம்மாவப்பத்தி எப்பவோ சொன்ன ஒரு வார்த்தைக்காக மனசுல வெஞ்சினத்தோட அவனுக்காகக் காத்திருக்கிறதும் எனக்குன்னே இருக்குற இன்னொரு கிறுக்குத்தனம். குப்புறக்கவுத்த கூடை மாதிரி மனசு நெறைய அன்பை வெச்சிக்கிட்டு அடிக்கடி சீண்டுறதும் சின்னதா ஊசி வெச்சி அப்பப்போ குத்திக்கிட்டே இருக்குறதும் கூடப்பொறந்த இன்னொரு கொணம். அதுல அடிக்கடி படுறது அம்மா. //

    அடப்பாவி..அங்கயும் அதேதானா..?

    //ஆனாலும் வளைவுகளையும் அது தரும் வாழ்க்கையையும் தொடர்றதும் எங்க புடிச்ச கிறுக்குன்றதும் எப்போ அது தெளியின்றதும் இன்னக்கி வரைக்கிம் தெரியலை!//

    அதுதான் சுவாரஸியம் சாமி.

    எக்.கே, அலையடிச்சுகிட்டே இருக்கட்டும் சாமி. கடலுக்கு நுரை அழகு இல்லியா...:-) :-)

    ReplyDelete
  2. ±ó¾ì ÌÇò¾¢§Ä ãú¸¢É¡Öõ, ¸í¨¸Â¢§Ä ¸¨Ãó¾¡Öõ ÁÕ¾¡½¢ì¨¸¨Â ÁÈì¸ò¾¡ý ÓÊ¡о¡ý! ±ÐìÌ «¨¾¦ÂøÄ¡õ ÁÈì¸Ïõ! þ¨Å¾¡§É ´ÕÅ¨É ƒ£ÅÛûÇ ÁÉ¢¾É¡ì̸¢ÈÐ. ÁÉ¢¾ý À¡¾¢ Á¢Õ¸õ À¡¾¢ ¸ÄóÐ ¦ºö¾ ÒРŨ¸ Á¢Õ¸õ¾¡§É þÐ! ±øÄ¡ÅüÈ¢Öõ ¦¸¡ïºõ §¾Åý ÁÉ¢¾ý «ÍÃý ±ø§Ä¡Õõ þÕ츢ȡ÷¸û.
    º¢Ä ºÁÂõ ÁÛ„É¡ þÕìÌõ §À¡Ð ÁðÎõ §¾¡ýÚ¸¢È ºÄ¢ôÒò¾¡ý þÐ! ¦¸¡ïºõ §¾ÅÉ¡¸ Á¡È¢ þ¨¾ô À¡÷ò¾¡ø «¼¼¡ þÐìÌô §À¡ö ±ÐìÌ þò¾¨É ¯Õ¸ø ±ýÚ ´Õ Òýɨ¸! «Ãì¸É¡¸ Á¡È¢ Å¢ð¼¡ø þó¾ ¯½÷¸ÙìÌ «í§¸ þ¼Á¢ø¨Ä! ¬É¡ø.. þ¨Å «ò¾¨É¨ÂÔõ Á£È¢ þ¨¾ô ÀÊìÌõ §À¡Ð Áɨº ÒÇ¢Âõ ÀÆõ ¯ÖìÌÅÐ §À¡ø ²§¾¡ ´ýÚ ¯ûÙìÌû ¬ðθ¢ÈÐ. ÌÆó¨¾Â¡¸ «ùÅô§À¡Ð Á¡Ú§Å¼ò¾¢ø ÅÕÅÐ ¿øÄÐ ¾¡ý. «ó¾ì ÌÆó¨¾ Áɨ¾ «ôÀʧÂò ¦¾¡¼÷ó¾¡ø þó¾ò §¾¼ø ÓÊŨ¼Ôõ.
    «§¼ÂôÀ¡! ¿õÀ ÌÁ¡÷ þôÀʦÂøÄ¡õ ±ØКá!!!

    ReplyDelete
  3. சித்ரா சொல்றாங்க......


    எந்தக் குளத்திலே மூழ்கினாலும், கங்கையிலே கரைந்தாலும் மருதாணிக்கையை மறக்கத்தான் முடியாதுதான்! எதுக்கு அதையெல்லாம் மறக்கணும்! இவைதானே ஒருவனை ஜீவனுள்ள மனிதனாக்குகிறது. மனிதன் பாதி மிருகம் பாதி கலந்து செய்த புது வகை மிருகம்தானே இது! எல்லாவற்றிலும் கொஞ்சம் தேவன் மனிதன் அசுரன் எல்லோரும் இருக்கிறார்கள்.
    சில சமயம் மனுஷனா இருக்கும் போது மட்டும் தோன்றுகிற சலிப்புத்தான் இது! கொஞ்சம் தேவனாக மாறி இதைப் பார்த்தால் அடடா இதுக்குப் போய் எதுக்கு இத்தனை உருகல் என்று ஒரு புன்னகை! அரக்கனாக மாறி விட்டால் இந்த உணர்ச்சிகளுக்கு அங்கே இடமில்லை! ஆனால்.. இவை அத்தனையையும் மீறி இதைப் படிக்கும் போது மனசை புளியம் பழம் உலுக்குவது போல் ஏதோ ஒன்று உள்ளுக்குள் ஆட்டுகிறது. குழந்தையாக அவ்வப்போது மாறுவேடத்தில் வருவது நல்லது தான். அந்தக் குழந்தை மனதை அப்படியேத் தொடர்ந்தால் இந்தத் தேடல் முடிவடையும்.
    அடேயப்பா! நம்ப குமார் இப்படியெல்லாம் எழுதுவாரா!!!

    ReplyDelete
  4. கிறுக்குத்தனம்தான்... வாழ்க்கை என்பது என்ன என்று தானாகவே மனத்திற்குள் ஒன்றை நினைத்துக் கொண்டு வேகமெடுத்த ஆறாக வழியில் கண்டதையெல்லாம் அடித்துச் சென்று திருச்சிராப்பள்ளியிலிருந்து அமைதியாகச் செல்லும் காவிரிபோல வாழ்க்கை மாறும் போது, வாலிபமிழந்து வயதுபோய் தளர்ந்திருக்கும். எது சரி, எது தப்பு என்று உணரும்போது மறுபடியும் பிறந்து அந்தத் தப்புகள் செய்யாமல் வாழ்ந்திட மாட்டாமோ என்று மனசு எண்ணும் போது, இப்பிறப்பிற்கும் மறுபிறப்பிற்கும் இடைப்பட்ட தொடர்பு இருக்காது என்ற உண்மை உரைக்க, கடவுளை நோக்கி கண்ணுருகிக் கசியும் போது வாழ்க்கை ஒரு கிறுக்குத்தனமாகப் போனதை உணர முடியும். செய்தவற்றுக்கெல்லாம் பரிகாரம் தேடவும் மனதுருகி மன்னிப்புக் கேட்கவும் துடிக்கும் இதயம். கடவுள் இல்லங்களில் போய் உருகிக் கணிந்து, தணிந்து, மென்மையாகி, இலேசாக மாறி சாவை எதிர் நோக்கி மனம் தவிக்கும் இது, மனநோயல்ல, குமார்.

    ReplyDelete
  5. மூக்கு, சித்ரா மற்றும் நெகிழச்செய்த திருவடியான் ஆகியோருக்கு நன்றி.

    எம்.கே.

    ReplyDelete