Thursday, March 01, 2012

சிங்கப்பூரின் சங்கரன்கோவில்!


பெண் என்றால் பூ என்பார்கள், அதிலும் பெண் விவகாரம் என்றால் வெறும் பூ-விவகாரம் என்று சொல்லிவிட்டுப்போகமுடிவதில்லை. அண்மையில் அத்தகைய ஒரு விவகாரம் சிங்கப்பூர் அரசியலில் பூ வைக்கவில்லை, புயலடித்துவிட்டுச்சென்றிருக்கின்றன.

சிங்கப்பூரின் பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான பாட்டாளிக் கட்சியின் முக்கியப்பொறுப்பில் இருந்தவரும் ’ஹௌகாங்’ தொகுதியின் எம்பியுமான ’திரு ஷின் லியாங்’ அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது ஆளுங்கட்சிக்கே அதிர்ச்சியைக்கொடுத்திருக்கும். ஏறக்குறைய பத்துவருடங்களாக கட்சியின் முக்கிய தூண்களில் ஒன்றாக இருந்தவர். தனிப்பட்ட வாழ்வின் பெண்-விவகாரம் ஒன்றில் சம்பந்தப்பட்டிருந்ததால் அவர் நீக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

1991ஆம் ஆண்டிலிருந்து ஆளுங்கட்சியை  வயித்தெரிச்சலில் வாட்டிக்கொண்டிருந்த தொகுதி இந்த ’ஹௌகாங்’. 1991, 1997, 2001, 2006 என எல்லாத்தேர்தல்களிலும் எதிர்க்கட்சி வெற்றிபெற்ற ஒரு முக்கியத்தொகுதி இத்தொகுதி. ஒவ்வொரு வெற்றியும் ஆளுங்கட்சி வேட்பாளர் வாங்கிய ஓட்டு, வித்தியாசமாய் பெற்ற வெற்றி. இடைத்தேர்தல் இப்போதைக்கு இல்லை என்று சொல்லப்பட்டாலும் ஆளுங்கட்சிக்கு சவால் விடும் சிங்கப்பூரின் சங்கரன்கோவில் இது! பார்க்கலாம் என்ன நடக்கும் என்பதை!

எம்.கே.குமார்.

No comments:

Post a Comment