Sunday, January 14, 2007

சென்னைப் புத்தகக்காட்சியில் எனது புத்தகம்.

நீண்டநாள் கனவு நிஜமாயிருக்கிறது. சென்னை புத்தகக்காட்சியில் எனது முதல் சிறுகதைத்தொகுப்பு வெளிவந்திருக்கிறது. தலைப்பு மருதம். அன்னம் பதிப்பக்கத்தாரின் வெளியீடு. நான் மிகவும் ரசிக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரான திரு.நாஞ்சில் நாடன் முன்னுரை எழுதியிருக்கிறார்.

சிங்கப்பூரிலிருந்து இன்னும் இரண்டு வெளியீடாக சுப்பிரமணியன்ரமேஷ்(மானஸஜென்) எழுதியிருக்கும் கவிதைத்தொகுப்பு ஒன்றும் திரு.இந்திரஜித் அவர்களின் சிறுகதைத்தொகுப்பு ஒன்றும் வெளிவந்திருக்கிறது.

புத்தகக் காட்சிக்குச் செல்லும் நண்பர்கள் கவிஞர் மீராவின் அன்னம் பதிப்பகத்தில் இப்புத்தகங்களைக் காணலாம்/வாங்கலாம். நன்றி.

வாழ்வின் நெகிழ்ச்சியான இத்தருணத்தில் 'கை நிறைய கோதுமை அள்ளிக்கொடுத்தவர்களுக்கு' நான் நன்றி சொல்லுவது அவசியமாகிறது. அது தனிமடலாய் வரும்.

அன்புடன்
எம்.கே.குமார்.

13 comments:

இளங்கோ-டிசே said...

வாழ்த்து!

✪சிந்தாநதி said...

அட்டா முன்னமே சொல்லியிருக்க கூடாதா?
இப்போ ஷாப்பிங் முடிஞ்சு போச்சே...

Thangamani said...

Best Wishes Kumar.

Boston Bala said...

வாழ்த்துக்கள் எம்கே!

Nirmala. said...

பார்த்தேன் குமார். ஆனாலும் நம்ம மக்களுக்கு இத்தனை தன்னடக்கம் கூடாது... எங்கயும் ஒரு வார்த்தை சொல்லலியேன்னு இருந்தது... நல்லவேளை தகவல் சொன்னீங்க!

கைல எடுத்து தடவிப் பார்த்துட்டு வச்சுட்டு வந்துட்டேன். :-) ஏன்னா அன்னைக்கு வெறும் சர்வே!

வாழ்த்துகள்.

எம்.கே.குமார் said...

வாழ்த்திய நண்பர்கள் டிசே, தங்கமணி, பாபா மற்றும் நிர்மலா ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றி.

சிந்தாநதி, அதனால என்ன, இன்னொரு தபா போயிட்டு வந்துட வேண்டியதுதானே! :-)
பரவாயில்லை, அட்ரஸ் கொடுங்க. உடனே அனுப்பி வெச்சிடுவோம்.

நிர்மலா, நீங்களாவது தொட்டு தடவிப் பார்த்திருக்கிறீர்கள், நான் இன்னும் கண்ணில்கூட காணவில்லை. :-)

தன்னடக்கமா, நீங்க வேற! வெளிவருவது உறுதியாகத்தெரியாததால் சொல்ல இயல்வில்லை. புத்தகக்காட்சியின் இரண்டாம் நாளில் தான் நண்பரொருவர் பார்த்துவிட்டு உறுதியான தகவல் தந்தார்.

பையோட போகும்போது படக்குன்னு எடுத்துப்போட்டுடுங்க. :-)
நன்றி.

அன்புடன்
எம்.கே.

ஷைலஜா said...

கனவு நனவாகியதற்கு வாழ்த்து! அடுத்தடுத்து இதுபோல பலவெளீயிடுகள் வரட்டும் இந்தப்புத்தாண்டினில்!
ஷைலஜா

ramachandranusha(உஷா) said...

குமார்! வாழ்த்து சொல்வதைவிட சந்தோஷமாய் இருக்கிறது, என் புத்தகம் வெளியானதைப் போல! என் நண்பன், மரத்தடி வகுப்பில் பக்கத்து பெஞ்சு என்று சொல்லிக் கொள்ளலாம் இல்லையா? என்றாவது ஒரு நாள் இணைய எழுத்தாளர்கள் என்று யாராவது எழுதினால் அல்லது பேசினால் நம் பெயர்கள் எல்லாம் வரும் இல்லையா? இன்னும் பல சாதனை தொடர வாழ்த்துகிறேன்
இப்பொழுது.

PRABHU RAJADURAI said...

வாழ்த்துகள்!

ஆனா, எனக்கு "மரத்து மேல காட்டி பெரியவர் என்ன சொன்னார்னு" இன்னமும் புரியவில்லை. அப்பப்ப மண்டைய உடச்சுக்குவேன்...அந்தக் கதை இந்த தொகுப்பில் இருக்கா?

எம்.கே.குமார் said...

எனது சந்தோசத்தை தங்களுடையதாக உரிமையோடு பகிர்ந்துகொள்ளும் அன்பு நெஞ்சங்கள் ஷைலஜா, (பக்கத்து பெஞ்ச்) உஷா ஆகியோருக்கு எனது நன்றி.

வக்கீல்சார், அது எந்தக்கதை என்று தெரியவில்லை. ஆலமரம் கதையாக இருந்தால் அது இத்தொகுப்பில் இல்லை.

வாழ்த்துக்கு மிக்க நன்றி.

அன்பன்
எம்.கே.

PKS said...

வாழ்த்துகள்!

மாதங்கி said...

வாழ்த்துக்கள் எம். கே. குமார்

எம்.கே.குமார் said...

திரு பிகேஎஸ் மற்றும் மாதங்கி ஆகியோரின் வாழ்த்துகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

அன்பன்
எம்.கே.

Search This Blog