மெயின் நயன்தாரா, இயக்கம் சக்ரி டோலட்டி (அமெரிக்க இந்திய இயக்குனர்- உன்னைப்போல ஒருவன், கமல்-மோகன்லால் நடித்தது. மனுஷ்யபுத்திரன் எழுதிய ஒரே ஒரு சினிமா பாடல் இடம்பெற்ற படம்) என்ற எதிர்பார்ப்பில் உட்கார்ந்தேன்.
நல்லாத்தான் ஆரம்பித்தது. பலகோடி மதிப்புள்ள தன் சொத்து மற்றும் ட்ரஸ்டுகளைத் தான் எடுத்து வளர்த்த மகள் நயன்பேரில் எழுதிவைத்துவிட்டு போய்விட்டார் இலண்டனில் வசித்த இந்திய வம்சாவளிப்பெண்ணை மணந்த ஆங்கிலேயர். அவர்கள் இருவரும் இறந்தபின், அதைப் பராமரிக்க லண்டனுக்கு வருகிறார் நயன். அந்தச்சொத்தை எனக்குக்கொடுத்துவிடு என இந்திய வம்சாவளிப்பெண்ணின் சகோதரன் மகன் வந்துநிற்கிறான். நயன் முடியாது என்க, முகமூடி கிளவுஸ் என கொலைகாரனும் வந்து நிற்கிறான்.
தத்து எடுத்த சின்னப்பெண்ணுக்கு முதலில் மச்சம் இல்லை. நயன்தாரா ஹீரோயின் என்றானதும் அடுத்த காட்சியில் உதட்டுக்கு மேலே புள்ளியை வைத்துவிட்டார்கள் அந்தச்சிறுமிக்கு, மச்சமாம்.
நாய் உட்பட இருந்த நாலைந்து கேரக்டர்களை பாதிப்படத்துக்குள்ளே கொன்றுவிட்டான் கொலைகாரன். இனி எஞ்சியிருப்பது நயனும் அவனும் நாமும்தான் என்னும்போது, நயனைக்கொல்லவந்தவன் டேட்டிங் வந்தவன்போல ஓவியம் வரைந்து, பிரட் டோஸ்ட் செய்து சாப்பிட்டு, அந்தப்பெண்ணுக்கு வீட்டைச்சுத்திக்காட்டி, விதவிதமான சுத்தியலையும் வேல்களையும் காட்டி கிளாஸ் எடுத்து.... உஸ்.....
டேய், ஒண்ணு அவளைக்கொன்னுடு இல்லாட்டி நீ செத்துடு எங்களையேண்டா இப்டி கொல்ற அப்டின்னு சொல்ற அளவுக்கு ரெண்டுபேரும் ஒளிஞ்சு விளையாடுகிறார்கள் பாதிப்படத்துக்குமேல்.
படம் இன்னுமா போகும் என்று மிச்ச நேரத்தை 'மவுஸால்' கிளிக்கிப் பார்க்கவைத்த இயக்குனர் பாராட்டுக்குரியவர்.
சுஜாதாவோட நல்ல டைட்டில் கொலையுதிர்காலம்.. அதையும் வெறுக்கவெச்சுட்டீங்களேடா குண்டூஸ்.
#mk_movies
#Kolaiyuthirkalam
No comments:
Post a Comment