<<<
புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 70 சதவீதம் தேர்ச்சி!: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தாண்டும் மாணவிகள் சாதனை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக்குலேஷன் தேர்வுகளில் இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே மாவட்ட அளவில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 8 ஆயிரத்து 235 மாணவர்கள், 8 ஆயிரத்து 397 மாணவிகள் உட்பட மொத்தம் 16 ஆயிரத்து 632 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 5 ஆயிரத்து 660 பேர், மாணவிகள் 6 ஆயிரத்து 43 பேர் உட்பட மொத்தம் 11 ஆயிரத்து 703 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம் 70 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 68 சதவீதம் பேரும், மாணவிகள் 72 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் நகர்ப்பகுதிகளை விட கிராமப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களே மாவட்ட அளவில் முதல் இரண்டு இடத்தை பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
அறந்தாங்கி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட திருப்புனவாசல் ராமகிருஷ்ணா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவி சரண்யா 486 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் முறையே தமிழ்96, ஆங்கிலம்94, கணிதம்99, அறிவியல்99, சமூக அறிவியல்98.
இதுபோன்று இதே கல்வி மாவட்டத்தை சேர்ந்த வேங்கிடகுளம் துõய வளனார் மேல்நிலைப்பள்ளி மாணவி இனிக்கோஸ் சித்ரா மற்றும் கோனக்கொல்லைப்பட்டி ஜீவன் ஜோதி உயர்நிலைப்பள்ளி மாணவர் தாமரை செல்வன் ஆகியோர் 484 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளனர்.
இவர்களில் மாணவி இனிகோஸ் சித்ரா பெற்றுள்ள மதிப்பெண்கள் முறையே தமிழ்96, ஆங்கிலம்90, கணிதம்100, அறிவியல்100, சமூக அறிவியல்98. மாணவர் தாமரை செல்வன் பெற்றுள்ள மதிப்பெண்கள் முறையே தமிழ்92, ஆங்கிலம்95, கணிதம்100, அறிவியல்99, சமூக அறிவியல்98.
மேலும் கொத்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காரக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி, தாஞ்சூர் அரசு உயர்நிலைப்பள்ளி, பெருங்குடி அரசு உயர்நிலைப்பள்ளி, மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
புதுக்கோட்டை துõய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சந்தான ஜோல்றின் 483 மதிப்பெண்கள் பெற்று புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் முறையே தமிழ்95, ஆங்கிலம்92, கணிதம்100, அறிவியல்99, சமூக அறிவியல்97. மேலும் இந்த பள்ளியில் தேர்வு எழுதிய 270 மாணவிகளில் 267 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதன் மூலம் இந்த பள்ளி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 118 மாணவிகள் 400க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை இருதயமேரி மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.
புதுகை மாவட்ட மெட்ரிக் தேர்வில் "">>>
மேலே உள்ள செய்தி 28 மே 2004 ல் தினமலரில் புதுக்கோட்டை மாவட்டப்பிரிவில் வந்த செய்தி.
அதில் இடம்பெற்றிருக்கும் எம். சரண்யா எனது சொந்த அண்ணன் மகள். நான் படித்த பள்ளியில் சுமார் பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் நான் ஏற்படுத்திய சாதனையை முறியடித்து வெற்றி கண்டிருக்கிறாள். எனது 'பெட்'டில் நான் தோற்றுவிட்டாலும் அவளின் கடின உழைப்பை மிகவும் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். எனது அன்பு குட்டிக்கு வாழ்த்துகள். ஒரு கிராமத்து மாணவியின் சாதனை என்பதில் நீங்களும் பாராட்டுவதில் பங்கு கொள்வீர்கள் என நம்புகிறேன்.
நன்றி.
எம்.கே.குமார்.
3 comments:
அனுப்புநர்: வாசன்
உங்கள் பெருமிதம் கண்டு மிக்க மகிழ்ச்சி.
உங்களுடைய அண்ணன் மகளுக்கு உளம் கனிந்த நல்வாழ்த்துகள்.
ரொம்ப தாங்க்ஸ் வாசன்!
இந்த ஒரு வாழ்த்து போதும்! எனக்கும் அவருக்கும்!
எம்.கே.குமார்
சரண்யாவுக்கு எனது வாழ்த்துகள் குமார்.
சரி உங்க சாதனை எவ்ளோன்னு சொல்லலையே ;-) (சும்மா நம்ம கூட கம்பேர் பண்ணிக்க தான்)
Post a Comment