Wednesday, June 23, 2004

ஒரு பெப்சி நேரம்....

ஹெல்லோ பெப்சி உங்கள் ஜாய்ஸ்....

ஹெல்லோ யாருங்க..உமாங்களா? பெப்சி உமாங்களா? சன் டிவி பெப்சி உமாங்களா? உண்மையாத்தானே சொல்லுறீங்க, ஐயோ சந்தோசமா இருக்கே! ஏங்க, உண்மையிலே பெப்சி உமாங்களா? ஐயோ..நிஜமாவே பெப்சி உமாங்களா?

ஹா ஹா ஹா (சிரிக்கிறார்)

ஆமாங்க, நான் தான். சொல்லுங்க, உங்க பேரு என்ன? எங்கேயிருந்து பேசுறீங்க. என்ன பண்ணிண்டுருக்கேள்?

ஐயோ..சந்தோசமா இருக்கே! ஏலே சொக்கா, இங்க வாங்கடா, உமாடா..நம்ம உமாடா, ஐயோ சந்தோசத்துலெ கை காலெல்லாம் டைப்படிக்குதே!

சார், உங்களுக்கே இது நல்லாயிருக்கா? முதல்லே பேர் சொல்லுங்க. எங்கேயிருந்து பேசுறேன்னு சொல்லுங்க.

ஐயோ!! மேடம் நீங்க அழகா சிரிக்கிறீங்க, அழகா இருக்கீங்க, உங்க குரல் ரொம்ப இனிமை மேடம். ஐயோ!! ஏங்க பொய் சொல்லிடாதிங்க, நீங்க பெப்சி உமாதானுங்களே! நம்பமுடியலையே!

ரொம்ப தாங்க்ஸ்ங்க. ரொம்ப ரொம்ப ரொம்ப தாங்க்ஸ். இன்னுமா நம்ப முடியலை? பெப்சி உமாதான்.

ரொம்ப நாளா உங்ககிட்டே பேசணுமுன்னு இருந்தேன். இப்போதான் கெடைச்சிருக்கு. ஐயோ இன்னும் நம்ப முடியலையே! பெப்சி உமாங்களா? உண்மையைத்தானே சொல்லுறீங்க?

ஏங்க, இதெல்லாம் கொஞ்சம் ஓவராத்தெரியலை! பெப்சி உமாதான். உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுத்தா? எத்தனை குழந்தைகள்?

ஐயோ அதெல்லாம் இருக்கட்டும். நீங்க பெப்சி உமாதானுங்களே! உங்க பையன் ஆதர்ஷ் எப்படியிருக்குறான், அவரோட அப்பா எப்படி இருக்கார்? உங்க ஆத்துக்காரர் நல்லாயிருக்காரா?

சார். எல்லாம் நல்லா இருக்கா. நீங்க சொல்லுங்க, நீங்க சமத்தா, அசடா?

சமத்தா? அப்படின்னா? அதிருக்கட்டும். ஐயோ பெப்சி உமா தானுங்களே! பெப்சி உமா எங்கூட பேசுறாங்களே! ஐயோ இந்த நேரம் பாத்து வீட்டுல யாரும் இல்லையே!!!!!!!

சரி, சொல்லுங்க. என்ன பாட்டு வேணும்?

இருங்க, இப்ப பாட்டா முக்கியம். ஐயோ பெப்சி உமா பேசுறாங்களே! உங்க புடவை ரொம்ப நல்லாயிருக்கும்ன்னு எல்லாரும் சொல்லுறாங்க. நீங்க அழகா சிரிப்பீங்க. உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்வீட். ஐயோ.. பெப்ப்சி உமா எங்கூட பேசுறாங்களே! எத்தனை தடவை உங்ககூட பேசணுமுன்னு நெனைச்சேன். கடைசியா பேசிட்டேன்.

ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்ங்க. இதெல்லாத்துக்கும் நீங்கதான் காரணம். உங்களோட அன்பு. உங்களோட ஆதரவு. இந்த நிகழ்ச்சிக்கு நீங்க கொடுக்குற ஆதரவும் அனுசரனையும்தான் காரணம். ரொம்ப ரொம்ப தாங்க்ஸ். டிரை பண்ணிண்டே இருங்க. டிரை. டிரை...கீப் ஆன் டிரையிங்க். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

(பின்குரல்: ஏம்மா, இதையே எத்தனை தடவைதான் சொல்லிண்டு இருப்பே? எல்லாம் சரி. அந்த புடவைத்தலைப்பை பிராண்டிண்டு இருக்கியே! அதை மட்டும் விடக்கூடாதா?)

இல்லேங்க. பெஸ்ட் லக் திஸ் டைம். கிடைச்சிருச்சே! உங்க கூட பேசிட்டேனே...ஆஹா! ஏங்க, கடைசியா உண்மையாச்சொல்லுங்க. நீங்க பெப்சி உமாதானுங்களே!

போன் அறைந்து சாத்தப்படுகிறது.

எம்.கே.குமார்.

1 comment:

Anonymous said...

¯Á¡ ܼ §Àº ¨Äý ¸¢¨¼ì¸§ÄýÉ¡ þó¾ Á¡¾¢Ã¢Â¡
¸ðΨà ±Ø¾ÈÐ ?! :-))

¦Ã¡õÀ ¿øÄ¡ Åó¾¢ÕìÌ ¸ðΨÃ. À¡Ã¡ðθû.

«ýÒ¼ý,
'ÍÀ㸡'
ganesamurthy@yahoo.com

Search This Blog