எச்சரிக்கை: 1. தனக்குப் பிடித்தவர்களாய் அழைத்து அவர்களுக்கும் முதுகு சொறிந்து தானும் சுகமாய் சொறிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு!
எச்சரிக்கை: 2. தனது வட்டத்தை விட்டு வெளியே வராத குறுகிய மனப்பான்மையோடு 'எங்கிட்டே இம்புட்டு இருக்கு; உங்கிட்டெ என்ன இருக்காம்?' என்று தற்பெருமை 'கணக்கு' காட்ட முனைபவர்களுக்கு!
எச்சரிக்கை: 3. 'நம்மையும் யாராவது அழைப்பார்கள்; பிறகு எழுதலாம்' என்று காத்திருப்பவர்களுக்கு!
எச்சரிக்கை: 4. ஆங்கிலப்பெயர்களுக்கும் புத்தகங்களுக்கும் கடகடவென்று கூகுளைத் தட்டும் நண்பர்களுக்கு.!
எச்சரிக்கை: 5. எல்லாம் படித்து முடித்து 'இவரு மட்டும் எதுக்கு பத்துப்பேரை கூப்பிட்டுருக்காரு?!' என்று முனகுபவர்களுக்கு!
***************************
நன்றி:1. பித்தளை மற்றும் மண் சாமான் சட்டிகளை, சுருங்கிய தனது பாவாடையை மடித்து உள்ளே அள்ளிப்போட்டு, 'அதெல்லாம் உஞ்சாமான், இதெல்லாம் எஞ்சாமான்; வெளையாடுறவரைக்கும் வெச்சுக்க, அப்பொறம் குடுத்துறணும் சரியா' என்று கேட்டு கூட்டாஞ்சோறு வெளையாட்டில் என்னையும் கூட்டு சேர்த்த, 'பால்யகால பருவகால' சில குழந்தைத்தெய்வங்களுக்கு!
நன்றி: 2. ஒரு அறை முழுவதையும் புத்தகத்துக்கு ஒதுக்கி மினி லைப்ரேரியாய் தனது இல்லத்தை வைத்திருக்கும் அவ்வப்போது புத்தகங்களையும் அன்பளிப்பு தரும் நண்பர் மானாஸாஜென்னுக்கு!
நன்றி: 3. 'வா, வா! இப்போ புத்தகத்தால் வெளையாடலாம். இதெல்லாம் நான் படிச்சேன்; எதெல்லாம் நீ படிச்சாய்!' என்று ஆர்வத்தோடு அழைத்த இனிய தோழி ஜெயந்தி சங்கருக்கு!
********************
எனது படுக்கையறையைச்சுற்றி இன்று புத்தகமாய் கிடப்பவைகளின் எண்ணிக்கை, ஏறக்குறைய அறுபது + இருக்கும். இந்தியாவில் ஒரு 50+. (பாதி ஓஸியில் போய்விட்டது!) ஆங்கிலம் தமிழ் எல்லாம் சேர்த்துத்தான்.
1.ஸ்ரீ மத் பகவத் கீதை-சுவாமி சித்பவானந்தா உரையுடன்
பகவத் கீதை- தமிழில் பாரதியார்
2. இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம்- ரூமி
3.சித்தர் பாடல்களின் மொத்த தொகுப்பு.
4. தமிழ் இலக்கிய வரலாறு-.மு.வ
5.பாரதியார் கவிதைகள் -2
6.பாரதியின் சரித்திரம்-செல்லம்மாள் பாரதி எழுதியது.
7.சத்திய சோதனை-
மகாத்மாவின் மொழிகள்
8.காலச்சுவடு கவிதைகள்
9. காலச்சுவடு நேர்காணல்கள்
10. ஜே ஜே சில குறிப்புகள்
11. உப பாண்டவம், துணையெழுத்து
12.கலாப்ரியா கவிதைகள் தொகுப்பு 2
13.அசோகமித்திரனின் கட்டுரைத்தொகுப்பு (காலக்கண்ணாடி)
14. 18 வது அட்சக்கோடு அசோகமித்திரன்
15.திலீப்குமாரின் சிறுகதைத்தொகுப்பு
16.இரா.முருகனின் நாவல் மற்றும் சிறுகதைத்தொகுப்பு.
17.பாராவின் கட்டுரைத்தொகுப்பு, நாவல், சிறுகதைத்தொகுப்பு,
18.சேவியர் கவிதைகள்
19. சொக்கனின் 'சச்சின்' மற்றும் சில புத்தகங்கள்
20.கிராவின் 'வயது வந்தவர்களுக்கு மட்டும்'
21.காலச்சுவடு கண்ணனின் 'வன்முறை வாழ்க்கை'
22.ஜெ கே யின் 'அறிந்ததினின்றும் விடுதலை!'
23.பொன்னியின் செல்வன்
24.Eight Keys to Greatness-GENE. Landrum
25.The laws of nature
26.How to become a successful speaker-DOn Aslett.
and some 'HOT' novels!
இது போக இன்னும் பல புத்தகங்கள்!
அண்மையில் படித்தவை!
1. புயலிலே ஒரு தோணி ப.சிங்காரம். (விரைவில் எனது பார்வை வரும்!)
2.பால் நிலாப்பாதை -இளையராஜா (பாரதிராஜா,கமலஹாசனின் முன்னுரை!)
3.பால்வீதி-அப்துல் ரகுமான் (வேலிக்கு வெளியே தலையை நீட்டிய என் கிளைகளை வெட்டிய தோட்டக்காரனே! வேலிக்கு அடியில் நழுவும் என் வேர்களை என்ன செய்வாய்?)
4.தமிழில் ஒரு முழுமையான பாலியல் நூல்- டாக்டர். மாத்ருபூதம். (பெயர் மறந்து போச்சு! நன்றாக எழுதப்பட்ட ஒரு நூலில் ஆங்காங்கு தமிழ் சினிமாப்பாடல் வரிகள் வந்து வெறுப்பேத்துகின்றன!)
5.அகிரா குரோசோவா-சுயசரிதை (பாதியில் நிற்கிறது!)
6.மூத்த தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய ஜெயமோகனின் விமர்சனக்கட்டுரைகள் (3 பேரூக்கு ஒரு புத்தகமாய் வெளியிட்டிருக்கிறார்!)
7. மாலதி மைத்ரியின் அண்மைய கவிதைத்தொகுப்பு
8.குட்டி இளவரசன்
9. கிராவின் முழு சிறுகதைத்தொகுதி-அகரம் வெளியீடு
10.புதுமைப்பித்தனின் கடிதங்கள்- தனது மனைவிக்கு!
எனக்குப்பிடித்த புத்தகங்கள்!
1. மோகமுள், செம்பருத்தி, அம்மா வந்தாள் மற்றும் மரப்பசு -தி.ஜானகிராமன்
2. புயலிலே ஒரு தோணி ப. சிங்காரம்
3. ஜே.ஜே சில குறிப்புகள்- சுந்தர ராமசாமி
4. உப பாண்டவம்- எஸ்.ரா
6.திசைகளின் நடுவே-ஜெயமோகன்
7. குட்டி இளவரசன்
8.பொன்னியின் செல்வன் கல்கி
9.பிரிவோம் சந்திப்போம் சுஜாதா
10. மெர்க்குரிப்பூக்கள் பாலகுமாரன்
11. ஜண கண மண-மாலன்
12. எண்ணங்கள்- எம்.எஸ்.உதயமூர்த்தி
அடிக்கடி புரட்டும் நூல்கள்:
1.சித்தர் பாடல்கள்
2.பாரதியார் கவிதைகள்(வாரம் ஒருமுறை!)
3. அசோகமித்திரனின் காலக்கண்னாடி
4. திருக்குறளின் ஆங்கிலப் பதிப்பு
ஒரு தொடருக்காக படித்துக்கொண்டிருக்கும் நூல்கள்:
1. முன்னாள் தலை மகன் லீ குவான் இயூ
2. The singapore story
3.From third world to first!
4. the leaders of singapore
5. சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சி குறித்தான ஆய்வுகள்
6.Management of Success-singapore story.
இனி நான் அழைக்கப்போகும் சிலர்:
1.ஈழநாதன்
2.மானஸாஜென்
3.எல்.ஏ.ராம்
3.அருண் வைத்தியநாதன்
4.குழலி
5.மூர்த்தி
6.டிசே தமிழன்
7.கார்த்திகேயன் ராமசாமி
8.செல்வராஜ்
9.முத்து
10.நாராயணன்
11.துளசி கோபால்
12.செல்வநாயகி
5 comments:
//எனது படுக்கையறையைச்சுற்றி இன்று புத்தகமாய் கிடப்பவைகளின் எண்ணிக்கை,
ஏறக்குறைய..... //
அதையெல்லாம் ஒதுக்கி வச்சிட்டு, வீட்டை கொஞ்சம் ரம்மியமாக்கும் காலம் வந்துட்டதே:-))))
என்னையும் ஆட்டத்துக்குச் சேத்துக்கிட்டதுக்கு நன்றி. ஆனால் அப்படி ரொம்ப ஒண்ணும் நம்ம
'கஜானா'வுலே இல்லையேப்பா(-:
பாக்கறென், ஏதாவது தேறுதான்னு!
Hi Kumar,
Nice to read your and others sharings of read books and related...
Yes,,,your art of writing superb...well attractive..
You mentioned about Dr.Mathruputahm's one book..hope it's "Puthira Punithama"(It's a collection of his interview on TV program with Dr.Sharmaila{TV ACtress}).Is it correct?
Thanks for sharing other interesting books...
After your Registration and etcc...could i boorrow "JJ Sila kuripukal",ecause i haerd this name somewhere else also...and remeber the seen in "JJ" Thamil film also..Could you lend me?
Advance wishes for your wedding.Hope to see you on Registration function and lunch.
Anpudan,
Shanthan
ஹாஹாஹா... படித்து விட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.. :-)
ஆயினும் நல்ல களஞ்சியம்!
முதல் வருகை உங்கள் பதிவிற்கு..
இன்னும் அடிக்கடி எழுதலாமே நீங்கள்!
பகவத்கீதை வைத்திருந்தேன். ஆனால் அதிலே தமிழும் கிந்தியும் கலந்திருந்தன. அதனால் வாசிக்க முடியாது போய் விட்டது.
சித்தர் பாடல்கள் தற்சமயம் என்னிடமுள்ளவற்றில் உள்ளது.
செம்பருத்தி என் வீட்டுக்கு வந்த போது நான் புலம் பெயர்ந்து விட்டேன். தங்கை அது பற்றிக் கடிதத்தில் ஒருமுறை எழுதியிருந்தாள். என்னைக் கண்டிப்பாக வாசிக்கச் சொன்னாள். இதுவரை கிடைக்கவில்லை.
உங்களிடமுள்ள பல புத்தகங்களை இதுவரை நான் காணக்கூட இல்லை.
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி துளசியக்கா, மூர்த்தி, ஷாந்தன், மேக்னஸ் மற்றும் சந்திரவதனா!
ரம்மியாக்கும் வேலை நடக்குது துளசியக்கா!
மூர்த்தி, சுட்டபழம் புளிக்கும்! :-)
ஷாந்தன், ஆமாம் அது புதிரா புனிதமாதான். நகைச்சுவை கலந்து எழுதப்பட்ட அப்புத்தகத்தின் நடுவே ஆங்காங்கு சினிமா பாடல்கள்! எரிச்சல்!
மேக்னஸ், முதல் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி! அடிக்கடி எழுத மட்டுமல்ல, எழுதிக்கொண்டே இருக்க ஆசைதான்! நேரம்? :-(
சந்திரவதனா மேடம், செம்பருத்தி கதாநாயகன் சட்டநாதன் என் குளோஸ் ஃபிரெண்டு. :-)
எம்.கே.
Post a Comment