சினிமா நடிகைகளின் வாழ்வுபற்றி கிசுகிசுவைத்தவிர நான் என்ன எழுதினாலும் அது யாருக்கும் புதிதாய் இருக்கப்போவதில்லை. கிசுகிசு ஒன்றுதான் மார்க்கண்டேயத்தனம் கொண்டது. தமிழ் சினிமாவில் நடித்த முதல்பெண்மணியிலிருந்து இன்றைய புது ஹீரோயின் வரை, எம்.கே.டி யிலிரூந்து சிம்பு, ஜெய் ஆகாஷ் வரை எல்லோருக்கும் கிசுகிசு இருக்கிறது. அதெல்லாம் இருக்கட்டும். வாழ்வில் அதெல்லாமில்லாவிட்டால் சுவையிருக்குமா?
நான் சொல்ல வந்தது, நடிகைகளின் வாழ்வு பற்றி. உறவுகளின் பண ஆசையோ, அன்பென்றால் விலை என்ன என்று கேட்கும் குடும்பத்தார்களோ, இதுதான் சந்தர்ப்பமென்று உள்ளே புகுந்து காதல் நாடகமாடி, கர்ப்பமாக்கிவிட்டு தவறான கிசுகிசுவை பரப்பிவிட்டு, எனது குடும்பத்தினர் சொல்லியதால் வேறு பெண்ணை மணந்துகொண்டேன் என்று சொல்லும் சக திரைத்தொழிலாளர்களோ இவர்களால் அல்லது இவைகளால் எப்படி ஒரு நடிகை நிஜத்தில் சீரழிகிறாள் என்பதுதான் அது.
எல்லாம் நம்பிக்கைகளும் முடியும் தருணத்தில் என்ன செய்வார்கள் இந்த அபலைகள்? எல்லாப் பெண்களுக்கும் உள்ள ஒரே வழி! நடிகைகளானாலும் இவர்களும் பெண்கள்தானே? தற்கொலை! போ. இனிமேல் இவர்கள் யாரிடம் பணம் வாங்குகிறார்கள் பார்க்கலாம்? யாரிடம் தா தா என்று பிடுங்கப்போகிறார்கள்? அவனும்கூட துரோகம் செய்துவிட்டான்? அவனுக்கும் எனது உடல்தான் பிரதானமா? இனி எதன் மேல்புரண்டு படுப்பான்? இந்த உலகத்தில் யாருக்குமே நான் மனுஷி என்று தெரியவில்லையா? பணம்,பணம்,பணம்..மேலும் உடல்!
எதுவும் வேண்டாம் போ! இப்படித்தான் நடந்து முடிகிறது அவர்களின் வாழ்வு. கவர்ச்சி நடிகையாய் இருந்தாலும் சரி குடும்ப நடிகையாய் இருந்தாலும் சரி, தேசியவிருது வாங்கிய நடிகையாயிருந்தாலும் சரி. இதுதான் கதி.
மீராஜாஸ்மின் எனக்குப்பிடித்த நடிகைகளில் ஒருவர். நடிப்பிலும் சரி இன்னபிற ஊடகங்களாலும் சரி! அண்மையிலொரு விருது வழங்கும்மேடையில் அச்சின்னஞ்சிறிய தேவதை கண்ணீர் கலங்கி அழுகிறது. காரணமென்ன இருக்கமுடியும்? மேற்சொன்ன துரதிஷ்டங்கள்தான்! பாவம். நடிப்பில் தேசிய விருதுபெற்ற அழகான நடிகை! உறவினர்களைப் பிடித்து கழுத்தை நெறித்துக் கொலை செய்யவேண்டும் போல எனக்குக் கோபம் வருகிறது. தேவதைகள் அழலாமா? அல்லது அழத்தான் விடலாமா?
எம்.கே.
5 comments:
பராவால்ல, மீரா ஜாஸ்மினுக்காக வருத்தப்பட என்னோட, இன்னொரு ஜென்மமும் இருப்பதுகண்டு - வருத்ததிலும் மகிழ்ச்சி.
மனதைப் பாதித்த சம்பவம் 1அந்த ஒன்றை இப்பொதான் பார்த்தேன், ஓ தொடரா... வாழ்த்துக்கள்.
"///உறவுகளின் பண ஆசையோ, அன்பென்றால் விலை என்ன என்று கேட்கும் குடும்பத்தார்களோ, இதுதான் சந்தர்ப்பமென்று உள்ளே புகுந்து காதல் நாடகமாடி, கர்ப்பமாக்கிவிட்டு தவறான கிசுகிசுவை பரப்பிவிட்டு, எனது குடும்பத்தினர் சொல்லியதால் வேறு பெண்ணை மணந்துகொண்டேன் என்று சொல்லும் சக திரைத்தொழிலாளர்களோ இவர்களால் அல்லது இவைகளால் எப்படி ஒரு நடிகை நிஜத்தில் சீரழிகிறாள்///"
naanum seithi paarthu varunthinen. nadikaithane entru thiddupavar maththiyil.. unkalai pola manitha neyarkal iruppathu kandu makilchchi.
நான் மீரா ஜாஸ்மின் அவர்களை பாராட்டுகின்றேன். தான் சுரண்டப்படுகின்றேம் என அறிந்த பின் தன் உணர்வை மறைத்துக் கொள்ளாமல் தான் முதலில் ஒரு மனுஷி என்று ஓங்கி அறையும் விதத்தில் தெரிவித்தமைக்கு. இதனால் வரும் பின் விளைவுகள் குறித்து கவலைப்படாமல் தன் குரலை (அது அழுகையாக இருந்தாலும்) உரத்து சொன்னது எனக்கு சில புரிதல்களை கொடுக்கின்றது.
அவரை இந்நிலைக்கு கொண்டு வந்தவர்களை சட்டத்தின் பிடியில் ஒப்படைக்க அவர் தயங்கக் கூடாது. உறவுகளின் பெயர்களை கூறி சுரண்டுவது நம் சமூகத்தில் புதிதல்ல என்றாலும், அத்தகைய அனைவருக்கும் ஒரு அபாய மணியாக இச்செயல் இருக்கும் என நம்புகின்றேன்.
Post a Comment