Monday, October 25, 2004

நிஜமா கண்ணா நிஜமா?

வாசலில் வீரப்பனின் மகள்கள் வித்யாராணியும், பிரபாவும் நின்றுக் கொண்டிருக்க... அவர்களிடம் பேச்சு கொடுத்தோம். பிரபா நம்மிடம்,

"டாடியை போலீஸ் அங்கிள்ஸ் சுட்டுக் கொன்னுட்டாங்க. டாடியை போட்டோவுல தான் மம்மி காட்டினாங்க. இப்போதான் நேர்ல பார்த்தேன். எங்க டாடிகிட்ட மான், யானையெல்லாம் இருந்திருக்கு. மம்மி கூட்டிக்கிட்டுப் போய் காட்டுறதா சொன் னாங்க. காட்டவே இல்ல. எங்க டாடியை நான் பார்க்கலனாலும் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். எங்க டாடியைக் கொன்ன போலீஸ் அங்கிள்ஸை நான் பெரிய பொண்ணாகி டுமீல்னு சுட்டுக் கொல்லுவேன் என திக்கித்திணறி சொன்னாள்."

"தமிழ் துப்பறியும் இதழ்களுக்குத் தாங்கள் எழுதும் எதைப்பற்றியும் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஜேம்ஸ் பாண்ட் போலக்கொல்வதற்கான உரிமம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒருவரைப் பற்றி -- பரபரப்பாக எழுதினால் விற்பனை அதிகமாகும் என்ற வணிக நோக்கத்தினால் - அவை செய்திகளை உருவாக்குகின்றன.
இன்று தமிழகத்தில் செய்திகளை ஆய்வு செய்தும் எழுதும் எழுத்திற்கான தேவைதான் உள்ளது. கதாசிரியர்களை வைத்து செய்திப்பத்திரிகை நடத்தும் போக்கு செத்து ஒழிய வேண்டும்"

---'காலச்சுவடு' கண்ணன் ஒரு கட்டுரையில்.

இந்த இரண்டு துணுக்குகளுக்கும் ஏதாவது சம்பந்தமிருப்பதுபோல் தோணவேண்டும் உங்களுக்கும். தோணுகிறதா?

பத்தாவது படிக்கிறாராம் வீரப்பன் மகள் திவ்யா. அவரை விட மூத்தவர் வித்யா ராணி. ஆனால் மேலே சொல்லப்பட்ட வீரப்பன் மகளின் வாக்குமூலம் ஒரு எல்.கே.ஜி படிக்கும் குழந்தையின் வாக்குமூலத்திற்கு நிகராயிருக்கிறது. இது நிஜமாகவே நடந்திருக்கக்கூடியதா? 'போலீஸ் அங்கிள்ஸ், அவரை நான் பெரியவளாகி சுடுவேன்' என்பதெல்லாம் அழ. வள்ளியப்பாவின் கதைகளில் வரும் காட்சிகள் போலல்லவா இருக்கிறது?

ஊடகங்கள் வழியாகப் பார்த்தபோது அப்பெண்களிருவரும் சுற்றியிருந்தவர்கள் அழுததாலேயே கண்கள் கலங்கினர். அதுவுமில்லாமல் பிறந்ததிலிருந்து இன்றுவரை எப்போதும் பார்த்திராத பேசியிராத அப்பா என்பவரைக் காட்டி செத்துப்போய் விட்டார் என்று சொன்னால் என்ன உணர்வு வரும்? ஏதோ திடீரென்று தங்கள் மீது வந்து விழும் ஊடக ஒளியிலும் பாடுகளிலும் தடுமாறி திருவிழாவில் தடுமாறும் குழந்தைகளைப் போலவே அவர்கள் என் கண்களில் நின்றனர். ஆனால் பத்திரிகைகள் அப்படியா எழுதுகினறன?

எம். கே.


4 comments:

பினாத்தல் சுரேஷ் said...

A good and responsible post MK Kumar.

When I first read the comment you cited in JV, I felt like being inside a theater, (just before titles on)seeing an Action movie!

rajkumar said...

குமார் சார்,

அழ வள்ளியப்பாவை குழந்தை கவிஞராகத்தான் தெரியும். கதை எழுதியிருக்கிறாரா?

அப்படியிருந்தாலும் துப்பாக்கி, பழிவாங்குதல் போன்ற கதைகளை எழுதியிருக்க மாட்டார்.

முத்துக் காமிக்ஸ் கதைகளை உதாரணம் காட்டியிருக்கலாம்.

அன்புடன்

ராஜ்குமார்

Anonymous said...

see another report in the AV with Praba. Totally different scenario.
http://www.vikatan.com/av/2004/oct/31102004/av0202.htm
What to say? Like Nakkeran Gopal, these reporters should be put into jail for child abuse too

Anonymous said...

காரைக்குடி அண்ணாச்சி, தேரப்பாருன்னா தெப்பத்தப் பாக்குறீயலே! சரி, மாத்திப் போட்டுக்குங்க. :)

சுரேஷ் அவர்களுக்கும் பொத்தாம்பொது நபருக்கும் கூட எனது நன்றிகள்.

எம்.கே.

Search This Blog