சிங்கை நண்பர்கள் சந்திப்பு.
எத்தகைய நீண்ட பயணமும் ஒரு முதல் அடியிலிருந்துதான் துவங்கும்!
முதல் அடிக்கு வித்திட்ட நண்பர்கள் மூர்த்தி, அன்பு, திறம்பட நடத்திக்காட்டிய (இரவு உணவையும் இனிமையாக சரவணபவனில் வழங்கிய) திரு மற்றும் திருமதி சித்ரா ரமேஷ், உடல்நிலைக்குறைவையும் பொருட்படுத்தாது (கையில் குளோப் ஜாமூனோடு) கலந்து கொண்ட எழுத்தாளர் ஜெயந்தி சங்கரி, திடீர் வரவாய் யாரும் எதிர்பாரா வண்ணம் வந்து கலந்து அசத்திய திரு. நா. கண்ணன், அவரை அழைத்து வந்த நண்பர் ஈழநாதன், எதிர்பாராவிதமாய் கலந்துகொண்ட திரு. மாகோ, திரு. அருள்குமரன், திரு.பாலு மணிமாறன், திரு.விஜய், திரு. செந்தில்நாதன், திரு. தாமரைக்கண்ணன் மற்றும் இடவசதி மற்றும் சூடாக டீயும் பரிமாறி எல்லா விதத்திலும் உதவிய திரு. திருமதி ராம்ஜி ஆகிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
நண்பர்கள் இச்சந்திப்பு பற்றி விரிவாக வலைப்பூக்களில் பதிந்துள்ளதால் நான் இப்போதைக்கு ஒன்றும் எழுதப்போவதில்லை. தவறிய விஷயம் ஏதும் இருப்பின் பிறகு எழுதுகிறேன்.
நான்கு மணி நேரங்கள் ஏதோ நான்கு நிமிடங்கள் போல கடந்து போக இனிமையான மாலையை நண்பர்களோடு பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் வணக்கங்களும்!
எல்லாம் வல்ல இயற்கையின் அருளால் மீண்டும் விரைவில் இணைவோம்.
நன்றி!
எம்.கே.குமார்.
2 comments:
நானும் சாருவுடன் msn messengerல் chat செஞ்சிருக்கேன்.நான் ஆண்னு தெரிஞ்சதும் அவர் என்னோட chat செய்றதை விட்டுட்டார். நானும் சாரு is not a ladyன்னு தெரிஞ்சு போய் disappoint ஆகி அவரோட chatங்கை நிறுத்திட்டேன். ஹிஹிஹி
தப்பா பின்னூட்டம் போட்டாலும் 'ஓவியம்' மாதிரி வந்து ஒரு பின்னூட்டமாவது போட்டீங்களே மகராசி/ மகராசா--நல்லாயிருக்கணும் நீங்க! :-)
எம்.கே.குமார்.
Post a Comment