Thursday, February 17, 2005

'ஜி' சொல்லும் சேதி!

தமிழ் சினிமா வரலாற்றில் நல்ல டைரக்டர்கள் கூட ஏதோ நடுராத்திரியில் பதறியடித்து எழுந்து உட்கார்ந்தவர்களைப்போல அதீதமாய் சில அரசியல் படங்கள் எடுப்பதுண்டு!

கே.பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், விக்கிரமன் இப்படி நிறைய பெரிய ஆட்கள் கூட எதிர்பார்த்த அளவு அதில் வெற்றியடையவில்லை. இந்த வரிசையில் இப்போது ஆனந்தம் லிங்குசாமியும் சேர்ந்திருக்கிறார்.

கீரோ, அரசியலில் நாயகனாய் நின்று ஜெயித்து கோட்டைக்குப்போவதாய் காட்டி அதை ஓடவைப்பதற்கு பலபேர் கரணம் போட்டும் பார்த்துவிட்டாலும் அதில் மிகச்சிலர் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஒரு அரசியல் படம் ஆந்திராவில் ஓடுவதைப்போல இங்கு ஓடாதா? ஓடும்!

தகுந்த அளவு மசாலா சரியான கலவையில் இருந்தால் சாதிக்கலாம் என்று தலைவர் எம்ஜிஆர் எப்போதே செய்து காட்டி விட்டார். அரசியல் படம் எடுத்து ஓடுகிறது என்றால் அதில் இருக்கவேன்டிய காரம், மணம் அனைத்தும் சரியாய் இருக்கவேன்டும்.

அமைதிப்படையில் கூட கதாநாயகன் முதல்வராக ஆகமுடிவதில்லை.

முதல்வராய் ஆகவேண்டும் என்றால் அவருக்கு உப்புக்கருவாட்டையும் ஊறவெச்ச சோத்தையும் சொல்லிக்கொடுக்கவேண்டும் என்பதை ஷங்கர் கண்டு கொண்டிருந்தார். அதனால் அவரால் அதில் வெற்றி பெறமுடிந்தது.

இந்நிலையில் இதெல்லாம் தெரிந்தும் எந்த நம்பிக்கையில் இப்படியொரு படத்தை லிங்குசாமி எடுத்தார் என்பது புரியவில்லை.

மைனஸ்: கதை
திரைக்கதை
டைரக்ஷ்ன்
திரிஷா
அஜித்
சுத்தமாக காமெடியே இல்லை!


பிளஸ்: கொஞ்சம் டயலாக்ஸ்
தாவணி போட்ட பெண்கள்! :-)
ஒரு பாட்டு
விஜயகுமார் (கெட்டப்)
எவ்வளவு தேடியும் வேறெதுவும் கிடைக்கவில்லை.


எம்.கே.குமார்

7 comments:

Vijayakumar said...

தேடுங்க தேடுங்க.... தேடிக்கிட்டேயிருங்க...







ஆனா என்ன ஒன்னுமே உண்மையிலே கிடைக்காது.... :-)

ilavanji said...

டைரக்டரு இருக்கிற திறமையையெல்லாம் கொண்டு போய் ஹீரோவோட பொச்சுக்கு பொறகால வச்சிட்டு ஹீரோயிசத்த தூக்கிப்பிடிக்கர படம் எடுத்தா இப்படித்தான்...

படமும் வெளங்காம, ஹீரோவும் வெளங்காம, டைரக்டரும் வெளங்காம, படம் பாத்த நாமும் வெளங்காம... ஜீ... அஜித் வாய்க்கு அடுத்த ஆப்பு...

மீனாக்ஸ் | Meenaks said...

இசையும் இன்னொரு மிகப்பெரிய மைனஸ்..

Narain Rajagopalan said...

inside information. என் நண்பனின் நண்பர் இந்த படத்தில் துணை இயக்குநராக பணிபுரிந்துள்ளார். இந்த படத்தின் ரிசல்ட், படம் வருவதற்கு 3 மாதங்களுக்கு முன்னாலேயே தெரியும். பின்ன, எப்ப பார்த்தாலும்,கேரவன் வேனுக்குள்ளேயே ஹீரோவும், ஹீரோயினும் கதையை 'டிஸ்கஸ்' பண்ணிக்கிட்டு இருந்தால் எப்படி உருப்படும்?

வசந்தன்(Vasanthan) said...

நரைன்! என்ன கிசுகிசு தொடங்கீற்றியள் போல கிடக்கு

Narain Rajagopalan said...

வசந்தன், நான் கேட்டது மட்டும்தான் சொல்றேன். கிசுகிசு அது தினமலர், தினத்தந்தி வேலை...நீங்க சொல்லுங்க, உங்களுக்கு பிடிக்கலைன்னா அந்த பின்னூட்டத்தை தூக்கிடறேன்.

Anonymous said...

ஆர் சொன்னது "ஜீ" ஒரு காமடி என்று? அது ஒரு படம் பார்த்து ரசிப்பதுக்கு...

ஆஜீத் தான் நல்ல நடிகர்...

Search This Blog