சாருவும் நானும்!
_______________
அருள்குமரன், எம்.கே.கே, சாரு மற்றும் ஈழநாதன்
__________________
"புதுமைப்பித்தன் ஒன்றும் இவர்களெல்லாம் புகழ்வது போல பெரிய ஆள் கிடையாது. ஜாதீயத்தையும் அது சார்ந்த கட்டுப்பாடுகளையும் விட்டு வெளிவந்து அவரால் எதுவும் படைக்கமுடியவில்லை" --சாரு.
_____________________
"சுஜாதாவின் வெகுஜன எழுத்து எனக்குப்பிடிக்கும், ஆனால் அதை வைத்து அவர் எதையும் சாதிக்கவில்லை. ஆரம்பத்திலேயே அவர் நின்றுகொண்டிருந்தார். அதைவிட்டு அவர் நகராததில் எனக்கு வருத்தம். உண்மையில் சொன்னால், கமல், வெகுஜன ஊடகமான சினிமாவில் செய்துபார்த்த நவீனத்துவம் எதையும் இவர்களில் யாரும் எழுத்தில் செய்யவில்லை!"--சாரு.
எம்.கே.குமார்.
7 comments:
என்ன குமார், அல்வாசிட்டி விஜய் வரலியா ? அருள் குமரன் கிட்ட சொல்லுங்க, சென்னையில பார்த்ததுக்கு இப்ப நல்ல ஷேப்-ல இருக்காருன்னு.
ஈழநாதன் சாரு நிவேதிதாவின் சந்திப்புக்காய் gymற்கு ஒருமாதமாய் போனது உண்மைபோலத்தான் கிடக்கிறது :))
படங்களுக்கு நன்றி குமார்
டி.சே.கனடாவில் எங்காவது இலக்கியக் கூட்டத்திற்கு பாதுகாப்பிற்கு ஆள் வேண்டுமானால் என்னைத் தாராளமாகக் கூப்பிடலாம்(அடியாள் என்றுகூட ஒருத்தர் செல்லமாகத் திட்டினார்)
மூர்த்தி ஆபிதின் பற்றி மட்டுமல்ல ஷோபாசக்தி போன்றோரை தூக்கிப் பிடித்துவிட்டு அவர்களையே சாரு தாக்கி எழுதியது அவருடைய உன்னத சங்கீதம் போன்ற பலவிடயங்களைக் கிளற வேண்டுமென்றுதான் போயிருந்தேன் ஏனோ அவருடைய பூசி மெழுகும் பேச்சைக் கேட்டவுடன்மன் எதுவுமே பேசாது உட்கார்ந்திருந்தேன்.
நானும் சாருவுடன் msn messengerல் chat செஞ்சிருக்கேன்.நான் ஆண்னு தெரிஞ்சதும் அவர் என்னோட chat செய்றதை விட்டுட்டார். நானும் சாரு is not a ladyன்னு தெரிஞ்சு போய் disappoint ஆகி அவரோட chatங்கை நிறுத்திட்டேன். ஹிஹிஹி
நரைன், டிசே தமிழன், மூர்த்தி, ஈழநாதன் மற்றும் பெ.சொ.நண்பர் ஆகியோருக்கு நன்றி!
விஜய் வரவில்லை. கூட்டம் நடந்தது தெரியாமல் இருக்கலாம்.
எம்.கே.குமார்.
நண்பர்கள் கூடி இலக்கியம் பேசினீர்களா? போரடிக்கவில்லையா? சாரு பேசினால் அதில் கிளுகிளுப்பு இருக்குமே? அதைச் சொல்லுங்கய்யா முதலில்.
அடே தம்பி, சு.பையா. இதெல்லாம் தப்பாக்கும். இப்படில்லாம் பேசக்கூடாது. என்ன இருந்தாலும் எல்லாத்துக்கும் ஒரு வயசு வரணுமில்லே.
நானுந்தான் சில்க் பத்தி ஏதும் பேசுவாருன்னு போனேன், ஆனா ஏமாந்தேன்னு சொன்னேனா? :-)
Post a Comment