'சிங்கப்பூர் எலீசா' சொல்ற கிசுகிசுவைக் கேளுங்க!
சாரு சிங்கப்பூர் வந்தபொழுது, எதேச்சையாக அவருடன் நான் 'சாட்' செய்ய, அவர் சிங்கப்பூரில் அவருடைய நண்பர் ராபின் வீட்டில் தான் தங்கியிருக்கிறார் என்பது எனக்குத் தெரியவந்தது. (ராபினை ஒரு கவிஞராக ஏற்கனவே எனக்குத்தெரியும். திண்ணையில் கவிதைகள் எழுதியிருக்கிறார்.) இருமுறை தொலைபேசினேன். இருமுறை சந்திக்க முயற்சி செய்தேன், அவருக்கு உடம்பு சரியில்லை என்று பதில் வந்ததால் முடியவில்லை. பிறகு உட்லாண்ஸ் நூலகத்தில் நடந்த கலந்துரையாடலில் அவரைச்சந்தித்தேன் கேள்விகளும் கேட்டு அவரைத் தொந்தரவும் செய்தேன். இதெல்லாம் இருக்கட்டும்.
"நேற்றுவரை "சும்மாவும் பிஸியாவும்" இருக்கும்போதெல்லாம் சாருவிடம் பேசிவிட்டு இன்று மட்டும் சாரு "சும்மா" இருக்கும்போது, வேலை இருக்கிறதென்று அந்த நபர் பேசாமல் போனால் எப்படி? ஒரு இலக்கியவாதி என்ன அந்தளவுக்கா இழிநிலைக்குப் போய்விட்டான்.?" அண்மைக்காலமாக சாரு இப்படி அடிக்கடி எழுதுவது போல ஒரு எண்ணம் தோன்றியது. இதுவும் இருக்கட்டும்.
இந்நிலையில் சிங்கப்பூருக்கு வந்திருந்த அவரிடம், "ராபின்-- ஸ்ரீகணேஷ்--அரவிந்தன்(அந்தப்பெண்ணை யாரோ தெரியவில்லை என்கிறாராம். விட்டுவிடலாம் இவரை!)--ஒரு நண்பர்-- ''அவர்''-- லியோ---சாரு நிவேதிதா---" இப்படியானதொரு வட்டத்திற்குள் உலவும் 500 மடல்களும் அடிக்கடி 'சாட்டும்' செய்த (எத்தனை மணி, நிமிட, நொடித்துளிகள்? தெரியவில்லை! சாரு ஞாபகம் வைத்திருப்பார்!) ஒரு பெண் நாகரிகமில்லாமல் நடந்துகொண்டாராம். சாருவின் பக்கத்தில் இப்படி எழுதியிருக்கிறார்.
இடையில் நடப்பது என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. இவருக்கு வேண்டியதை இவரும் அவருக்கு வேண்டியதை அவரும் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் திரிவதாக எனக்கு இதைப் படிக்கும்பொழுது தோன்றியது. எது உண்மையோ தெரியவில்லை. இந்நிலையில் யார் அந்தப்பெண் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
http://charuonline.com/kp130.html
//சிங்கப்பூர் ஒரு சின்ன ஊர். அதிலும் இலக்கியம் வாசிப்பவர்கள் நூறு பேர். அந்த நூறு பேருக்குள் இத்தனை விளையாட்டு விளையாடினால் அது சாத்தியமா? "ராபினோடு பேசி ஒரு ஆண்டு ஆகிறது."-- ரஞ்சிதா. "போன வாரம் கூட ரஞ்சிதா இங்கு வந்தார்களே!"--- லியோ. (ராபினின் சகஅறைவாசி!) /// -- சாருநிவேதிதா.
அத்தனை பேரையும் ஒரு 'சுத்து சுத்தி' ரவுண்டில் விடும் பெண்ணைப்போல அப்பெண்ணைச் சித்தரித்து சாரு எழுதியிருக்கிறார். அப்பெண்ணின் உண்மையான நிலை என்னவோ? யார் அவர் என்பது எனக்குத்தெரிந்தால் நிம்மதியாகத்தூங்குவேன் என நினைக்கிறீர்களா? நமக்கெதுக்கு அது? யாராயிருந்தால் எனக்கென்ன? என் வேலை எழுதிக்கிடப்பதே!
எம்.கே.குமார்.
3 comments:
கடைசியா இன்னாப்பா சொல்ல வாரே?
புதுமைப்பித்தனைப் பற்றி ஒரு பதிவு. அடுத்து இப்படி ஒரு பதிவு. நீங்கள் vesatile எழுத்தாளர் என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும்... இருந்தாலும் அதை நீங்கள் இப்படி ஜலகுலஜென்ஸ் matterகளைப் போட்டு எழுதி நிருபிப்பது ஒரே ' ஜில்பான்ஸா இருக்கு...
அது சரி...சாரிநிவேதிதா என்ற பெண்ணின் photoவை எப்போ காட்டப் போறீங்க சாமியோவ்வ்வ்...: ))))
இன்னாபா இளயெ தள்பதி, கிஸ்கிஸ்ல்லாம் எழுவுனா புர்யாத மனுஷஷனா கீரியே! இப்பொ அதெல்லாம் எலக்கியம் தெர்யாதா!
பாலு நைனா, கண்டுக்காத. போய்க்கினே இரு! சீர்யஸா படம் எடுத்துக்குனே இர்ந்தா இன்னா நல்லாவா இருக்கும்! ஜில்பான்ஸ்ம் இர்க்கட்டுமே! இன்னா சொல்றெ?!
Post a Comment