இலங்கை என்ற நாடு உலக வரைபடத்தில் உதித்த நாளிலிருந்து இன்றுவரை அங்கு நிம்மதியான, நிலையான ஆட்சி என்பதே இல்லை எனவும் இது பரமசிவனின் போக்கால் கோபம் கொண்ட பார்வதியோ இல்லை ஏதோ ஒரு தேவதையோ போட்ட சாபமாகும் எனவும் ரஜினி முன்பொரு "அரசியல் கதாநாயக" மேடையில் கதையாகச் சொன்னார்.
ரஜினியின் அரசியல் பிரவேஷங்களும் அது தொடர்பான பேச்சுகளும் இன்று முடிவுக்கு வந்த நிலையில் அந்த கதையை மட்டும் என்னால் மறக்கமுடியவில்லை.
மறக்கமுடியாததற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அது, அன்றைய காலத்தில் அதாவது ரஜினி அக்கதையைச் சொல்லிய காலத்தில் நான் இலங்கையின் அரசியல் வரலாறு பற்றிய புத்தகமொன்றை படித்துக்கொண்டிருந்தேன். அதிலும் அப்படித்தான் இருந்தது.
தந்தையை வெட்டிக் கொலை செய்துவிட்டு அண்ணன் ஆட்சிக்கு வருவது; தம்பியின் ஆட்கள் அண்ணனை வெட்டிக்கொலை செய்வது; தாய்மாமனின் ஆட்சி. அதுவும் துர்கொலைகளால் முடிவுக்கு வருவது. இப்படியாகத்தொடர்ந்து படுகொலைகள், துரோகங்கள், ஆட்சிக்கவிழ்ப்புகள் என கிபி. 5 ஆம் நூற்றாண்டு தொடங்கி ஒரு நிலையான ஆட்சி என்பது அங்கு இல்லை என்பதை உணரமுடிந்தது.
அண்மையில் ஊருக்குச் சென்றபோது இலங்கை வழியாகச் செல்லநேர்ந்தது. தாவணி போட்ட பெண்கள் அனைவருமே அழகாய் இருப்பதைப்போல இலங்கையும் வானத்திலிருந்து பார்க்க மிக அழகாய் இருந்தது. பண்டாரநாயகா சர்வதேச விமானநிலையத்தில் கால் வைத்தபோது அதன் அழகையும் சுறுசுறுப்பையும் ரசிக்கும் ஆவலையும் மீறி இந்த 'ஆட்சி பற்றிய எண்ணங்களே' என்னுள் வந்து நின்றன.
இப்போதுதான் விமான நிலையம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மிகவும் அழகாக எல்லாவித வசதிகளையும் கொண்ட ஒரு விமான நிலையமாய் நேர்த்தியாக வடிவமைத்து முடியும் தருவாயில் இருக்கிறது அதன் கடைசிகட்ட வேலைகள். அழகான எல்லாவித வசதிகளையும் கொண்ட ஒரு கட்டிடமாய் விமான நிலையம் இருந்தால் மட்டும் போதுமா? அங்கே வேலை செய்வதற்கு சிங்கப்பூரிலிருந்தா ஆட்களை அனுப்பமுடியும்?
ஆம்! இமிக்ரேஷனில் இருப்பவர்கள் அனைவரும் ஒருமாதிரியாகத்தான் என்னைப் பார்த்தார்கள். வேறு ஏதாவது ஜாடை(!) என்மீது இருக்கிறதா எனவும் நான் கண்ணாடியில் பார்த்துவிட்டேன். அப்படியெல்லாம் ஒன்றும் தெரியவில்லை. வழக்கமான 'மூஞ்சியாக' த்தான் இருந்தது. நான் சென்ற இமிக்ரேஷன் கவுண்டரில் இருந்தவரும் அதை உண்மை என்றே நிரூபித்தார். மூஞ்சியை 'உராங் உடான்' போல வைத்திருந்தார் அவர். ( அவர் பெயரும் பணி எண்ணும் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றன.!)
விண்ணப்பப்படிவத்தில் ஹோட்டல் பெயரை ஒரு கட்டம் விட்டு எழுதவில்லை என்பதற்காக 16 கேள்விகள் கேட்டார். ' டிரான்ஸிட் பயணி' என்பதைச் சொல்லியும் முடிந்த அளவுக்கு கேவலப்படுத்திவிட்டுத்தான் என்னை வெளியில் விட்டார். போதாதற்கு சிங்கப்பூரில் நான் பணி்புரியும் 'வேலை உரிமைச் சீட்டைக்கூட' கேட்டு வாங்கிப்பார்த்தார். வெளியில் இருந்தவர்கள் ஏதோ எதிரி முகாமிலிருந்து நேரே புறப்பட்டு வந்தவனைப்போல என்னைப் பார்வையால் குடைந்துவிட்டார்கள்.
தமிழனின் அடையாள உணர்வோடு(!) வீரநடை போட்டு வெளியே வந்து ஹோட்டலுக்குச் செல்வதற்குள் 'நாக்கு' தள்ளிவிட்டது. பேசாமல் சென்னை சென்று அங்கிருந்தே திருச்சி சென்றிருக்கலாமோ எனவும் யோசித்தேன். டிக்கெட் விலையும் ரொம்பவெல்லாம் அப்போது வித்தியாசமில்லை. (சிங்கப்பூரிலிருந்து கொழும்பு வழியாக திருச்சிக்கு நேர்பயணம்!)
ஒரு பயணியை தகுந்த காரணங்கள் இன்றி இந்த அளவுக்கு அவமதிக்கும் அவரது செய்கை எனக்கு நியாயமாகப்படவில்லை. எனது பாஸ்போர்ட்டிலோ அல்லது வேறெதிலுமோ அவருக்குச் சந்தேகம் வந்து கேட்டிருந்தால் கூட அமைதியாக இருந்திருப்பேன். (தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் என பல முத்திரைகள் இருக்கின்றன அதில்! எங்கும் இத்தகைய அனுபவம் நேர்ந்ததில்லை!) அவர் பேசிய விதமும் எந்தளவிலும் சரியாக இல்லை.
'எந்தவொரு சுற்றுலாப் பயணியையும் இப்படி நடத்தாதீர்கள்' என்ற ஒரு வேண்டுகோளையும் வேதனையையும் மட்டும் 'பெட்டியில்' எழுதிப்போட்டுவிட்டு வந்து விட்டேன். இந்தியாவாயிருந்தால் 'Goடா Hair!' என்று அலட்சியமாக வந்திருப்பேன். இலங்கை, கொஞ்சம் முயன்றால் சிங்கப்பூரைப் போல அது என்ன, அதை விட செல்வம் கொழிக்க வாய்ப்பிருக்கும் நாடு என்று ஒரு மரியாதையோடு காலடி வைத்தேன்.
முதல் அனுபவம் இப்படி முடிந்ததில் மிகவும் வருத்தம். ஏற்கனவே மனதில் இருந்ததோ என்னவோ 'இவ்வளவு அடிப்படை வசதிகளையும் வாய்ப்புகளையும் கொண்டு இன்னும் முன்னேறாமல் அப்படியே நீங்கள் வைத்துக்கொண்டிருப்பதை விட இலங்கை முன்னேற வேண்டுமென்பதில் மிகவும் சிரத்தையும் ஆர்வமும் கொண்டிருக்கும் சக நாட்டவர்கள் 'யாரிடமாவது' விட்டுக்கொடுத்துவிடலாமே!' என என்னையும் அறியாமல் ஒரு எண்ணம் வந்து நின்றது. 'துரோகங்களுக்காகப் பழிவாங்குதலைத்' தவிர இத்தகைய காரியங்கள் எதையும் 'அவர்கள்' செய்யமாட்டார்கள் என்பதும் நாடு முன்னேறுவதில் நேர்மையாக உழைப்பார்கள் என்பதும் என் மனதில் மலர்ந்திருக்கும் இன்னொரு எண்ணம்.
பாவம்! சாரை சாரையாக, பாவப்பட்ட பெண்கள் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் வீட்டு வேலைக்குச் செல்வதைப்பார்த்தபோது இன்னும் கொஞ்சம் கோபம் வந்தது உண்மை! கையாளாகாத கோபம்! யார் மீது என்று தெரியவில்லை. தூங்கியும் தூங்காத கண்களோடு வாழ்க்கையின் அவல நிலைகளை வெளிச்சம் போட்டவாறு கையில் எளிய ஒரு பெட்டியோடு வாழ்க்கை தேடிச்செல்லும் அவர்களைப் பார்த்து கண்ணீர் வந்தது உண்மை!
ஆனால் ஒருமாதம் கழித்து அதே வழியில் திரும்பி வந்தபொழுது எனது கடவுச்சீட்டை சோதித்தவர் ஒரு பெண்மணி! 20 வினாடிக்குள் வேலையை முடித்து அனுப்பிவைத்தார், அவர் பெயரைப் பார்த்தேன் வசந்தா அல்லது வசந்தி! இலங்கைக்கு வாழ்வு தரும் வசந்திகள்! வாழ்க நீவிர்!!
எம்.கே.குமார்!
13 comments:
இப்போதான் அருண்கிட்ட, எல்லாருக்கும் கொழும்பு வழியா டிரான்ஸிட் கிடைக்கணும்னு சொல்லிட்டு இருந்தேன்.
என்னோட 1999 அனுபவம் உங்களுடையதை விட பயமானது(எனக்கு). இப்போதைய இணையசூழலில் இதையெல்லாம் பேசிப் பிரயொசனமில்லை. வெளிவந்து அடுத்தது என்ன என்று யோசிக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டாலும்
வலைப்பதிவுகளில் 'வயலுக்குள் போய் யாரையும் கூடவரவேண்டாம் என்று சொல்லி தனியாகப் போய் குளறினேன்' என்று போகிற போக்கில் அனுபவங்களைப் படிக்கும்போது வலிக்கிறது. தூக்கம் தொலைந்துபோகிறது.
-மதி
ரஜினி கதையெல்லாம் சும்மா மேடை ஜிகினா. எந்த நாட்டில் அண்ணன் தம்பிகள் வெட்டிக் கொள்ளவில்லை என்று நினைக்கிறீர்கள். அதெல்லாம் மன்னராட்சியில் சகஜம். சிறந்த உதாரணம் சொல்லவேண்டுமெனில், தாஜ்மகால் கட்டிய ஷாஜஹானேக் கூட பெற்ற மகனால் (ஒளரங்கசீப்) வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டு தாஜ்மகாலைப் பார்த்த படி இறந்தார். அவரின் பிற மகன்கள் (அவருக்கு 4 மகன்கள்) ஒளரங்கசீப்பால் கொல்லப்பட்டவர்கள். நிறைய குறுநிலமன்னர்கள் தமிழகத்தில் ஆட்சி கிடைக்காமலிருந்ததற்காக பகைவனோடு உறவாடி, சொந்த பந்தங்களை அழித்திருக்கிறார்கள்.கொஞ்சம் வந்தார்கள், வென்றார்கள் படித்தீர்களேயானால் முகலாய பேரரசுக்கு முன்பு இந்தியாவில் ஆண்டு வந்த லோடி, கில்ஜி வாரிசுகள் செய்ததெல்லாம் படித்தால், இதெல்லாம் ஜுஜூபி. இலங்கையின் இன்றைய நிலைமை வேறு. அது சொன்னால் புத்தகமாகி விடும் அபாயங்களுண்டு.
ரஜினி மாதிரி பொய்யான சாமியார் மனநிலைக்கு பயின்றவர்களால் அப்படித்தான் யோசிக்கமுடியும். அதுதான் அவர்களை சிரமப்படுத்தாது. போன ஜென்ம பாவம், சாபம் என்று ஏதாவது சொல்லி விட்டால் கோயிலுக்கு வெளியில் இருக்கும் பிச்சைக்காரனுக்கு ஏதாவது பழைய துணி, அல்லது கொஞ்சம் காசு பணத்தை தூக்கிப்போடுவதுபோல தூக்கிப்போட்டுவிட்டுப் போய்கொண்டே இருக்கலாம். இந்தச் சமாதானம் இல்லையென்ரால், இந்தப்பிரச்ச்னைகெல்லாம் காரணம் எதுவென்று யோசிக்கவேண்டும்; அது சமூக மாற்றத்தைக்கோரும்; அதெல்லாம் தனக்கே வேட்டுவைத்துக்கொள்வது மாதிரி.
வாரிசுப்போர்கள் எல்லாம் முகலாய சரித்திரத்தில் இல்லாததா? நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் இல்லையா தமிழ்நாட்டில்? மதுரை எத்தனை முறை எரிக்கப்பட்டிருக்கிறது சிலபேருக்கு மதுராந்தகன் என்ற பட்டப்பெயர் வருவதற்கு?
மனிதன் அடிப்படையில் எல்லா இடத்திலும், காலத்திலும் ஒரே மாதிரிதான்...
//சக நாட்டவர்கள் 'யாரிடமாவது' விட்டுக்கொடுத்துவிடலாமே!' என என்னையும் அறியாமல் ஒரு எண்ணம் வந்து நின்றது. 'துரோகங்களுக்காகப் பழிவாங்குதலைத்' தவிர இத்தகைய காரியங்கள் எதையும் 'அவர்கள்' செய்யமாட்டார்கள் என்பதும் நாடு முன்னேறுவதில் நேர்மையாக உழைப்பார்கள் என்பதும் என் மனதில் மலர்ந்திருக்கும் இன்னொரு எண்ணம்//
நல்ல பதிவு குமார்.
அன்பின் மதி, பின்னூட்டத்திற்கு நன்றி!
நம் மக்களில் பலருக்கு நடப்பதைப்போலவே உங்களுக்கும் எனக்கும் எங்கோ ஒரு 'ஒத்த அலைகள்' இருக்கின்றன என நினைக்கிறேன்.
சுஜாதாவிடம் ஒருமுறை அவரது நாவல் ஒன்று பற்றி நீங்கள் அரட்டையில் கேட்டுக்கொண்டிருந்தபொழுது (பெண்களைப் பற்றியது! பிரசவத்தில் குழந்தை பெற்றுவிட்டு தாய் இறந்துபோவாள், அந்த குட்டிப்பெண்ணும் வளர்ந்து பெரிதாகி அதே பிரசவத்தின் போது இறந்துபோவாள்! மங்கையர் மலரில் எழுதியது என நினைக்கிறேன்.) அப்புத்தகத்தை நான் படித்துக்கொண்டிருந்தது உங்களுக்குத் தெரியாது! எனக்கு ஆச்சரியம்!
இப்போ டிரான்ஸிட்!
எம்.கே.
நரைன்,பின்னூட்டத்திற்கு நன்றி. வந்தார்கள் வென்றார்கள் படித்திருக்கிறேன். நீங்கள் சொன்ன எல்லா கதையும் சரிதான். வரிசையாக ஆயிரம் பேர் பத்தாயிரம் பேரை நிற்கவைத்து வெட்டிக்கொலை செய்த காரியங்களெல்லாம் நடந்திருக்கிறது. ஆனால் எப்போதாவது நீண்ட ஆட்சிகள் நடந்திருக்கின்றன. அவற்றால் எந்தப்பயனும் இல்லாவிட்டாலும் ஒரே அரசர் நீண்ட நாள் ஆட்சி புரிந்திருக்கிறார். இலங்கையில் அம்மாதிரி நடந்தது அதிசயம் என நினைக்கிறேன். ஒரு முறை மட்டும் ஒருவர் இருந்தார் என படித்த ஞாபகம். எல்லா அரசர்களின் பெயரையும் அவர்களின் முடிவையும் குறிப்பு எடுத்து ஒரு டைரியில் வைத்திருந்தேன். கிடைத்தால் போடுகிறேன்!
தங்கமணி, பின்னூட்டத்திற்கு நன்றி.
முகலாய அரசர்களுக்கு பதவி ஆசை(மட்டுமில்லை. எந்த ஆசையானாலும் சரி. ஏன் பதவி கோபம் வந்தாலும் சரி!) வந்துவிட்டால் போதும்! இஸ்லாமாவது! மனிதத்தன்மையாவது! மிகவும் மோசமானவர்களாகி விடுவார்கள்! என்பது வரலாற்றில் நாம் காணும் நிஜம். ஆனால் இலங்கையில் முஸ்லீம்களின் ஆட்சி இல்லை.(என நினனக்கிறேன்!) புத்தரை வழிப்பட்டவர்களிடையே இப்படி நடந்தது எனக்கு ஆச்சரியம்.
அதுசரி. 'ஆசை' என்று வந்துவிட்டபின் புத்தராவது, ஏசாவது, அல்லாவாவது, மனிதத்தன்மையாவது என்கிறீர்களா? அதுவும் சரிதான்!
ஆனால் உங்களது ரஜினியின் கருத்தில் எனக்கு மாற்றுக்கருத்து உள்ளது.
ரஜினியின் மனநிலை பொய்யான சாமியார்தனம் கொண்டது என்பதில் எனக்கு உடன்பாடில்லை.
ஒரு அளவுக்கு மேல் வளர்ந்துவிட்ட மனிதனுக்கு அவன் எவ்வளவுதான் எளிமையான வழியில் போக நினைத்தாலும் படக்கென்று உடனே போகமுடியாது! எல்லோரும் புத்தரில்லை. புத்தர்கூட நிறையதடவை யோசித்தார்.
இது நவீனகாலம். இன்றைக்கு ரஜினிக்கும் இதுதான் நடந்தது. இருவழிகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் அவரால் திடமாக ஒரு முடிவு எடுக்கமுடியவில்லை. தளபதி, மனைவி, மகள்கள், மக்கள், ரசிகர்கள், அரசியல்வாதிகள் என ஏகப்பட்ட புறக்காரணிகள் அவரை மீண்டும் மீண்டும் சேற்றில் போட்டு உழட்ட முனைகின்றன!
இக்குழப்பத்தால் தான் பாவம் 'பாபா' கூட ஓடவில்லை! ஆனால் ரஜினியின் ஆத்மவாழ்வு நிஜ சாமியார்தனம் கொண்டதாய்த்தான் இருக்கவேண்டும்!
எம்.கே.குமார்!
நரைன்,பின்னூட்டத்திற்கு நன்றி. வந்தார்கள் வென்றார்கள் படித்திருக்கிறேன். நீங்கள் சொன்ன எல்லா கதையும் சரிதான். வரிசையாக ஆயிரம் பேர் பத்தாயிரம் பேரை நிற்கவைத்து வெட்டிக்கொலை செய்த காரியங்களெல்லாம் நடந்திருக்கிறது. ஆனால் எப்போதாவது நீண்ட ஆட்சிகள் நடந்திருக்கின்றன. அவற்றால் எந்தப்பயனும் இல்லாவிட்டாலும் ஒரே அரசர் நீண்ட நாள் ஆட்சி புரிந்திருக்கிறார். இலங்கையில் அம்மாதிரி நடந்தது அதிசயம் என நினைக்கிறேன். ஒரு முறை மட்டும் ஒருவர் இருந்தார் என படித்த ஞாபகம். எல்லா அரசர்களின் பெயரையும் அவர்களின் முடிவையும் குறிப்பு எடுத்து ஒரு டைரியில் வைத்திருந்தேன். கிடைத்தால் போடுகிறேன்!
தங்கமணி, பின்னூட்டத்திற்கு நன்றி.
முகலாய அரசர்களுக்கு பதவி ஆசை(மட்டுமில்லை. எந்த ஆசையானாலும் சரி. ஏன் பதவி கோபம் வந்தாலும் சரி!) வந்துவிட்டால் போதும்! இஸ்லாமாவது! மனிதத்தன்மையாவது! மிகவும் மோசமானவர்களாகி விடுவார்கள்! என்பது வரலாற்றில் நாம் காணும் நிஜம். ஆனால் இலங்கையில் முஸ்லீம்களின் ஆட்சி இல்லை.(என நினனக்கிறேன்!) புத்தரை வழிப்பட்டவர்களிடையே இப்படி நடந்தது எனக்கு ஆச்சரியம்.
அதுசரி. 'ஆசை' என்று வந்துவிட்டபின் புத்தராவது, ஏசாவது, அல்லாவாவது, மனிதத்தன்மையாவது என்கிறீர்களா? அதுவும் சரிதான்!
ஆனால் உங்களது ரஜினியின் கருத்தில் எனக்கு மாற்றுக்கருத்து உள்ளது.
ரஜினியின் மனநிலை பொய்யான சாமியார்தனம் கொண்டது என்பதில் எனக்கு உடன்பாடில்லை.
ஒரு அளவுக்கு மேல் வளர்ந்துவிட்ட மனிதனுக்கு அவன் எவ்வளவுதான் எளிமையான வழியில் போக நினைத்தாலும் படக்கென்று உடனே போகமுடியாது! எல்லோரும் புத்தரில்லை. புத்தர்கூட நிறையதடவை யோசித்தார்.
இது நவீனகாலம். இன்றைக்கு ரஜினிக்கும் இதுதான் நடந்தது. இருவழிகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் அவரால் திடமாக ஒரு முடிவு எடுக்கமுடியவில்லை. தளபதி, மனைவி, மகள்கள், மக்கள், ரசிகர்கள், அரசியல்வாதிகள் என ஏகப்பட்ட புறக்காரணிகள் அவரை மீண்டும் மீண்டும் சேற்றில் போட்டு உழட்ட முனைகின்றன!
இக்குழப்பத்தால் தான் பாவம் 'பாபா' கூட ஓடவில்லை! ஆனால் ரஜினியின் ஆத்மவாழ்வு நிஜ சாமியார்தனம் கொண்டதாய்த்தான் இருக்கவேண்டும்!
எம்.கே.குமார்!
அப்பா குமார்.இதே பாதையால் தான் இதுவரை நான்குதடவை போய்வந்திருக்கிறேன்.அங்கிருக்கும் சிங்களப் பணியாளர்கள் எல்லோருமென்றில்லை சிலர் இப்படித்தான் தமிழன் என்று வந்தாலே நேரடியாக கேட்பார்கள் போத்தல் ஒன்று வாங்கித் தரும்படி மறுத்தால் இழுத்தடிப்பார்கள்.அதிலும் பொதுவாக இந்தியத் தமிழர் என்று அடையாளம் கண்டால் போதும் அவ்வளவுதான்.ஒவ்வொருமுறையும் வாக்குவாதப்பட்டே கடந்து சென்றிருக்கிறேன்(எங்கள் மூஞ்சிகளைப் பார்த்து சிறிது பயப்படுவதால்)
மறுமொழிக்கு நன்றி ஈழநாதன், அல்வாசிட்டி சம்மி.
சம்மி, இதுக்காக இலங்கை போகாம போகாதீங்க! (அரசியல்லெ இதெல்லாம் சகஜம்.)
ஃபிளைட்ட விட்ட இறங்குன உடனே நம்மளை ரிசீவ் பண்ணுவாங்க பாருங்க ரெண்டு மூணு பொண்ணுங்க (வாட் அ பியூட்டி மேன்!) அவங்களுக்காகவும் நீர்கொழும்பு(நிகொம்பு) பீச்சில அப்படியே காலாற நடக்குறதுக்காகவாவதும் பொயிட்டு வாங்க!
எம்.கே.குமார்.
அன்புள்ள குமார்,
//ஃபிளைட்ட விட்ட இறங்குன உடனே நம்மளை ரிசீவ் பண்ணுவாங்க பாருங்க
ரெண்டு மூணு பொண்ணுங்க (வாட் அ பியூட்டி மேன்!) //
பத்திரம். ஜாக்கிரதையாகப் போங்க-)
அன்புடன்,
அக்கா
//ஃபிளைட்ட விட்ட இறங்குன உடனே நம்மளை ரிசீவ் பண்ணுவாங்க பாருங்க ரெண்டு மூணு பொண்ணுங்க (வாட் அ பியூட்டி மேன்!)//
யோவ் குமாரு, சீக்கிரம் கல்யாணம் பண்ணி தொலைய்யான்ன கேக்குறீங்களா? போற இடமெல்லாம் ஜொள்ளா விடுறீங்க. அதுல வேற
//நீர்கொழும்பு(நிகொம்பு) பீச்சில அப்படியே காலாற நடக்குறதுக்காகவாவதும் பொயிட்டு வாங்க!//
பீச்சு பூராவும் தண்ணியால நெனஞ்சி போய் கிடக்கும்... அதான்ம்பா உங்க ஜொள்ளு... காலாற எப்படி நடக்கிறது... போட் (Boat)ல தான் போகனும்.
மறுமொழிக்கு தாங்க்ஸ்க்கா. இதுக்காகத்தான் இப்போல்லாம் ரெண்டு கையையும் கட்டிண்டு போறேன். எல்லாத்துலேயும் ஒரு சேஃப்டி வேணும் பாருங்க! :-)
அல்வாசிட்டி மக்கா, கல்யாணம் பண்ணிக்கிட்டு காலாற நடக்க முடியுமாவே? அதெல்லாம் நடக்குற காரியமா? 'அதை' வேற 'கட்டி இழுத்துகிட்டு' போகணும்.
கொடுமையையும் சேத்து கோயிலுக்குக் கூட்டிட்டுப்போன மாதிரி, இதெல்லாம் தேவையா மக்கா! :-)
எம்.கே.
எம்.கே.குமார்,
"தமிழனின் அடையாள உணர்வோடு(!) வீரநடை போட்டு வெளியே வந்து ஹோட்டலுக்குச் செல்வதற்குள் 'நாக்கு' தள்ளிவிட்டது"
சரி நடந்தது நடந்துவிட்டது,,,
இலங்கையின் வரலாற்றுப் பக்கங்களில்.....இங்கிருந்து குதிரை விற்க போனவர்கள் (சேனன் & குத்திக்கன்) அரசாண்ட கதையும் உள்ளது.
அடுத்த முறை போகும்போது தமிழனின் உண்மையான அடையாள உணர்வோடு முயற்சித்துதான் பாருங்களேன்.
Post a Comment