Monday, September 19, 2005

இந்த வாரம் இவை!

இந்தவார ( நடுநிலைச்)செய்தி: தமிழகத்தில் மேலும் ஒரு அரசியல் கட்சி துவக்கப்பட்டது. ஏற்கனவே தேர்தல் வாரிய அங்கீகாரம் பெற்றதாய் பத்து கட்சிகளும் அங்கீகாரம் பெறாமல் 100 கட்சிகளுக்கும் மேல் இருக்கும் தமிழகத்தில், இன்று இன்னும் ஒரு புதுக்கட்சி துவக்கப்பட்டது. இதனை ரமணா, புலன்விசாரணை போன்ற படங்களில் நடித்த நடிகர் விஜயகாந்த் துவக்கியுள்ளார். (சன் டிவி செய்தி!)

இந்தவார கமெண்ட்:

அனாமிகா: "பீகார் தேர்தலுக்குப்பின் கட்சித்தலைவர் பதவியில் இருந்து விலகி புதியவர்களுக்கு வழிவிடுவேன்'னு அத்வாணீ சொல்லியிருக்கார் போல!"

சுனாமிகா: "நீ வேற, இப்படி சுத்தி வளச்சிச் சொல்லாம, பீகார் எலக்ஷன்லே தோத்ததுக்கு பொறுப்பு ஏத்து பதவி விலகுவேன்னு சுருக்கமா சொல்லியிருக்கலாம்"


இந்தவாரப்போராட்டம்: எவ்வளவு தைரியமும் ஆணாதிக்கமும் இருந்தால் எங்களைப் போய் இந்த சினிமா நடிகைகளோடு ஒப்பிட்டு பேசியிருப்பார் இந்த தங்கர்பச்சான்? என்று பாலியல்தொழிலாளர்கள் கொதிப்படைந்துள்ளனர். ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


இந்தவார ஆரூடம்: எம்ஜிஆரின் தீவிரத்தொண்டரும் அவரது மந்திரிசபையில் பணீயாற்றியவருமான பண்ருட்டி ராமச்சந்திரன், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தில் விரைவில் இணைவார். அவருடன் ஆயிரம் அதி.மு.க.வினரும் அதில் இணைவார்கள்.

'இந்தவார' நிருபர் அப்புசாமி!

4 comments:

குழலி / Kuzhali said...

உமக்கு நேரம் சரியில்லை அவ்வளவு தான் சொல்லமுடியும்

Anonymous said...

ஐயா எம்.கே

தேர்தல் வாரியமா இல்லை தேர்தல் ஆணையமா? குசும்பு தானே உமக்கு..

எம்.கே.குமார் said...

குழலி, சமீப காலமாய் சரியில்லைதான் போல! நேத்து குருப்பெயர்ச்சியாம்; எல்லோரும் நல்லா இருந்தாச் சரி.

நண்பர் காண்டிவிட்டி, தேர்தல் ஆணையம்தான்.

பின்னூட்டத்திற்கு நன்றி நண்பர்களே!

எம்.கே.

எம்.கே.குமார் said...

இந்த வார நிருபர் அப்புசாமிக்கு ஒரு ஷொட்டு!

பண்ருட்டி சேர்ந்துட்டார்!

http://dinamalar.com/2005sep21/tn23.asp

எம்.கே.

Search This Blog