Friday, July 28, 2006

கண்டேன் திரு.ஜெயமோகனை!

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் தனது முப்பதாம் ஆண்டு நிறைவு விழாவை நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக கொண்டாட இருக்கிறது.

சனிக்கிழமை மாலை 'சிங்கப்பூர் பாலிடெக்னிக்' வளாகத்தில் நடைபெறும் முத்தமிழ் விழாவில் மூன்று 'பெரும்புள்ளிகள்' கலந்துகொள்வதாய் ஏற்பாடு.

முதலாவதாய் சிங்கப்பூரின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரும் கல்வி அமைச்சர் மற்று உதவி நிதி அமைச்சரான திரு. தர்மன் ஷண்முக ரத்தினம்.

இரண்டாவதாய், எப்போதெல்லாம் தமிழ்த்தாய் தனது புதல்வர்களை இலக்கிய ரசனைக்குள் இழுத்துச்செல்ல விரும்புகிறாளோ அப்பொழுதுதெல்லாம் ஆட்கொள்ளுபவர்களில் ஒருவரான இலக்கியத்திலகம் திரு. ஜெயமோகன்.

மூன்றாவது, தமிழ்த்தாயின் செல்லக்குழந்தைகளில் ஒருவரும் இன்பப் பாட்டுகளுக்குச் சொந்தக்காரருமான தமிழினமுரசு கவிப்பேரரசு திரு. வைரமுத்து.

முத்தமிழ் சங்கமத்தைப் பார்த்துவிட்டு வந்து பிறகு இது தொடர்பாய் எழுதலாம் என இருக்கிறேன்.

ஆனால், வாழ்வில் மறக்கமுடியாத மாபெரும் நாவல்கள் படைத்த, நான் மிகவும் மதிக்கும் ஒரு நாவலாசிரியரை-கதைஞரைச் சந்திக்கும் ஒரு இனிய அனுபவம் நேற்று வாய்த்தது. இச்சந்திப்பு பற்றியும் இன்னபிற பின் தொடரும் நிகழ்வுகளின் தளம் பற்றியும் விரிவாக எழுத ஆசைப்படுகிறேன். பார்க்கலாம்.

Photobucket - Video and Image Hosting

7 comments:

-L-L-D-a-s-u said...

ஞாயிறன்று நடக்கும் நிகழ்ச்சியைப்பற்றி விபரம் தரமுடியுமா?

துளசி கோபால் said...

குமார்,

புகையற வாசனை வருதா? நானும் விழாவுலே கலந்துக்க அங்கே வர்றதுக்கு இருந்தேன். இவரோட சில பயணங்களாலே முடியாமப் போச்சு.

விரிவா எழுதுங்க. படிச்சுக்கறென்.
ஜெயமோகனோட வொர்க் ஷாப் போவீங்கதானே?

Mookku Sundar said...

வம்புகள் மூலம் பெருவாரியாக நான் அறிந்திருந்த ஜெ.மோவை விரிவாக வாசிக்கும் வாய்ப்பு, இந்தியாவில் இருந்தௌ கொண்டு வந்திருந்த புத்த்கங்கள் மூலம் வாய்த்தது.

நிஜமாகவே ரசமான, ரகளையான அனுபவம்.

எழுதுங்கள். காத்திருக்கிறேன்.

எம்.கே.குமார் said...

மறுமொழிக்கு நன்றி நண்பர்களே!

அன்பின் தாஸ், செராங்கூன் ரோட்டில் உள்ள உமறுப்புலவர் மண்டபத்தில் ஜெயமோகன் தலைமையில் சிறுகதைப்பட்டறை நடக்க உள்ளது.
கட்டணம் 10 வெள்ளி என்றபோதும் அதிகபட்ச கலந்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கையான 60, இருநாட்களுக்கு முன்னே பதிவாகிவிட்டதாக அறிகிறேன்.

இனிமேல் பதிவுசெய்ய இயலாது.

அன்பின் துளசி,
இன்று நடந்த முத்தமிழ் விழாவை நீங்கள் தவறவிட்டிருந்தால் ஒன்றும் குடிமுழுகியிருக்காது. ஜெயமோகனின் ஒருசில கருத்துகளைத்தவிர மத்ததனைத்தும் ம்ஹூம்!

வொர்க்ஷாப் கண்டிப்பா போறேன். முதலில் பெயர் கொடுத்தது ஜெயந்தி என்றால் இரண்டாம் ஆள் நானாம். பாத்துக்குங்க.

மூக்குசார், ரொம்ப நன்றி. எழுத்தில் வேறாகவும் நேரில் வேறாகவும் வாழும் எழுத்தாளர்களிடையே திரு.ஜெ.மோ ஆச்சர்யமாய் இரண்டிலும் ஒன்று.

ஹரன்பிரசன்னாவுக்கு,
உங்களது அன்பைச் சொல்கிறேன்.

எடுத்தவுடனே 'உங்களது பிளாக் படித்திருக்கிறேன் குமார்' என்று ஆரம்பித்த ஜெ.மோவுக்கு நிழல்களில் பின்னூட்டமிட்டது ஞாபகமிருக்காமலா இருக்கும் என நினைக்கிறீர்கள்? நிறைய ஞாபகம் இருக்கிறது.

அடைமொழி எழுதும்போதே எக்ஸ்ட்ரா பில்டப்புக்குன்னு அதை முடிவு பண்ணியாச்சு. கொடுக்காமல் இருந்தால் கழகக்கண்மனிகள் கவலைப்படலாம், அதனால்தான்.

நன்றி.
எம்.கே.

குழலி / Kuzhali said...

யோவ் கொமாரு, சிங்கப்பூர் முத்தமிழ் விழா எக்ஸ்ளூசிவில் பின்னூட்டமிடமுடியவில்லை, மிக அருமை, என்னால் நேரில் அந்த விழாவிற்கு வரமுடியவில்லையென்றாலும் இதை படித்தபோதே அங்கு வந்த நிறைவு

நன்றி

PKS said...

Dear Kumar,

Thanks for the coverage(s).

Regards, PK Sivakumar

எம்.கே.குமார் said...

கழகத்தோழர் அஞ்சா நெஞ்சன் குழலி அவர்களுக்கும் பி.கே.எஸ் அவர்களுக்கும் நன்றி.

Search This Blog