Sunday, June 26, 2005

ஏர் இந்தியா விமானச்சேவையும் சில எரிச்சல்களும்!

பி.கே.எஸ் சிவக்குமார் அண்மையில் இந்தியா வந்துவிட்டுச் சென்றபோது, ஏர் இந்தியா விமானத்தின் வாயிலாக மும்பையில் அவர் அனுபவித்த கொடுமைகளையும் வேதனைகளையும் ஒரு பதிவில் கூறியிருந்தார். அவருடன் வந்த அவரது நண்பர் ஒருவரின் கஷ்டத்தையும் அவரது எண்ணத்தையும் அதில் குறிப்பிட்டிருந்தார். ஏர் இந்தியா விமானச்சேவை எப்படியெல்லாம் இந்தியாவின் பெயரைக் கெடுக்கிறது; கேவலப்படுத்துகிறது என்பதை ஆங்காங்கு சில இணையத்தளங்களிலும் படிக்க நேர்ந்தது.

இப்போது நான் சொல்லப்போவது கடந்த வாரத்திற்கு முந்தைய வாரத்தில் ஒருநாள், இங்கு நடந்தது. நண்பர் ஒருவர் தனது தந்தையை வழியனுப்ப சிங்கப்பூரின் 'சாங்கி' விமானநிலையத்திற்கு அதிகாலையிலேயே கிளம்பிவிட்டார். சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு காலை 09.35க்கு கிளம்ப வேண்டிய ஏர் இந்தியா விமானம் அது. விமான நிலையத்திற்குச்சென்று விசாரித்தவுடன்தான் தெரிந்தது, ஏர் இந்தியா விமானம் தாமதமாக வரும் என்பது. அரைமணி நேரமா ஒரு மணி நேரமா? எவ்வளவு நேரம் தாமதம் என்று கேட்காதீர்கள்! காலை ஒன்பதரைக்குக் கிளம்ப வேண்டிய விமானம் இரவு 10.30க்கு கிளம்பும் என்று சொல்லப்பட்டது. தாமதம் எவ்வளவு மணி நேரம்? 13 மணி நேரம்.! உருப்படுமா இது?

அந்த 13 மணி நேரத்தில், சென்னைக்கு வருபவர் அங்கிருந்து கோயமுத்தூரிலோ மதுரையிலோ நடைபெறும் திருமணத்தில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் சிங்கப்பூருக்கே கூட போய் விடவேண்டிய அவசரம் இருக்கலாம். அல்லது ஏதேனும் அவசர, துயர காரியங்களாகக்கூட இருக்கலாம். வழியனுப்ப வந்தவர்களுக்கும் எவ்வளவு அலைச்சல் பாருங்கள்! சென்னையிலிருந்து 200கிலோமீட்டர் தொலைவிலிருந்து வந்து, வரவேற்க அல்லது கூட்டிச்செல்ல காத்திருப்பவர்களின் நிலை என்ன? இந்தியாவின் அரசு விமானத்தின் நிலையைப் பாருங்கள். இது ஏர் இந்தியாவிற்கு முதல் தடவையா என்றால் சத்தியமாய் அதெல்லாம் இல்லை!

ஏறக்குறைய பலதடவை இப்படித்தான் நடந்திருக்கிறது. இதோ நேற்று சென்னையில்! (தயாநிதிமாறன் தலையிட்டு விமானம் விரைவில் வர ஏற்பாடு செய்தாராமே!)
என்ன காரணம் என்று கேட்டால், ஏதோ மீன் கருவாடு ஆகும் கதையைப்போல இயந்திரக்கோளாறு, தொழிட்நுட்பக்கோளாறு என்று ஒற்றைவார்த்தையில் எளிதாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். அந்த ஒரே ஒரு வார்த்தையில் இருநூறு பேரின் உயிர்களும் அவர்களின் குடும்பங்களும் எவ்வாறு ஊசலாடுகின்றன என்பதை எப்போது அவர்கள் புரிந்துகொள்வார்கள்?

'இந்தியாவில், அன்பைக் காட்டுவதற்குக்கூட சுனாமி வரவேண்டும்' என்று யாரோ அண்மையில் சொன்னார்கள். கண்ணுக்கு எதிரில் இருக்கும் அலட்சியங்களையும் ஆபத்துகளையும் நாம் உணர்வதற்குக்கூட விபத்துகள் வரவேண்டும் போலிருக்கிறது! (அரசு சார்ந்த சேவையான) சிங்கப்பூர் ஏர்லைன்ஸையெல்லாம் பார்க்கும்போது பொறாமையும் பெருமூச்சும் தான் மிஞ்சுகிறது! என்னமோ போங்க!

எம்.கே.குமார்

24 comments:

Anonymous said...

I heard the AI flight was delayed by about 12 hours yesterday (25th June). Today (26th June) the flight was delayed for 2 and half hours (still not confirmed).

எம்.கே.குமார் said...

அனானிமஸ், மரியகுமாரன் பின்னூட்டங்களுக்கு நன்றி.

சன் டிவியில் இப்போது எல்லாமே பிஸ்னஸ். விரைவில் பாருங்கள், "னியூ கண்ணா னியூ, தினகரன்! புத்தம் புதுசு! மொத்தம் புதுசு" என்று விளம்பரம் வரும்!

அப்புறம் அந்த 10000வது பார்வையாளருக்கும்/ மொத்த பார்வையாளர்களுக்கும் எனது வணக்கங்கள், நன்றிகள்!

எம்.கே.குமார்

Anonymous said...

நானும்கூட படித்தேன். ஏர் இந்தியா விமானம் மிக மோசமாக செயல்படுவது பற்றி. இதற்கு தீர்வு என்பது மேல் மட்டத்தில் இருந்து வரவேண்டும்

ஏர் இண்டியா, இண்டியன் ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனங்களை பிராமனர்களிடம் கொடுத்துப் பாருங்கள் ஒரு பத்து வருடத்திற்கு. ஜெயாவின் தமிழகம் போல முன்னுக்குக் கொண்டு வந்துவிடுவோம் என்பதை பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161(for what is worth)
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

contivity said...

அன்புள்ள எம். கே. கே,

ஏர் இந்தியா விமான சேவை சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை என்றாலும் அதன் மறுபக்கத்தையும் அந்த நிறுவனத்துள் இருந்து பார்த்தவன் என்கிற முறையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது பரிதாபம் தான் ஏற்படுகிறது.. இந்தியா போன்ற மிகப்பெரும் துணைக்கண்டத்தின் கொடி தூக்கி (Flag Carrier) வெறும் 26 விமானங்களுடன் (குட்டி நாடான சிங்கப்பூரின் வான் போக்குவரத்து நிறுவனத்தில் 235 விமானங்கள் உள்ளன)பல அரசியல் நெருக்கடிகளுக்குள் (பிரதமர் அல்லது மத்திய அமைச்சர் வெளிநாட்டுப் பயணம்) தங்கள் பயணியரின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்ய முடியாது தான்.. இதில் நகைப்புற்குரிய செய்தி என்னவென்றால், AI மற்றும் IC இரண்டும் ஒன்றுக்கொன்று எதிராகப்போட்டியில் இறங்கி இரண்டு நிறுவனங்களும் மூன்றாம் ஒரு நிறுவனத்திடம் தன் சந்தையை இழந்து நிற்பது தான்.

இதற்கெல்லாம் தீர்வு, இரண்டு நிறுவனங்களையும் இணைத்து தனியாரிடம் ஒப்படைப்பது தான் என்பது என் எண்ணம்..

Anonymous said...

I travelled in other airlines as well and the "great singapore airlines " started after good 16 hrs after the scheduled departure and we were to fight for even hotel rooms . As some one said "s#$t happens " everywhere.. why blame AI alone?

முகமூடி said...

என் நண்பர்கள் பல பேர் கேட்டது:: எல்லா ஏர்லைன்ஸ்லையும் விமான பணியாளர்கள் இளமையாக இருக்கும்போது AIல் மட்டும் ஏன் ரிடையர் ஆகப்போகும் ஆட்களாக இருக்கிறார்கள்...

முகமூடி said...

மரிய குமாரன்... அது ஒரிஜினல் டோண்டு இல்லை... சந்தேகம் வரும்போது அவர் ப்ளாகில் சரிபார்க்கலாம்...

dondu(#11168674346665545885) said...

Your doubt is justified. The comment given under my name and referred to by you was not from me. Blogger number matches on account of anonymous comments being enabled in your blogs.

Kindly disable anonymous comments. This comment will be copied in my blog post created specifically for that purpose. See:

http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

The duplicate fellow does not seem to have anything better to do. If this trend continues, he is sure to lose his job, as blogging during working hours is frowned upon by employers.

Personally, my stand is that there are incompetent people in all the communities and Brahmins are no supermen.

Regards,
N.Raghavan
Blogger No. 4800161(for what is worth)

Anonymous said...

என்தான் சொன்னாலும் பிராமணன் பிராமணன்தான்
டோண்டூ

Anonymous said...

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNB20050626113931&Title=International+News&lTitle=Tu%5D%F4h%D3f+%F9Nn%A7Ls&Topic=0

dondu(#11168674346665545885) said...

குமார் அவர்களே,
இனிமேல் என் பின்னூட்டங்கள் என் புகைபடத்துடன் வரும். மற்றும் ப்ளாக்கர் எண்ணும் என் டிஸ்ப்ளே பெயரில் சேர்ந்தே வரும்.
போலி நபர் என் படம் மற்றும் ப்ளாக்கர் எண்ணை நகலெடுத்தாலும் அது புது ப்ளாக்கர் லிங்க்குடந்தான் வரும். எலிக்குட்டியை நகர்த்திப் பார்த்து கொள்ளலாம். எப்படியாயினும் என் பின்னூட்டங்கள் என் பிரத்தியேகப் பதிவிலும் நகலிடப்படும். பார்க்க:

http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

எம்.கே.குமார் said...

நண்பர் காண்டிவிட்டி அவர்களுக்கும் டோண்டு ராகவன் வகையறாக்களுக்கும் எனது நன்றிகள்.

காண்டிவிட்டி, எனதும் அதே கருத்துதான். இவர்களை(அரசியல்வாதிகளை) நம்பினால் எந்த உபயோகமும் இல்லை. ஐசி, ஏஐ இரண்டும் இனி சந்தையில் சரிவராத மாடாகிவிடும். தனியாருக்கு ஷேர்களை விற்று வழி பண்ணலாம்.

டோண்டு ஐயாவின் மேல் இந்த நகல் டோண்டுஅய்யாக்களுக்கு அப்படி என்ன ஆசை ஆர்வம் எனத்தெரியவில்லை. இனிமேலும் இப்படி 'டோன் டு' நகல்டோண்டு!

அனானிமஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் சேவை தொடர்பான பிரச்சனைகள் வருவது இந்த அளவிற்கு இல்லை. அதானல் ஏதோ ஒரிரு பிரச்சனையை வைத்து எதையும் தீர்மானமாய் நோக்காதீர்கள்.

இதோ நண்பர் அபு கொடுத்துள்ள தகவலின் படி இந்தியன் ஏர்லைன்ஸும் 15 மணி நேரம் தாமதமாம். உருப்படவா இது?

முகமூடி, இந்த ஆன்டிகளின் தொல்லை தாங்கமுடியவில்லை. ஏதாவது கேட்டால் என்ன என்று நீலாம்பரி மாதிரி நிமிர்ந்து பார்க்கும்போதே பாம்பைக் கண்ட அண்ணாமலை மாதிரி
அடங்கி ஒடுங்கி விட நேருகிறது.

பின்னூட்டத்திற்கும் தகவலுக்கும் நன்றி அபு.

எம்.கே.

மாயவரத்தான் said...

இந்தியன் மற்றும் ஏஇர் இந்திய விமானங்களின் பணிப்பெண்ணாக பணி புரிய கீழ்கண்ட தகுதிகள் கண்டிப்பாக இருக்க வேண்டுமாம்.

* கண்டிப்பாக 40+ ஆக இருக்க வேண்டும் வயது.

* அதிக பட்சம் எவ்வளவு கண்டிப்பு காட்ட முடியுமோ அவ்வளவு கண்டிப்பை முகத்தில் காட்ட வேண்டும்.

* 'வள் வள்' என்று எரிந்து விழத் தெரிய வேண்டும்.

* யாராவது எதாவது கேட்டால் கண்டிப்பாக அதை கொடுக்கக் கூடாது.

மாயவரத்தான் said...

//ஏர் இண்டியா, இண்டியன் ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனங்களை பிராமனர்களிடம் கொடுத்துப் பாருங்கள் ஒரு பத்து வருடத்திற்கு. ஜெயாவின் தமிழகம் போல முன்னுக்குக் கொண்டு வந்துவிடுவோம் என்பதை பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன்.//

இல்லை இல்லை... லாலு மாதிரியான (அல்லது ராப்ரி தேவி மாதிரியான) ஆட்களிடம் கொடுங்கள்... பத்தே நாட்களில் முன்னுக்கு கொண்டு வந்திவிடுவோம்!!! என்று பின்னூட்டம் வராதது ஆச்சரியம் தான்.

contivity said...

மாயவரத்தான்..

நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லி இருந்தாலும், ஏர் இந்தியா நிறுவனத்தில் பறக்கும் விமானப் பணியாளர் சங்கங்கள் மிகப் பலம் வாய்ந்தவை. பலமுறை நீதிமன்றங்களில் பல வழக்குகளில் இந்த சங்கங்களிடம் ஏர் இந்தியா தோற்றதால் ஏற்பட்ட விளைவுகள் தான் அந்தப் பணியாளர்களை யாரும் அசைக்க முடியாது என்ற எண்ணம் பரவக் காரணம் என நினைக்கிறேன்...
ஆனால் தற்போது இந்த நிலை மாறிவருவதாக அறிகிறேன்.

மற்றபடி நகைச்சுவைக்காக நாங்கள் சொல்வதுண்டு.. ஏர் இந்தியாவில் மட்டுமே பயணியர் தாய் அல்லது பாட்டியின் உபசரிப்பைப் பெறமுடியும் என்று..

நன்றி..

Anonymous said...

மாயவரத்தான், மற்றும் contivity அவர்களே,
உங்கள் கருத்துப்படி பணிப்பெண்கள் 40 வயதைத் தாண்டியதும் பணிநீக்கம் (fire) செய்யப்பட வேண்டுமா?

வீ. எம் said...

ஜெட் ஏர்வேஸ் மற்றும் இந்தியன் ஏர்வேஸ் இரண்டிலுன் பயனம் செய்துள்ளேன்.. அனைத்து விதத்திலும் ஜெட் ஏர்வேஸ் சேவை இந்தியன் ஏர்வேஸ் விட நன்றாக இருந்தது..

சேவை (service) என்பதற்கும் நம் அரசியல்/அரசாங்கம் என்பதும் இரு துருவங்கள் ஆச்சே !!

வீ எம்

contivity said...

மேலே பின்னூட்டமிட்ட அனானிமசுக்கு,

40 வயதிற்கு மேற்பட்ட பறக்கும் விமானப் பணியாளர்கள் அவர்கள் விரும்பினால் Ground Staff ஆகப் பணிபுரியலாம்.. இன்னும் பல சாத்தியங்கள் உள்ளன. உங்களுக்குத் தெரிந்த நண்பர் யாராவது வான் போக்குவரத்து நிறுவனத்தில் பணி புரிந்தால் கேளுங்கள்..

எம்.கே.குமார் said...

///மற்றபடி நகைச்சுவைக்காக நாங்கள் சொல்வதுண்டு.. ஏர் இந்தியாவில் மட்டுமே பயணியர் தாய் அல்லது பாட்டியின் உபசரிப்பைப் பெறமுடியும் என்று////

LOL..! கெளம்பிடாங்கய்யா..கெளம்ப்பிட்டாங்கய்யா!

பின்னூட்டத்திற்கு நன்றி மாயவரத்தான்.

எம்.கே.

எம்.கே.குமார் said...

நண்பர்கள் அனானிமஸுக்கும் வி.எம், மற்றும் காண்டிவிட்டிக்கும் எனது நன்றிகள்.

எம்.கே.குமார்.

எம்.கே.குமார் said...

மாயவரத்தாரே, என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. சந்திரமுகி ஓடியதற்கு ரஜினியே கூட தான் காரணமில்லை என்று சொல்கிறாராம். தாங்கள் என்னைச்சொல்வது ஏனென்று தெரியவில்லை.

உங்களது ஒண்ணாம் நம்பருக்கும் வாழ்த்துகள்.(எவங்கூப்புடுறான்? எல்லாரும் சப்பாணி சப்பாணின்னுதான் கூப்புடுறாய்ங்கெ'ன்னு கோபாலகிருஷ்ணன் சொல்றதுமாதிரி சொல்லிக்கிட்டே இருக்கீங்க.)

அதெல்லாம் இருக்கட்டும், கடந்தவாரம் மும்பையில இருந்து நியூயார்க் கிளம்பின ஏர் இந்தியா விமானத்தில் கோலாறாகி கல்கத்தாவுக்கு உடனே திருப்புனாங்களாமே, அந்த (நீண்ட தூர) விமானத்திலெல்லாம் கோளாறு வரலாமா? அப்படியா வெச்சிக்கிறது? என்ன சொல்றீங்க நீங்க?

எம்.கே.

Anonymous said...

Air India is far better than Gulf Air (operating by Governments of Abudhabi, oman and bahrian)

Anonymous said...

adhu ennanga british airwaysle tamil arivipu varudhu. singapore airlinesle tamil arivippu. (malaysian kuda endru ninaikiren- sariyaga nyabagamillai. )airindiale mattum baath baath baath dhaan.

british airways madras segment il tamil, telugu, malayalam, hindi arindha hostess podranga. airindia ????

அட்சயா said...

13 hrs delay is nothing as i have waited for more than 26 hrs in singapore. When we were asked to stay in a Hotel arranged by the AI, i have seen a group of people who were waiting from the previous day. The reason : The landing gear is not working and can't able to move the flight. It was my first trip from singapore to chennai after worked here for two years and everybody was waiting for me in chennai. It is difficult explain the feelings i had on that 24 hrs. Anyway safe arrival later atleast. Arun

Search This Blog