Saturday, January 26, 2013

கமல்ஹாசன் சிக்கிய அரசியல்


எம்எல்ஏ ஜவாஹிருல்லா, எழுத்தாளர் ஆளூர் ஷாநவாஸ் உட்பட்ட 21 இஸ்லாம் அமைப்புகள் இணைந்து விஸ்வரூபம் படத்தைத் தடை செய்துவிட்டனர் என்று நானும் நீங்களும் நம்பினால் அதுதான் தமிழ்நாட்டு அரசியல்.

  1. ஒன்றைப்புரிந்துகொள்ளுங்கள். 21 அமைப்புகள் அல்ல, 21000 அமைப்புகள் வந்தாலும் அத்தனையையும் புறந்தள்ளிவிட்டு தான் நினைத்ததைச் செய்யும் அதிகார ஆணவம் கொண்டவர் ஜெயலலிதா. மறக்கும் வியாதி கொண்ட தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள். அரசாங்க பணியாட்கள் அத்தனை பேரையும் ஒரேநாளில் தூக்குவார். உலகமே எதிர்த்தாலும் நூலகத்தை மருத்துவமனையாக்குவார். மருத்துவமனைக்கு சட்டமன்றத்தைப் போடுவார். அப்படிப்பட்டவர், முஸ்லீம்கள் திரண்டு வந்து புகார் அளித்ததும் பொங்கிவிட்டார் என்பது முழுக்க முழுக்க முட்டாள்தனம் நிரம்பிய அவதானிப்பு.

  1. முஸ்லீம்கள் அவருக்கு எப்போதும் நண்பர்களாய் இருந்ததேயில்லை. கலைஞர் கூட குல்லாய் போட்டு நோன்புக்கஞ்சி குடிப்பார். ஜெயலலிதா ம்ஹூம். மோடிக்கு நண்பராய் இருந்துகொண்டு முஸ்லீமிற்கு கைதூக்க அவர் அவ்வளவு நல்லவரல்ல. ஆனால் இந்த விஷயத்தில் ஏன் பொங்கினார், முஸ்லீம்களுக்காகவா? 2014ல் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. முஸ்லீம்கள் தேவைப்படுகிறார்கள்.

  1. கமல்ஹாசனின் மீது ஜெயலலிதாவிற்கு எப்போதுமே பிரியம் இருந்ததில்லை. தன் சக கலைஞன் என்ற பார்வையிருந்தும் கூட, தான் அதே சினிமா இனம் என்று தெரிந்திருந்தும்கூட! கமல்ஹாசன் கலைஞரின் தமிழ் மீது பிரியம் கொண்டவர், அதனால் கமல் ஜெயலலிதாவிற்கு உள்ளூரப்பகையாகிப்போனவர்.

  1. ’மாமனை அடிக்க முடியாதவர்கள் மச்சானை அடிப்பார்கள்’ என்பார்கள். படத்தைத் தணிக்கை செய்யும் சென்சார் போர்டு மத்திய அரசின் கீழ் வருவது. ஏற்கனவே மத்திய அரசை எல்லாவிதத்திலும் தொடர்ந்து புறங்காட்டி அவமதிக்கிறார். டீசல் விலையை உயர்த்தியதற்காக மத்திய அரசின் மீது மாநில அரசு வழக்குத் தொடரப்போவது தனிக்கதை. இதில், இப்படி மத்திய அரசுக்குட்பட்ட ஒரு சென்சார்போர்டு அமைப்புக்கெதிரே, அதாவது மத்திய அரசு அனுமதித்தபிறகும் தன்னால் தடுக்கமுடியும் என்ற கர்வம்.. அதுதான் இது.

  1. விஸ்வரூபத்தை தணிக்கை செய்த குழுவில் இருந்த முகமதிய அதிகாரி, முகமது அலி ஜின்னா, சென்ற தேர்தலில் தி.மு.கவின் சட்டமன்ற வேட்பாளர். தி.மு.க காரர். ஆக, தி.மு.கவுக்கும் ஒரு ஆப்பு வைத்தாகிவிட்டது. முஸ்லீம்களுக்கெதிராய் ஒரு முஸ்லீமே இருந்தார் என்று அறியப்படுத்தி, இனி முஸ்லீம்கள் இவருக்கு ஓட்டுப்போடுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?

  1. ஜெயலலிதாவிற்கு ஆகவே ஆகாதவர் ப.சிதம்பரம். அப்படிப்பட்ட ப.சிதம்பரத்தின் புத்தக விழா அண்மையில் நடைபெற்றது. முக்கிய விருந்தினர்களாக கலந்துகொண்டவர்கள் கலைஞர், கமல்ஹசன், ரஜினி. அதிலும் கமல் பேசுகையில் ’வேட்டி கட்டிய தமிழர் பிரதமராக வேண்டும்’* என்று முத்தாய்ப்பு வைக்க, பிறகு பேசிய கலைஞரோ வேட்டி கட்டிய தமிழரே பிரதமர் என்று சொல்லி சேலை கட்டிய தமிழர் பிரதமர் கனவில் இருப்பதற்கு பதில் சொல்லிவிட்டீர்கள் என்று சொல்லி ஜெயலலிதாவுக்கு வைத்த ஆப்பு  விஸ்வருபத்துக்கு வந்து நிற்கிறது.

  1. ஜெயா டிவிக்கு விற்கப்பட்ட விஸ்வருபத்தின் தொலைக்காட்சி உரிமை, அதிக விலையின் காரணமாக சன்டிவிக்கு மாறியதாயும் சொல்கிறார்கள். சன் டிடிஎச் ஒளிபரப்பு செய்ய அனுமதியும் வாங்கி இருந்தது.

  1. விஸ்வருபத்தின் சேலம் ஏரியா பகுதி உரிமையை உதயநிதிஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் வாங்கியிருந்தது. உதயநிதி தயாரித்தார் என்பதற்காகவே நீர்ப்பறவை படத்திற்கான வரிவிலக்கை எந்திவித முகாந்திரமும் இல்லாமல் தரமறுத்த அம்மையார், இப்படி ஒரே கல்லில் ஒன்பது ஸ்தானத்தையும் அடிக்க முடியும் என்றால் சும்மா விடுவாரா?

  1. சென்ற தேர்தலில் கமல்ஹாசனுக்கு 200கோடி தருதாக ஆசைகாட்டி, அவரை அதிமுக பக்கம் இழுப்பதற்கு முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாய் அத்தனைப் புலனாய்வு ஏடுகளும் சொன்னது. அப்போதைக்கு எஸ்கேப் ஆன கமல்ஹாசன் இப்போது மாட்டிக்கொண்டார்.

  1. விஸ்வரூபம் படம் வெளீயிட்ட மலேஷியா, NC 16 தணிக்கை அளித்து அனுமதியளித்திருந்த சிங்கப்பூர் நாடுகளும், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களும் படத்தை, முஸ்லீகளின் போராட்டத்தாலோ எதிர்ப்பாலோ நிறுத்தவில்லை. உற்பத்தி இடமான தமிழ்நாட்டிலேயே ஒரு சரக்கை தடைசெய்தபின் இறக்குமதி செய்வது ஆபத்தாகலாம் என்பதால் தான். இது, ஜெயலலிதா தெரிந்தே ஒரு கலைஞனுக்கு, பால்ய நண்பனுக்கு, தனது சொந்த விருப்பு வெறுப்பின் மூலம்  செய்த மிகப்பெரிய துரோகம்.

- இத்தகைய தசாவதார வியூகத்தில் மாட்டிக்கொண்ட கமல், இனி என்ன செய்யப்போகிறார்?

 எல்லாக் கதவுகளும் ஒரு சேர அடைபட்ட கமல்ஹாசன் ஒரு சினிமாப்பைத்தியம். சினிமாவை விட்டு அவரால் வெளிவரவே முடியாது. இத்தகைய சூழ்நிலையில் இனி, இரண்டு வழிகள் இருக்கின்றன, அவருக்கு.

ஒன்று அதிமுக வில் சேரலாம். ராதாரவியைப்போல, ராமராஜனைப்போல, குண்டு கல்யணத்தைப்போல... மேடையேறலாம். பல கோடிகள் கிடைக்கும். அல்லது விஸ்வரூபமே 200 கோடிக்கு ஜெயா டிவியால் வாங்கப்படும். பிரச்சனை எல்லாம் தீரும். கனவுப்படங்களை எடுக்கலாம்.

இரண்டாம் வழி, வா வா என்று இழுக்கப்பட்டும் ஒளிந்துகொண்டிருக்கின்ற ரஜினியை விலக்கி/இணைத்து, இத்தகைய அதிகார, கலாச்சார தீவிரவாதித்திற்கெதிரே, முதல்வன் படத்தில் அர்ஜூன் பொங்கும் காட்சியைப்போல (ஒரு சூழ்நிலையில் இப்போது இருப்பதால்) தீவிர அரசியலில் இறங்கலாம். ஆடு மாடு வழங்கிவிட்டு, முக்கியப்பிரச்சனைகளில் ஒளிந்துகொள்ளும் விஜயைவிட, தலைவனுக்கேற்ற தகைசால் குணம் சிறிதுமில்லாத விஜயகாந்தைவிட, வருமான வரி நேர்மையும் இடறுகளுக்கெதிரே கலங்காது நிற்கும் தைரியமும் இன்றைய இளைஞர்கள் தேடிக்கொண்டிருக்கும் நாட்டுப்பற்று கொண்ட ஒரு தலைவனும் நமக்குக் கிடைக்கலாம்.

எம்.கே.குமார்.

14 comments:

Arun Ambie said...

ரஜினி அரசியலுக்கு வந்து தகைசால் தலைவனாக இளைஞர்களுக்கு வழிகாட்டுவார் என்பது போன்ற அதீதக் கற்பனைகள் தவிர சில அலசல்கள் அருமை....

தமிழ்நாட்டில் சில எழுத்தாளர்களுக்கு ’நடிகர்களின் நற்றலைமை ஏற்கும்’ ஜுரம் விடுவதே இல்லை.

முகநூலில் இதைப் பகிர்ந்துள்ளேன்.

8h8dnwrs4t said...

முகமதிய என்று சொல்வது தவறு. முஸ்லிம் என்று சொல்ல வேண்டும்.

Rafeeq Ahmed

Unknown said...

Ungalin blog-ai mudhan muraiyaga padikinren.. neengal kooriyapadi enadhu FB status-ilum 2nd naal munnare Jayalalithavin velaigal dhan idhu ellam endru pottu irukiren..
Anaal ennal ondru mattum purindhu kolla mudiyavilla.. idhil enna karanathirkaga Vijay-ya olindhu kolkirar endr koorukirigal.. Tamil eelam pirachanai sila nadigargal amadhiya irundha pozhudhu kooda avargaluaga kural koduthar,.. Ippozhudhu kooda TOI patthirikai il.. Vishwarropma thodarbaga viravil kalandhu pesi mudiveduka vendum endru than virupathai therivithirundhar... Arambam mudhal indru varai kamal udan nanbargalaga irukum Rajini kuda arikai dhan vittar. Nadikirom sanbadhikirom en vazhkaya nan parthukozhkiren endru mattum illamal.. evvalavo ezhaigaluku neengal kooriyadhu pola aadu, maadu vazangudhal,, Ilavasa computer centers, helping more than 200 students for studies.. ipdi thannal eyandra nalladhai seyyum oru tamizhani paratta vittalum .. dhavaseidhu vimarsanam seyyadhir.. Enadhu panivana vendukol..

Anonymous said...

Really really upset with this law n order crap..... Kamal sir we are with you.

Cheers Jee said...

Thuppakki padathirkkaga sirithum mookkai nulaikkatha arasu ithil pongi elumbothe nan ninaithathuthaan.. Indraiya vaazhvil ore unmai thaan. Ellavatrikum pinnal Arasiyalin kai irukkum...

jayaram said...

Mr. Kumar.. just now i happened to see ur article about the ban on viswaroopam. one thing you totally forgot is dat.. this is the film which generate the terrorism frm a tender child... dont u knw how bad to say a group is terrorist even they also living together as brother n sister in the same country. above all dont say dat politics... this is really very sad . being a lady it is easy to blame bt being a chief minister of the state she is having more responsible then any other. as everyone thinks she is behind all these happenings. wen the real truth comes to light then u hv to feel for the complaints ...

priyamudanprabu said...

Good one ...is it wrote by u !?
Or from VIKATAN ?!

எம்.கே.குமார் said...

எனக்கு வந்த சில பிந்தைய தகவல்கள்..

ஜெயலலிதாவும் நோன்புக்கஞ்சி சாப்பிட்டுருக்கிறார்.. சில புகைபப்டங்கள் உள்ளன.

விஸ்வரூபம் - விஜய் டிவிக்கு விற்கப்பட்டுள்ளது.

எம்.கே.குமார்

Jyothisharatna Raman said...

Sankara madam padum pattil intha kalathur oru sundaikkai engal Makathukku. Makathukku ethirthan illai. Makathan Jgathsaathakan !

Unknown said...

Nalla Azhasal...

Sara said...

Lets assume a different version- a relatively wing office was really irked by the rising aggression of the radical groups in the state.The office carries the legacy of being forceful against the minorities in the previous terms.Taking offense of those groups via law and order would result in them taking the cover of the faith. They were waiting for an opportunity to expose them.They decided to use the film issue to really bring radical ideologies to the forefront of the public so that they are allowed to deal with these groups with an iron first if they trouble them again.The office declares to the world that law and order would in chaos if these radical groups go on a rampage. The sad part is that the radical groups might have got some 'cuts' in the film but they would not get any sympathy in the future even they turn out to be genuine - Brilliant!

Mr. P.Krishnakumar Assistant Professor said...

Very nice U r great...

Cuddalore Ghouse said...

சகோதரர் கமல் தனி மனிதராய் செய்யும் காரியங்களில் குறுக்கிட
யாருக்குமே உரிமை இல்லை.

ஆனால், சீரிய சிந்தனையின்றி இவர் தனது நாவால்,
திருமணமில்லா சல்லாபவாழ்வுபற்றியும் மற்றும்
கொடூரமாய் வன்புணர்ந்தோர்க்கு மிகஎளிமையாய் தண்டணையளிப்பதுபற்றியும்
சொற்களை சிதரவிட்டுவிட்டார்.

இவர் அறிவித்த அருவருக்கத்தக்க இவ்விரு அறிவிப்புகள்
இன, மத பேதமின்றி ஒட்டுமொத்த சமுதாய மக்களின் மனதை பெரிதும் நெருடிவிட்டதை
இன்றுவரை இவர் உணர்ந்ததாகவே தெரியவில்லை.

செய்துவிட்ட தவறை உணர்ந்துங்கூட வருந்தாத மனிதர்க்கு…
தான் செய்திராத தப்புக்கு எங்கிருந்தோ தண்டனை வந்து குவிந்துவிடும்.

“ஆணவம்” தலையெழுத்தையே மாற்றிவிடும்.

இவரின் தான்தோன்றித்தனமான மமதையே இவருக்கு எதிரி!

‘விஸ்வரூபம்’ படம் தந்திருக்கும் பாடத்தை
இறுதியாக்கிக்கொள்ள இவர் தனது இயல்பை
சரி செய்துக்கொள்ளத்தான் வேண்டும்.

-கடலூர் ஜங்க்ஷன் முகம்மது கவுஸ

Unknown said...

kamal hasan 1st avarodal suya lobathukaga ena venalum seivar enabathu ipa purinchu pochu...DTH ku theatres association and cable operators filma kuduka venam nu soliyum avaroda profit kaga kuduthar DTH la release pana mudiyathunu sonathala ipa bulti adikrar...100crore money potu film yedutha kamal ivalo thimira pesina 6crore people vote pana CM ku yevalo irukanum...kamala congress karan kuda sernthutu arasiyal pana AMMA vum arasiyal pana tha seiyum...Yetho kamal nalavan valavan hero polavum Government villain polavum pesureenga..ponga pa...

Search This Blog